இரவில் மின்னும் காடுகளும் கடற்கரைகளும்: இந்தியாவில் ஒளிரும் 7 இடங்கள்!

இந்தியாவில் இரவில் இயற்கையாக ஒளிரும் 7 இடங்கள் எவை? மேற்குத் தொடர்ச்சி மலை காடுகள் மற்றும் கடற்கரைகளில் ஒளிரும் அதிசயங்களின் முழு விவரம்.
ஒளிரும் 7 இடங்கள் | bioluminescent places in India
ஒளிரும் 7 இடங்கள் | bioluminescent places in IndiaImage credit: Gemini AI
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

மேற்குத் தொடர்ச்சிப் பகுதிகளில் அடர்த்தியான காடுகள் நிறைந்துள்ளன. அவை இரவில் ஒளிவீசுகிற்றன. இதை bioluminescent என்று கூறுவார்கள்‌ மழையின் தாக்கத்தால் மரங்களில் ஒருவித பூஞ்சை உருவாகுகிறது‌ இவற்றிலிருந்து ஒளி உருவாக்குகிறது. லூசிஃபெனின் என்ற பொருள் வெளிச்சத்தை உருவாக்குகிறது. இப்பதிவில் இரவில் நன்கு ஒளிரும் 7 இடங்கள் குறித்துக் காண்போம்.

1. பீமசங்கர் சரணாலயம், மகாராஷ்டிரா:

மரங்கள் அதிக அளவில் நிறைந்த காட்டுப் பகுதியாக இது கருதப்படுகிறது‌. மேற்குத் தொடர்ச்சி யின் வடபகுதியில் இது உள்ளது‌. மழையினால் பூஞ்சை ஏற்படுகிறது‌. இந்தக் காட்டில் இரவு நேரத்தில் இந்த பூஞ்சையானது பளபளக்கும் பச்சை நிறத்தில் ஒளிர்கின்றது‌. ஜுலையிலிருந்து செப்டம்பர் வரை இந்த பச்சை ஒளியைக் காணலாம்‌. நன்கு இருட்டிய பிறகு இந்த ஒளியைக் காணமுடியும்.

2. சோர்வாக காட், கர்நாடகா:

மேற்குத் தொடர்ச்சியில் மிகவும் ஈரம் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது‌. இங்குள்ள மரக்கட்டைகளில் பூஞ்சை பரவ ஏற்ற இடமாக உள்ளன. இந்த பூஞ்சை இரவில் ஒளியைத் தரக்கூடியதாக திகழ்கிறது. இயற்கைப் பிரியர்கள் இதைக் காண ஆவலோடு வருகிறார்கள்‌. ஜுலையிலிருந்து செப்டம்பர் வரை ஒளிவீசும் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

3. அகும்பே, கர்நாடகா:

இதை தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் அழைக்கிறார்கள். இது மழைக்காடுகள் நினறைந்ததாக திகழ்கிறது‌. இந்த காடுகளில் நாகப் பாம்புகள் அதிகம் காணப்படும். மழை அதிகமாகப் பெய்வதால் ஒளிதரக்கூடிய பூஞ்சைகள் அதிகம் மரங்களில் தங்கி இரவில் வெளிச்சத்தைத் தருகிறது.. ஜுனிலிருந்து செப்டம்பர் வரை இந்த ஒளியை நன்கு கண்டு ரசிக்கலாம்.

ஒளிரும் 7 இடங்கள் | bioluminescent places in India
ஒளிரும் 7 இடங்கள் | bioluminescent places in IndiaImage credit: Gemini AI

4. சைலன்ட் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, கேரளா:

இந்தியாவின் முக்கிய மழைக்காடுகள் ஆக விளங்கும். இது எப்போதும் குளிர்ச்சியாகவும் மற்றும் மழைக் காரணமாக பூஞ்சைகள் அதிகம் காணப்படுவதால் இங்கும் இரவில் ஒளி ஊட்டிக் கூடிய பூஞ்சைகளால் ஒளிமயமாக இரவில் திகழ்கிறது‌. மேலும் மரங்கள் அடர்ந்த பகுதியாக இருப்பதால் இரவில் ஒளி வீசுகிறது‌. மழைக்காலத்தில் சென்றால் இந்த ஒளியைக் கண்டு ரசிக்கலாம்‌.

இதையும் படியுங்கள்:
6 ஆண்டுகளில் 3 முறை... 2 தலையுடன் பிறந்த அரிய ஆமை!
ஒளிரும் 7 இடங்கள் | bioluminescent places in India

5. பங்காரம் தீவு, லக்ஷதீப்:

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ஒளியைக் கொண்டு கடற்கரைப் பிரதேசமாக இது கருதப்படுகிறது. இதற்குக் காரணம் இந்தக் கடலில் காணப்படும் ப்ளாங்டன் என்ற கடல் பாசியே காரணம் என்று தெரிகிறது.

கடல் அலைகள் இந்தப் பாசியோடு மோதும்போது அடர்த்தியான நீல நிறத்தில் கடல் ஒளிவீசுவது காண மிக அழகாக இருக்கும்.

இந்த அழகைக் காண அக்டோபர் முதல் மார்ச் வரை நல்ல நேரம். அப்போதுதான் கடல்பாசி அதிக அளவில் காணப்படும்.

6. மட்டு கடற்கரை, கர்நாடகா:

இந்த கடற்கரை உடுப்பி அருகே உள்ளது‌. இந்தக் கடலிலும் கடல்பாசிகளால் கடல் அலைகள் அவற்றை மோதும் போது கண்ணைப் பறிக்கும் நீல நிறத்தில் கடற்கரை ஒளிர்வதைக் காணமுடியும். இந்தக் காட்சியை செப்டம்பர் முதல் டிசம்பர் வரை காணலாம்.

7. கோவாவின் கடற்கரைகள்:

சூரியன் மறையும் வேளை காண மிக அழகாக இருக்கும். பெடால்பாடிம், கோல்வா போன்ற கடற்கரையில் இருக்கும் ஒளியூட்டக்கூடிய கடல்பாசி கடல் அலைகள் இவற்றை மோதும்போது பளபளப்பான நீலநிற ஒளியைக் கண்டு ரசிக்கலாம்‌. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இதைக் காணலாம்.

இதையும் படியுங்கள்:
பகலில் தூங்கி இரவில் விழிக்கும் விசித்திர தாவரங்கள்!
ஒளிரும் 7 இடங்கள் | bioluminescent places in India

காடுகள் மற்றும் கடற்கரையில் இரவில் ஒளிர்வதற்கு காரணங்கள் வெவ்வேறாக இருக்கின்றன. காடுகளில் ஒளிக்கு பூஞ்சை காரணமாகிறது‌.

கடற்கரையில் கடல்பாசி நீலநிற ஒளிக்கும் காரணமாகிறது. இந்தப் பூஞ்சைகளால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இந்த பூஞ்சைகள் இல்லாவிட்டால் காடுகளில் உயிரற்ற ஆர்கானிக் பொருட்கள் அதிகமாகி மற்ற மரங்களை பாதிக்கும்‌. இயற்கையின் அதிசயங்களை மேற்கூறிய இடங்களில் சென்று கண்டு களியுங்கள்.

இயற்கையின் இந்த அபூர்வ ஒளிரும் காட்சிகளை நேரில் கண்டு ரசிப்பதன் மூலம் உங்கள் பயண அனுபவம் புதிய பரிமாணத்தைப் பெறுவதுடன், இந்தியாவின் இயற்கை அதிசயங்கள் குறித்த ஆச்சரியமான உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com