வீட்டுக்கு அழகு சேர்க்கும் போன்சாய் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு!

Bonsai tree
Bonsai tree

இன்று, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் பலருக்கும் மர வளர்ப்பில் ஆர்வமிருந்தாலும், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் சிறு மனக் குறைபாடுகளுடன்தான் இருந்து வருகின்றனர். இவர்களின் மனக்குறையைப் போக்கி, மரம் வளர்க்கும் விருப்பத்தினைச் செயல்படுத்திட போன்சாய் எனும் மரம் வளர்ப்பு முறை உதவுகிறது.

வீடுகளுக்கு அழகு சேர்க்கும் இந்த போன்சாய் வளர்ப்பு முறை பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றியது. போன்சாய் என்னும் குட்டைச் செடிகளின் வளர்ப்புக் கலை இன்று உலகமெங்கும் பரவலாகி விட்டது. ஜப்பானிய மொழியில் “போன்” என்றால் “ஆழமற்ற தட்டுகள்” என்றும், “சாய்” என்றால் “செடிகள்” என்றும் தமிழில் பொருள் கொள்ளலாம். தமிழில் இக்கலையைத் "தட்டத் தோட்டம்" (Bonsai) என்கின்றனர்.

மேலை நாடுகளில் அழகுக்காக வளர்க்கப்பட்டு வந்த போன்சாய் மரங்கள், நம் நாட்டிலும் சில அலுவலகங்களில் அழகுக்காக வாங்கி வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது வீடுகளிலும் போன்சாய் மரம் வளர்ப்பும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வீட்டு வரவேற்பு அறையில் அழகிய பூக்கும் மரங்கள், பூசை அறையில் ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்கள் போன்றவை போன்சாய் மரங்களாக வளர்க்கப்பட்டு வருகின்றன. போன்சாய் மர வளர்ப்பில் ஆர்வமுடைய சிலர் தங்கள் வீட்டு மாடிகளில் பல்வேறு வகையான போன்சாய் மரங்களை வளர்த்து வருகின்றனர். போன்சாய் மரங்களை வளர்த்து அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்வதைத் தொழிலாகச் செய்பவர்களும் இருக்கின்றனர்.

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளர விடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் இந்த முறையிலான போன்சாய் மரங்கள் வளர்ப்பு ஒரு கலையாக வளரத் தொடங்கியிருக்கிறது. போன்சாய் மரங்கள் வளர்ப்பது குறித்தும், அதைப் பராமரிப்பது குறித்தும் பல்வேறு தகவல்களைக் கொண்டு ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது.

இந்த இணையதளத்தில் போன்சாய் தோற்றம் (Origin of Bonsai), அடிப்படைகள் (The Basics), இனங்கள் வழிகாட்டிகள் (Species Guides), காட்சியகம் (Gallery) வலைப்பூ (Blog), மன்றம் (Forum) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

போன்சாய் தோற்றம் எனும் தலைப்பின் கீழ் வரையறை மற்றும் பொருள் (Definition and Meaning), வரலாறு (History), பாங்குகள் (Styles), விளக்கப்படம் (Infographic), ஜப்பானில் போன்சாய் (Bonsai in Japan), தொடர்புடைய கலைகள் (Related Arts), போன்சாய் குழுக்கள் (Bonsai Clubs), போன்சாய் கலைஞர்கள் (Bonsai Artists) எனும் துணைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலம் போன்சாய் தோற்றம் மற்றும் அதனுடைய தொடர்புடைய சில தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

அடிப்படைகள் எனும் தலைப்பின் கீழ் போன்சாய் பராமரிப்பு (Bonsai Care), மரம் பயிரிடல் (Tree Cultivation), போன்சாய் பாணி (Bonsai Styling), விருத்தி (Progressions) எனும் துணைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு துணைத் தலைப்பின் கீழ், பல உள் தலைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இத்தலைப்புகளின் வழியாகப் போன்சாய் வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கு உதவும் அடிப்படைத் தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

இதையும் படியுங்கள்:
விவசாய மானியங்களை பெற உதவும் 'உழவன்' செயலி!
Bonsai tree

இனங்கள் வழிகாட்டிகள் எனும் தலைப்பின் கீழ் என் மரம் அடையாளம் காணல் (I.D. My Tree), மரம் தேர்வு செய்தல் (Selecting a Tree), பொதுவான மர இனங்கள் (Common Tree Species) எனும் துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றின் கீழ், உள் தலைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் போன்சாய் மரங்கள் வளர்ப்பிற்கு ஏற்ற இனங்களைத் தேர்வு செய்து கொள்ள முடிகிறது.

காட்சியகம் எனும் தலைப்பின் கீழ் போன்சாய் (Bonsai), சோகின் (Shohin), பென்சிங் (Penjing), காட்சிகள் மற்றும் காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் (Shows and Exhibitions) எனும் துணைத்தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் எனும் துணைத்தலைப்பின் கீழ் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற கண்காட்சிகள் வருடங்கள் வாரியாகப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் போன்சாய் மரங்களின் அழகிய படங்களையும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற கண்காட்சிகளில் இடம் பெற்ற போன்சாய் மரங்களின் அழகுக் காட்சிகளையும் காண முடிகிறது.

மன்றம் எனும் தலைப்பில் போன்சாய் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த அனுபவச் செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. போன்சாய் வளர்ப்பு குறித்தும், அதன் பராமரிப்பு குறித்தும் முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவும்.

இத்தளத்திற்குச் செல்ல http://www.bonsaiempire.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com