கல்லில் இருந்து காகிதம்... இந்த பேப்பர் ஊறாது, கிழியாது... என்னாது? கலக்கும் சீனா!

Stone paper invention
Stone paper invention
Published on

காகிதங்களை நாம் படிக்கவும் எழுதவும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். அது உருவாகும் பின்னணியை அறிந்தால், எவ்வாறு சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். பாரம்பரியமாக மரத்திலிருந்து காகிதங்களை தயாரிப்பதை சீனர்கள் தான் கண்டறிந்தனர். நவீன முறையில் 1 டன் காகிதங்களை தயாரிக்க 24 மரங்கள் வரை வெட்டப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு உலகம் முழுவதும் 400 கோடி மரங்கள் காகிதங்கள் தயாரிக்க பலி கொடுக்கப்படுகின்றன.

இது மட்டுமல்லாமல் ஒரு A4 அளவு காகிதம் தயாரிக்க சுமார் 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சராசரியாக 1 டன் சாதாரண காகிதங்கள் தயாரிக்க, குறைந்த பட்சம் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் காகிதத்தின் தரத்திற்கேற்ப 60 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் செலவிடப்படுகிறது. காகிதம் தயாரிக்க சுற்றுச்சுழலை எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறோம் என்பது இப்போது புரிந்திருக்கும்.

சீனா தற்போது சுற்றுச்சுழலை பெருமளவிற்கு அச்சுறுத்தாத வகையில் புதிய காகித தயாரிப்பை கண்டுபிடித்துள்ளது. மரக்கூழ் மற்றும் தண்ணீர் இதற்கு தேவைப்படாததால் உலகின் வளங்கள் பாதுகாக்கப்படும். மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் காகிதங்களை வெண்மையாக்குவதற்கு, அதிக அளவு தண்ணீரும் ரசாயனங்களும் தேவைப்படுகின்றன. இந்த செயல்முறையின் போது கார்பன் உமிழ்வுகள் அதிகளவில் வெளியிடப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பாலைவனத்தின் நுண்ணிய மணல் துகள்கள், விவசாயக் கழிவுகள் ஆகியவற்றை பயன்படுத்தி புதிய வகை காகிதங்களை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். கால்சியம் கார்பனேட் நிறைந்த பாலைவன மணல் (80%), HDPE பிசின் மற்றும் விவசாய கழிவான பருத்தி தண்டுகள் (20%) ஆகியவற்றை சேர்த்து, வெப்பம் மற்றும் அழுத்தத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது.

இந்த செயல்முறையில் தண்ணீர் சிறிதும் தேவைப்படுவது இல்லை. மேலும் ரசாயனங்களைப் பயன்படுத்தி காகிதத்தை ப்ளீச் செய்யும் அவசியமும் இல்லை என்பதால், தயாரிப்பின் போது 60% வரை குறைவான கார்பனை வெளியிடுகிறது. பெரும்பாலும் சுண்ணாம்பு கல்லின் மணல் துகள்களில் இருந்து இது தயாரிக்கப்படுவதால் இது கல்காகிதம் (Stone paper) என்று அழைக்கப்படுகிறது. மிகவும் மென்மையான இந்த காகிதம் நீர்புகா வண்ணம், நீர் உறிஞ்சுதல் எதிர்ப்பு தன்மை கொண்டது.

கல்காகிதம் ஜின்ஜியாங் மாகாணத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது, இது மறுசுழற்சி செய்யக்கூடியதாகவும் உள்ளது. இதனால் நோட்புக்குகள், பேக்கேஜிங்களில் அச்சிடுவதற்கு ஏற்றதாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
அணு ஆயுத சோதனைகள் மனிதர்களை எப்படி மெதுவாகக் கொல்கின்றன தெரியுமா?
Stone paper invention

காலநிலை மாற்றம் சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தாக மாறி வரும் சூழலில், இந்த புதிய தயாரிப்பு முறை வனஅழிப்பு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு எதிராக சுற்றுச்சுழலை பாதுகாக்குகிறது. பயன்படுத்தப்படாத பாலைவன கனிமங்களைப் பயன்படுத்தி ஒரு பயனுள்ள தயாரிப்பை உருவாக்குகிறது.

இந்த கல்காகிதம் புதிய தயாரிப்பு அல்ல, முன்பு 1990 ஆம் ஆண்டு வாக்கிலேயே தைவான் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் சுண்ணாம்புக் கல்லில் இருந்து காகிதத்தை உருவாக்கியுள்ளனர். ஆயினும் சீனா இதில் முழு மூச்சாக இறங்கி சந்தைப்படுத்தியும் உள்ளது. இந்த காகிதத்தில் பல சிறப்புகள் உள்ளன. இந்த காகிதம் அச்சின் போதும் எழுதும் போதும் மை கசிவினை தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டுத் தோட்டத்தில் மாவு பூச்சிகளை விரட்ட எளிய ஆலோசனை!
Stone paper invention

காகிதத்தின் மேல் தண்ணீர் ஊற்றினாலும் ஊறாது. இதை எளிதில் கிழிக்க முடியாது. பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உள்ளதால் மருத்துவ பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தலாம். நோட்புக்குகள் மட்டுமல்ல, எளிதில் கிழியாத பைகளைக் கூட உருவாக்கலாம் என்பது இதன் சிறப்பு. பாரம்பரிய காகிதத்துடன் ஒப்பிடும் போது கல்காகிதம் நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த தன்மைக் கொண்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com