அணு ஆயுத சோதனைகள் மனிதர்களை எப்படி மெதுவாகக் கொல்கின்றன தெரியுமா?

The danger of nuclear weapons testing
Nuclear weapons test
Published on

ல்வேறு நாடுகளும் அணுசக்தி சோதனைகளை மேற்கொள்கின்றன. அவை சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க மற்றும் அழிவுகரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இவை வளிமண்டலம் மண் மற்றும் நீர் ஆகியவற்றில் கதிர் இயக்கப் பொருட்களை அதிக அளவில் வெளியிடுகின்றன. அணுசக்தி சோதனைகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

வளிமண்டல வீழ்ச்சி: நிலத்தில் தொடர்ந்து அணுக்கரு சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவை வளிமண்டலத்தில் கதிரியக்க ஐசோடோப்புகளை வெளியிடுகின்றன. இவை தரைக்கு வரும் முன்பு நீண்ட தூரம் வான்வெளியில் பயணிக்க வேண்டும். இந்த மாசுபாடு சோதனை தளத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளைக் கூட பாதிக்கும்.

மண் மற்றும் நீர் மாசுபாடு: கதிரியக்கப் பொருட்கள் மண் மற்றும் நிலத்தடி நீரில் ஊடுருவி சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்ட கால மாசுபாட்டிற்கு வழிவகிக்கின்றன. இது விவசாயம் மற்றும் உள்ளூர் நீர் வினியோகத்தில் தீங்கு விளைவிக்கின்றன. உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் அனைத்தும் பாதிக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு பெரும் கேடாக முடியும்.

இதையும் படியுங்கள்:
பாம்புகளைப் பற்றிய வினோத கட்டு கதைகள்..! இதெல்லாம் உண்மையே கிடையாதுங்க...!
The danger of nuclear weapons testing

வாழ்விட அழிவு: அணு வெடிப்பினால் ஏற்படும் கடுமையான வெப்பம் மற்றும் அழுத்தமானது வாழ்விடங்களை அழித்து தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கொன்று பல ஆண்டுகளாக அந்தப் பகுதியை வாழத் தகுதியற்றதாக மாற்றி விடுகிறது.

பல்லுயிர் இழப்பு: கதிர்வீச்சுக்கு ஆளாகும் விலங்குகள் மற்றும் தாவரங்கள், மரபணு மாற்றங்கள், இனப்பெருக்க செயல் இழப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன. இந்த விளைவுகள் பல்லுயிர் பெருக்கத்தை குறைக்கின்றன மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைக்கின்றன.

வளிமண்டல தாக்கம்: அணுசக்தி சோதனையால் ஏற்படும் அணு வெடிப்புகள் அதிக அளவு நைட்ரஜன் ஆக்ஸைடுகளை உருவாக்கலாம். இவை ஓசோன் படலத்தை சிதைத்து பூமியின் மேற்பரப்பை அடையும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சு அபாயத்தை அதிகரிக்கின்றன.

காலநிலை மாற்றங்கள்: பெரிய அளவிலான அணுசக்தி சோதனைகள் காலநிலை மாற்றத்திற்கு வித்திடுகின்றன. பெரும் அளவிலான தூசி, புகை மற்றும் சூட்டை வளிமண்டலத்தில் செலுத்தி தற்காலிக குளிர்ச்சிக்கும் இது வழி வகுக்கிறது.

இதையும் படியுங்கள்:
அதிசய சரணாலயம்: சுயத்தை இழக்காத மர்மம் நிறைந்த அமைதிப் பள்ளத்தாக்கு!
The danger of nuclear weapons testing

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் உடல்நலக் கேடுகள்: கதிரியக்க வீழ்ச்சியின் வெளிப்பாடாக கதிரியக்க அயோடினை உட்கொள்வதால் மனிதர்களுக்கு புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் தைராய்டு, புற்றுநோயும் அதிகரித்துள்ளது. கதிர்வீச்சு வெளிப்பாட்டின் காரணமாக டிஎன்ஏவில் பிறழிவுகளை ஏற்படுத்தும். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பிறப்பு குறைபாடுகள் மற்றும் பிற மரபணுக் கோளாறுகளுக்கும் வழி வகுக்கும்.

நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பு: பிரிட்டோனியம் ப்ளூட்டோனியம் 239 போன்ற சில கதிரியக்கப் பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அபாயகரமானதாக விளங்கும். இந்த நீண்ட கால மாசுபாடு பல்லாண்டுகளுக்கு மக்கள் வசிக்க முடியாத பகுதிகளை உருவாக்குகிறது. கதிர்வீச்சு மற்றும் பௌதீக அழிவு காரணமாக பல தசாப்தங்களாக சோதனை தளங்கள் விவசாயம் செய்யத் தகுதி இல்லாத நிலங்களாகவோ அல்லது மனிதர்கள் வசிக்கத் தகுந்த இடமாகவோ இல்லை.

இதையும் படியுங்கள்:
வாழைப்பழத் தோலை இப்படி உரமாகப் பயன்படுத்தினால் உங்கள் மாடித் தோட்டம் செழிப்பாகும்!
The danger of nuclear weapons testing

பெருங்கடல்களின் மீதான தாக்கம்: நீருக்கடியில் நடத்தப்படும் அணுக்கரு சோதனைகள், கடல்வாழ் உயிரினங்களை கொல்கின்றன. பவளப்பாறைகளை அழித்தல் மற்றும் கதிர் இயக்கப் பொருட்களால் நீர்நிலைகள் மாசுபாடு அடைகின்றன. இது முழுக் கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் அங்கு வாழும் உயிரினங்களையும் வெகுவாக பாதிக்கிறது.

மேலும், பெருங்கடல் நீரோட்டங்கள் கதிரியக்க பொருட்களை, சோதனை தளத்திலிருந்து வெகு தொலைவில் பரப்புகின்றன. இவை தொலைதூரக் கடல் சூழல்கள், விலங்குகள் மற்றும் ஜீவராசிகளின் உணவுச் சங்கிலிகளை பாதிக்கும்.

அணுசக்தி சோதனை சுற்றுச்சூழலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கும் நீடிக்கும். எனவேதான் அனைத்து அணு வெடிப்புகளையும் தடை செய்து இந்த அபாயங்களை குறைக்கும் நோக்கத்துடன்கூடிய விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com