தண்ணிக்குள்ளேயே மீன்கள் மூச்சுத் திணறி இறக்குமா? சயின்டிஸ்ட் சொல்லும் இந்த ஷாக்கிங் உண்மையை படிங்க!

Dead Fish
Dead Fish
Published on

பொதுவாக தண்ணீரைக் கண்டாலே மனிதர்களாகிய நமக்கு கொஞ்சம் பயம் இருக்கும். ஆனால் மீன்களுக்கு அதுதான் உலகம், அவை தண்ணீரில் ராஜா மாதிரி வலம் வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த தண்ணீருக்குள்ளேயே மீன்களால் மூழ்கி இறக்க முடியும் என்று யாராவது சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. 

சற்று ஆச்சரியமாக இருந்தாலும், அதுதான் நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம். மீன்கள் தண்ணீரில் எப்படி மூழ்கும், அவற்றுக்கு நீச்சல் தெரியாதா என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். ஆனால் நிஜத்தில் அவை மூழ்கி இறப்பதில்லை, மூச்சுத் திணறல் ஏற்பட்டு தவிக்கின்றன. இதை பற்றி கொஞ்சம் தெளிவாகப் பார்க்கலாம் வாங்க.

மீன்கள் எப்படி சுவாசிக்கின்றன?

நம்ம ஊர் குளங்களிலோ அல்லது வீடுகளில் உள்ள அக்வேரியங்களிலோ மீன்கள் துள்ளி குதிப்பதை ரசித்துப் பார்த்திருப்போம். மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம். ஆனால் நமக்கு இருப்பது போல அவற்றிற்கு நுரையீரல்கள் கிடையாது. அதற்கு பதிலாக கில்ஸ் எனப்படும் செவுள்கள் உள்ளன. 

மீன்கள் தண்ணீரைத் தொடர்ந்து வாயால் குடித்து இந்த கில்ஸ் வழியாக வெளியேற்றும். அப்படி வெளியேற்றும் போது தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனை அந்த கில்ஸ் உறிஞ்சிக் கொண்டு, கார்பன் டை ஆக்ஸைடை வெளியே தள்ளும். ஒருவேளை தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தாலோ அல்லது கில்ஸ் பாதிக்கப்பட்டாலோ, மீன்களுக்கு உடனடியாக மூச்சுத் திணறல் ஆரம்பித்துவிடும்.

தண்ணீரில் எப்படி திடீரென்று ஆக்ஸிஜன் குறையும் என்று நீங்கள் சிந்திக்கலாம். தொழிற்சாலைக் கழிவுகள், விவசாய உரங்கள் கலப்பது, அதிகப்படியான பாசிகள் மற்றும் அசுத்தமான நீர் ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக பாசிகள் செத்து அழுகும் போது தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை மிக அதிக அளவில் உறிஞ்சிவிடும். 

அதுமட்டுமில்லாமல் குளிர்ந்த நீரை விட சூடான நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைவாகவே இருக்கும். இதனால் கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது பல ஏரிகளில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஒரே நேரத்தில் செத்து மிதப்பதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். இந்த மோசமான நிலைமையைத்தான் விஞ்ஞானிகள் ஹைபோக்ஸியா என்று சொல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தண்ணீரில் எரியும் அடுப்பு... இது கற்பனை அல்ல, நிஜம்! இதோ புதிய தொழில்நுட்பம்!
Dead Fish

தண்ணீரில் ஆக்ஸிஜன் சரியாக இருந்தாலும் சில நேரங்களில் மீன்கள் இறந்து போகும். மீன்பிடி வலைகளில் சிக்கும் போதோ அல்லது தூண்டிலில் அடிபடும் போதோ அவற்றின் செவுள்கள் மிக எளிதாக சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. செவுள்கள் கிழிந்துவிட்டால் அவற்றால் ஆக்ஸிஜனை பிரித்தெடுக்க முடியாது. 

அதே போல சுறா, சூரை போன்ற சில குறிப்பிட்ட வகை மீன்கள் எப்போதும் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் அவற்றின் கில்ஸ் வழியாக வேகமாகச் சென்று ஆக்ஸிஜன் கிடைக்கும். எதிர்பாராத விதமாக வலைகளில் சிக்கி நகர முடியாமல் போனால், சுற்றிலும் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் மூச்சு முட்டி அந்த மீன்கள் பரிதாபமாக இறந்துவிடும்.

எனவே மீன்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கின்றன என்று சொல்வதை விட, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு முட்டி சாகின்றன என்று சொல்வதுதான் மிகச் சரியான அறிவியல் உண்மை. மனிதர்களுக்கு தண்ணீர் உள்ளே போனால் எப்படி மூச்சுத் திணறல் வருமோ, அதேபோலத்தான் மீன்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால் நடக்கும். 

இதையும் படியுங்கள்:
இந்தோனேசியாவின் விசித்திர 'தவளை மீன்கள்' - மிரள வைக்கும் ரகசியங்கள்!
Dead Fish

ஏரிகளிலும் நதிகளிலும் மீன்கள் செத்து மிதப்பது வெறும் ஒரு சாதாரண நிகழ்வு கிடையாது. அது நமது சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஒரு மிகப்பெரிய அபாய எச்சரிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com