

வெயில் கொளுத்தும் இந்த கோடையில் ஜில்லென்று ஒரு குளிர் அனுபவத்தை பெற விரும்புகிறீர்களா? முகத்தில் கண்ணாடி அணிந்தால் விறைத்து ஒட்டிக்கொள்ளும், பிரிட்ஜ் இல்லாமலேயே வெட்டவெளியில் மீன்கள் விற்கப்படும் உலகின் மிகக் குளிரான விசித்திர பனி நகரங்களைப் பற்றித் தெரியுமா? அண்டார்டிகாவையே மிஞ்சும் குளிரிலும் மனிதர்கள் எப்படி வாழ்ந்து வருகிறார்கள் என்ற மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைகளை அறியத் தொடர்ந்து படியுங்கள்!
வெயிலுக்கு தாக்குப்பிடித்தே பழகி விட்ட நமக்கு ஜில் ஜில் விசயங்களை படித்தாலே ஜில்லென்று குளிரை அனுபவித்த ஒரு ஃபீல் கிடைக்கும் அதற்காக.. உலகின் சில குளிரான ஜில் ஜில் பிரதேசங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு..
20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை உள்ள காலங்களை 'ஐஸ் ஏஜ் (ஐஸ் யுகங்கள்)' என்கிறார்கள். அப்போது பூமியின் 30 சதவீதம் ஐஸ் தான். இன்று 10 சதவீதம் தான் உள்ளது. அப்போது எங்கு பார்த்தாலும் ஐஸ் பாளங்களாகத்தான் பூமியின் மேற்பரப்பில் காணப்படும்.
அதன் பிறகு சில நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ் விலகி உருக ஆரம்பித்தது பூமியின் மேற்பரப்பில். அதில் தப்பிப் பிழைத்து இன்றும் பூமியில் அதிக ஐஸ் பரவலாக இருக்கும் சில குறிப்பிட்ட குளிர் நகரங்கள் பற்றி பார்ப்போம்...
1. உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் ரஷ்யாவில் உள்ள யக்குடிஸ்க் (Yakutsk) என்ற இடம் தான். இதனை உலகின் மிகக் குளிரான நகரம் என்கிறார்கள்.
இது கிழக்கு சைபீரியாவில் லீனா நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு -71°C, -96°F அளவில் குளிர்ச்சியாக இருக்குமாம். இது ஆர்க்டிக் வட்டத்தின் தெற்கு பகுதியிலிருந்து 450 கிமீ தொலைவில் ரஷ்ய நிலப்பகுதியில் உள்ள சகா குடியரசின் தலைநகர். சராசரி வெப்ப நிலை, மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் இந்த ஊரில் கண்ணாடி அணிந்து கொண்டு வெளியே செல்லமுடியாது.
காரணம், அதுவும் விறைத்து பிறகு முகத்திலிருந்தே கழட்ட முடியாதாம். இங்கு ஒரு முறை - 20 டிகிரி செல்சியஸ் வந்துள்ளது. மேலும், இந்த ஊரில், ஒரு துணியை வெளியே காயவைத்தால் கூட அது உடனே ப்ளாஸ்டிக்போல் உறைந்துபோய்விடுகிறது.
ஒரு வாழைப்பழம், ஆப்பிள் பழம் உறைந்து அவை சுத்தியாக ஆணி அடிக்கவே பயன்படும் அளவிற்கு கடினமானதாகி விடுமாம்; அந்தளவுக்கு அங்கு குளிர்பனி இருக்கும்.
அண்டார்டிக்காவுக்கு இணையான குளிர் இங்கு நிலவுகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து மே மாதம் வரை வெப்பநிலை -40°C முதல் -60°C வரை அல்லது அதற்கு கீழேயும் வீழ்ச்சியடையும்.
இங்கே அதிகப்பட்ச குளிர் நிலை - 81 டிகிரி பாரன்ஹீட் காணப்படும். ஜனவரி மாதம் கொஞ்சம் குளிர் குறைந்து -36 டிகிரி பாரன்ஹீட் காணப்படும்.
உலகிலேயே மனிதர்கள் வாழும் மிகக் குளிரான நகரங்களில் ஒன்றாக இது கருதப்படும் இங்கு இந்த குளிரையும் சமாளித்துக் கொண்டு இரண்டு லட்சம் பேர் வரை வாழ்கிறார்கள்.
இப்பகுதியில் தங்கம் மற்றும் வைரம் போன்ற விலைமதிப்பற்ற கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. குளிர்காலத்தில் மீன் மற்றும் இறைச்சிகள் எந்தவொரு குளிரூட்டியும் (Fridge) இல்லாமல் வெட்டவெளியில் உறைந்த நிலையிலேயே விற்கப்படுகின்றன.
2. ரஷ்யாவின் வெக்கோயான்ஸ்க் என்பது ஆசியாவிலேயே மிகக் குறைந்த வெப்பநிலை பதிவான மற்றும் மிகக் கடுமையான வெப்பநிலை மாற்றங்களைக் கொண்ட ஒரு சிறிய பனி நகரமாகும். ரஷ்யாவின் சாகா குடியரசில் யானா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
ஆசிய கண்டத்தில் மனிதர்கள் வாழும் பகுதியில் மிகக் குறைந்த வெப்பநிலையாக -67.8°C இங்கு பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் ஆடுகள், மாடுகள் மேயும் இடமாக மட்டுமே இருந்த இடத்தில் 2014 ல் எடுத்த கணக்கெடுப்பின்படி அங்கே 1400 பேர் தான் இருந்தார்கள். இங்கே ஜனவரி மாதம் தான் ஓரளவு குளிர் குறையும்; அப்போது அங்கு நிலவும் வெப்பநிலை -50 டிகிரி பாரன்ஹீட். அங்கு நிலவும் அதிகபட்ச குளிர் -90 டிகிரி பாரன்ஹீட். இங்கும் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
3. கிழக்கு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள சகா குடியரசில் அமைந்துள்ளது ஒய்மயாகோன்ஸ்கி என்னும் நகரம். இது பூமியின் கீழ் பகுதியாக சொல்லப்படும் அண்டார்டிகாவின் வெளிப்புரத்தில் உள்ளது. இக்கிராமத்தில் மொத்த மக்கள் தொகை 500 என்கிறார்கள். ஏரியல் வ்யூவில் பார்க்கும் பொழுது, இவ்விடம் ஒரு வெள்ளைப்போர்வையை விரித்தது போல் காணப்படும்.
இங்கு அதிகபட்சமாக -90 டிகிரி குளிர் நிலை காணப்படுகிறது. -52 டிகிரி பாரான்ஹீட் குளிர் நிலை இருக்கும் வரை இங்கு பள்ளிகள் திறந்திருக்கும். இங்கே வெந்நீர் ஊற்றுகள் அதிகம் இருக்கிறது.
உறைந்த நிலையில் காணப்படும் சில இடங்களில் ஐஸ்யை உடைத்தால் வெதுவெதுப்பான தண்ணீர் கிடைக்கும். இந்த வெந்நீர் ஊற்றுகளை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
4. அமெரிக்காவின் கொலராடோ மலைப்பகுதியில் இருக்கும் பிரேசன்கோலோ எனும் பகுதி தான் அமெரிக்காவின் அதிக குளிர் நிலவும் பகுதியாகும். இங்கு நிலவும் சராசரி குளிர்நிலை -32 டிகிரி பாரன்ஹீட். இதுவே கோடை காலத்தில் -29 டிகிரி பாரன்ஹீட்டாக குறைந்து விடும். இங்கு பார்க்கும் இடத்தில் எல்லாம் பனிக்கொட்டி கிடப்பதை காணலாம் .
5. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ப்ராஸ்பெட் கிரீக் Prospect Creek அமெரிக்காவின் மிகக் குறைந்த வெப்பநிலையான -79.8°F (-62.1°C) பதிவான இடமாகும்.
இது ஃபேர்பேங்க்ஸுக்கு வடக்கே 180 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய குடியேற்றப் பகுதியாகும். இங்கு ஜனவரியில் அதிகப்பட்சமாக -80 டிகிரியாக இருக்கும். இங்குள்ளவர்களுக்கு தொழிற்சாலை உபயோகத்திற்காக குழாய்களில் எண்ணெய் அனுப்பப்படுகிறது.
இந்தத் தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம், பூமியின் தீவிர பருவநிலை மாற்றங்கள், குளிர் நகரங்கள் மற்றும் அத்தகைய கடினமான சூழலிலும் மனித இனம் காட்டும் தகவமைப்புத் திறனைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறலாம்.