

வானுக்கும், கடலுக்கும் மட்டும் அல்ல நீல நிறம்; வாழைப் பழத்துக்கும் கூட தான் உண்டு நீல நிறம்! ஏழை பங்காளனான வாழை பழங்களில் பல வகை உண்டு என்பதை நாம் அறிவோம். நம் நாட்டில் விளையக்கூடிய வாழை பழங்கள் பலதரப்பட்டவை. வாழை பழங்களில் மஞ்சள் வாழை மற்றும் சிவப்பு நிற செவ்வாழை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நீல வாழைப்பழங்களை பற்றி கேள்வி பட்டுள்ளீரா?
ப்ளூ ஜாவா பனானா(Blue java banana) என்று அழைக்கப்படும் இந்த வகை வாழைப்பழங்கள் இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் மட்டுமே இவ்வகை நீல வாழை விளைகிறது.
இந்த வகை வாழை பழத்திற்கு மற்ற வகை வாழை பழங்களுக்கு இல்லாத தனி சுவையும் ஐஸ்கிரீம் போன்ற மென்மையான சதை பிடிப்பும் உள்ளது. இதை ஐஸ்கிரீம் வாழை என்று இந்நாட்டவர்கள் அழைக்கிறார்கள்.
வாயில் வைத்தால் அப்படியே கரையும் தன்மை உடையதாம் இந்த நீல வாழைப்பழம். இந்த பழத்தில் அதிகமாக பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் உள்ளதாக கூறுகிறார்கள். இதை சாப்பிடும் பொது வனிலா ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் இருப்பதால் குழந்தைகள் இவைகளை மிகவும் விரும்புகிறார்கள். பழம் என்றாலே விலகி ஓடும் சிறுவர்கள் கூட இந்த ப்ளூ பனானாவை கேட்டு வாங்கி உள்ளே தள்ளுகிறார்கள். இந்தியாவில் இவ்வகை வாழை பழங்களை அதிகமாக இறக்குமதி செய்வதில்லை.
மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் மட்டும் அதுவும் பணக்காரர்கள் வந்து போகும் பகுதிகளில் உள்ள கடைகளில் மட்டுமே இவ்வகை வாழைப்பழங்கள் கிடைப்பதாக கூறுகிறார்கள். தேடி பார்த்தும் ப்ளூ பனானா சென்னையில் கிடைக்கவில்லை.
உலகத்தில் வாழைப்பழ உற்பத்தியில் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அப்படி இருக்கையில் இந்த வகை நீல வாழை பழத்தை இங்கு யாரும் பயிரிட முன் வராதது ஆச்சர்யமாக இருக்கிறது.