இந்தோனேசியாவின் விசித்திர 'தவளை மீன்கள்' - மிரள வைக்கும் ரகசியங்கள்!

The strange 'frog fish'
The strange 'frog fish'
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ந்தோனேசியா குறிப்பாக லெம்பே ஜலசந்தி (Lembeh Strait), அம்போன் மற்றும் பாலி, டைவர்ஸ்களுக்குப் புகழ்பெற்ற தவளை மீன் (Frog fish) வாழிடமாகும். சைகடெலிக் தவளை மீன், ஜெயண்ட் தவளை மீன், வார்டி தவளை மீன் மற்றும் ஹேரி தவளை மீன் போன்ற அரிய வகைகள் இங்கே அதிகம் காணப்படுகின்றன. இவை பவளப்பாறைகள், மணல் பரப்பு மற்றும் பாசிகளுக்கு நடவே பெரும்பாலும் அசையாமல் பாறைகள் போல் உருமாறி(camouflage) வாழும் திறன் கொண்டவை.

சைகடெலிக் தவளை மீன் (Psychedelic Frog fish):

அம்போன் பகுதியில் காணப்படும் இவை அதன் கைரேகை போன்ற வெள்ளை-இளஞ்சிவப்பு கோடுகளுக்காகவும், மஞ்சள்-பழுப்பு நிறத்திற்காகவும் மிகவும் பிரபலமானது. பவளப் பாறைகளுக்கு இடையே மறைந்திருந்து, நீந்துவதற்கு பதிலாக தன் துடுப்புகளைப் பயன்படுத்தி தத்திச் சென்று சிறிய மீன்களை வேட்டையாடும் இவை, தன்னுடைய குஞ்சுகளை உடலுடன் சேர்த்து பாதுகாக்கும் குணம் கொண்டது.

ஜெயண்ட் தவளை மீன் (Giant Frogfish):

லெம்பே ஜலசந்தி, கோமோடோ மற்றும் பாலி தீவின் Nusa Penida  மற்றும் Tulamben போன்ற இடங்களில் மஞ்சள், வெள்ளை, பழுப்பு போன்ற பல்வேறு நிறங்களில் மாறி பவளப்பாறைகள் மற்றும் மணல் பகுதிகளில் காணப்படுகிறது. இவை கடற்பாசிகளுக்கு இடையில் மறைந்திருந்து இரையைத் தேடும் திறன் கொண்டவை. இவை 30 செ.மீ‌.(12 அங்குலம்) வரை வளரக்கூடியவை.

இதையும் படியுங்கள்:
நீல நிறத்தில் ஏன் விலங்குகள் இல்லை... அறிவியல் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
The strange 'frog fish'

ஹேரி தவளை மீன் (Hairy Frogfish):

பாலியின் செராயா ரகசியங்கள் (Seraya Secrets) மற்றும் லெம்பேவில், பாசிகளுக்கு நடுவே உருமறைப்பு செய்ய விரும்பும் இந்த வகை காணப்படுகிறது. இவை ஒரு தனித்துவமான மறைந்து வேட்டையாடும் உயிரினமாகும். இவை தோல் அமைப்பில் உள்ள முடி போன்ற ஸ்பைன்களால் சூழப்பட்டு பவளப்பாறைகளில் மறைந்து வாழ்கின்றன. ஹேரி என்று அழைக்கப்பட்டாலும் அவை முடியல்ல; தோலில் உள்ள ஒழுங்கற்ற தோல் ஸ்பைன்களாகும். இவை தங்கள் உடலை சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவை. தன் உடலளவு பெரிய இரையைக் கூட சட்டென்று விழுங்கிவிடும்.

வார்டி தவளை மீன் (Warty Frogfish):

துலாம்பென் மற்றும் வடக்கு சுலவேசி போன்ற இடங்களில் டைவ் செய்யும்போது இதைக் காணலாம். வார்டி  தவளை மீன்களின் தலையின் பக்கவாட்டில், முதுகு துடுப்பின் மேல் மற்றும் வால் துடுப்பின் அடிப்பகுதி போன்ற இடங்களில் சிவப்பு திட்டுகள் காணப்படும். 11 சென்டிமீட்டர் வரை வளரும் ஒரு சிறிய இனமான இவை சிறிய இறால் அல்லது மீனைப்போல தோற்றமளிக்கின்றது.

டைவர்ஸ்களுக்கான முக்கிய இடங்கள்:

லெம்பே ஜலசந்தி:

'மேக்ரோ டைவிங்' தலைநகரம் என்று அழைக்கப்படும் லெம்பே ஜலசந்தி பலவகையான தவளை மீன்களைக்காண சிறந்த இடமாகும். 

அம்போன்:

அரிதான சைகடெலிக் தவளை மீன்களை காணும் வாய்ப்புகள் இங்கு அதிகம். 

பாலி: 

செராயா சீக்ரெட்ஸ், பூரி ஜாதி மற்றும் சீக்ரெட் பே. 

இதையும் படியுங்கள்:
டைனோசர் இனத்தை அழித்த அந்த விண்கல் விழுந்த இடத்தை பாருங்கள்!
The strange 'frog fish'

தவளை மீன்களின் சிறப்பு அம்சங்கள்: 

சிறந்த உருமாற்றம் (Camouflage):

இவை தங்களை சுற்றியுள்ள பவளப்பாறைகள், கடல் பாசிகள், மணல் பாங்கான பகுதிகள் அல்லது பாசைகளின் நிறத்திற்கு ஏற்ப தங்களை மாற்றி, மறைத்துக் கொண்டு, பார்ப்பதற்கு அந்த சூழலின் ஒரு பகுதியாகவே தோற்றமளித்து இரையை ஏமாற்றி வேட்டையாடுகின்றன.

சில தவளை மீன்கள் கால்பந்து அளவு வரை வளரக் கூடியவை.

மீன்பிடி திறன்:

தலையில் எஸ்கா எனப்படும் தூண்டில் போன்ற அமைப்பைப் பயன்படுத்தி இவைகள் மீன்களை கவர்கின்றன. தங்கள் தலையில் உள்ள தடி போன்ற அமைப்பை மீன்பிடி தூண்டில் போலப் பயன்படுத்தி, சிறிய மீன்களை ஈர்த்து கண்ணிமைக்கும் நேரத்தில் விழுங்கி விடுகின்றன. இந்த விசித்திரமான மீன்களை பார்ப்பதற்காகவே இந்தோனேசியா பிரத்தியேக பயணங்களை ஏற்பாடு செய்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com