காடுகளில் உலவும் 'பேபி ட்ராகன்': பறவையா? மர்ம மிருகமா?

The Great Eared Nightjar
Baby Dragon
Published on

ம் இந்திய நாட்டிலுள்ள பறவைகள் பலவிதம். அவற்றுள், தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசிக்கும் பெரிய காதுகளையுடைய நைட்ஜார் (The Great Eared Nightjar) வகைப் பறவைகளில் ஒரு பிரிவு 'பேபி ட்ராகன்' என அழைக்கப்படுகிறது. இவை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

இது இரவில் நடமாடும் பறவை. நைட்ஜார் வகைப் பறவைகளில் இது மிகப்பெரிய உருவம் கொண்டது. இதன் நீளம் 31 முதல் 41 செ.மீ. இருக்கும். இதன் நீளமான காதுகளில் முடிக்கற்றை போன்ற அமைப்பு, தொண்டையை சுற்றிய வெள்ளை நிற உரோமப் பட்டை மற்றும் தனித்துவம் நிறைந்த தோற்றம், நிறம், உரு மறைக்கும் செயலுக்கு ஏற்ற பிரவுன், பிளாக் மற்றும் கிரே கலர் கொண்ட இறகுகள் ஆகியவை இப்பறவையை ஒரு பறவை என்று கூற முடியாதபடி செய்து விடுகிறது. ஆகவே, இதை ஒரு சிறிய ட்ராகன் என்ற பொருளில் 'பேபி ட்ராகன்' என்று அழைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்த மீன் இனம்தான் மனித தோற்றத்திற்குக் காரணம்! அது என்ன தெரியுமா?
The Great Eared Nightjar

பகற்பொழுதுகளில் இதைப் பார்ப்பது அரிது. ஏனெனில் தான் வாழும் சூழலுக்கு ஏற்றபடி தனது உருவை மாற்றி அமைத்துக்கொள்ளும் இயல்புடையது பேபி ட்ராகன். இந்தியாவிலுள்ள மலைப்பகுதி சார்ந்த தாழ் நிலங்களிலுள்ள காடுகள், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, மலேஷியா, மியான்மர், தாய்லாந்து, வியட்னாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இது வாழ்கிறது.

கணிக்க முடியாத குணம் கொண்டு ரகசிய வாழ்க்கை நடத்திவரும் பேபி ட்ராகன், காடுகளில் உதிர்ந்து கிடக்கும் காய்ந்த சருகுகள் மற்றும் குச்சிகள் போல உருமாறி, பகலில் எவர் கண்களிலும் படாமல் மறைந்துகொள்ளும். மரத்தில் கூடு கட்டி முட்டையிடும் பழக்கம் இதற்கில்லாததால், அவ்விடத்தின் தரையில் அல்லது சருகுகளுக்குள் ஒரே ஒரு முட்டையிட்டு, முட்டையையும் பொரித்த குஞ்சையும், தேவைக்கேற்ப தான் உருமாறி பாதுகாக்கும். பெற்றோர் இருவரும் பொறுப்பேற்று குஞ்சு பறக்கக் கற்றுக்கொள்ளும்வரை உடன் இருப்பதுண்டு.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய இந்தியப் பறவைகள்!
The Great Eared Nightjar

வாழ்வாதாரம் குறைந்து கொண்டிருக்கும் காலத்திலும் இந்த கிரேட் இயர்டு நைட்ஜாரின் எண்ணிக்கையில் குறைவில்லாத காரணத்தினால் IUCN (International Union For Conservation of Nature) அமைப்பினர் மற்றும் நிபுணர்கள் இவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர்.

இதனிடமுள்ள மற்றொரு தனித்துவமான பழக்கம், தினமும் அதிகாலை வேளையிலும் அந்தி நேரத்திலும், கூர்மையான கரகரப்பான குரலில் ‘ப்ப்பா – ஆஆஆ’ என பெருங்குரலெடுத்துக் கத்துவது பேய் கூச்சல்போல காடு முழுவதும் எதிரொலிக்கும். இதற்கு நேர்மாறாக, வெளிச்சம் மறைந்து அமைதியான இருள் கவ்வும் நேரங்களில் இனிமையான குரலெடுத்து மென்மையாகப் பாடவும் செய்யும். சிரின்க்ஸ் (Syrinx) எனப்படும் இதன் குரல் உறுப்பு இனிமையாகப் பாடவும், பேய் கூச்சல் போடவும் என இரண்டு விதமாகவும் செயல்புரியப் பழகிக் கொண்டிருப்பது அதிசயத்திலும் அதிசயம். கடூரமான குரல் வளம் செய்தியைப் பரப்பவும், மெல்லிசையானது துணையைக் கவரவும் கையாளப்படுவதாகத் தெரிகிறது.

இந்த கிரேட் இயர்டு நைட்ஜார், ட்ராகன் போன்ற தோற்றம், உரு மாறக்கூடிய புத்திசாலித்தனம், வியப்பூட்டும் இசையில் குரலெடுத்துப் பாடும் பண்பு ஆகிய அனைத்தும் கொண்டு, கட்டுப்பாடற்ற வனப்பகுதிகளானவை மேலும் பல மர்மங்களை தங்களுக்குள் அடக்கி வைத்திருப்பதை நிரூபிக்கும் வகையில் வாழ்ந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com