புகையிலை என்னும் கொடிய அரக்கன்: உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்!

to-stop-smoking
to-stop-smoking
Updated on

புகையிலை பயன்படுத்தினால் உடல், மனம், சுற்றுச்சூழல் ஆராக்கியத்திற்கும் பெரிய இழப்பு ஏற்படுத்தும். இது நிகோடின் மூலம் கொடிய நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது.

1964-ம் ஆண்டில் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது . சிகரெட் புகைப்பதால் நுரையீரல் புற்று நோய்  ஏற்படுகிறது என்பதை அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் உறுதிப் படுத்தியுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் புகை பிடித்தலால் பல கொடிய நோய்களுக்கும் காரணம் இருந்தது என்பதையும், புகையிலையால் 490,000-க்கும்  மேற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இது ஒரு காரணமாக அமைகிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

இதனால் ஏற்படும் நோய்கள்

இதய நோய்கள் - இரத்த நாளங்களைச் சேதப்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம், ரத்த அழுத்தப் பிரச்னைகளை உண்டாக்கும்.

புற்றுநோய் - நுரையீரல், வாய், தொண்டை, வயிறு, சிறுநீர்ப்பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கொடிய புற்று நோய்கள் உருவாக முக்கிய காரணமாக புகையிலையால் ஏற்படுகிறது.

சுவாசக்கோளாறு - நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், ஆஸ்த்துமா, மூச்சுக்குழல் அழற்சி போன்ற தீவிர சுவாசப் பிரச்னைகளை புகையிலையால் ஏற்படும்.

பிற நோய்கள் - வாய்ப்புண், வாய் துர்நாற்றம் பற்கள் சிதைவு, கரு உருவாதல் பிரச்னை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவற்றையும் புகை பிடிப்பதால் உண்டாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
Biomass ஆற்றல் என்றால் என்ன தெரியுமா?.. இதுதான் நம் பூமியின் எதிர்காலம்! 
to-stop-smoking

நீரிழிவு நோய்

புகை பிடிப்பதால்  இரண்டாவது வர நீரிழிவு நோய்க்கு வழி வகுப்பதோடு கால்கள் மட்டும் பாதங்களுக்கு செல்லும் ரத்தக் குறைபாடு உள்ளிட்ட நோயால் ஏற்படும் சிக்கல்களையும், சில அபாயத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள்  பாதத்தை அல்லது காலையோ இழக்க நேரிடும்.

முடக்குவாதம்

முடக்குவாதம் என்பது பெண்களிடையே காணப்படும் நாள்பட்ட அழற்சி நோயாகும். இது கை, கால்மூட்டுகளை பாதிக்கிறது. எலும்பு, இழப்பு மற்றும் மூட்டுக்களையும் பாதிக்கும் . இது புகைபிடித்தல் காரணங்களில் ஒன்றாகும்.

கண்கள் பிரச்னைகள்

சிகரெட் பிடிப்பதால் கண் பிரச்னைகள் ஏற்படலாம். கண்புரை, விழித்திரை சிதைவு. வறண்ட கண்கள், கிளைக்கோமா, நீரிழிவு விழித்திரை நோய். இவற்றுக்கும் காரணம் புகையிலைவர் ஏற்படுகிறது.

புகைபிடிப்பதை நிறுத்தினால் கிடைக்கும் சில நன்மைகள்

இதய துடிப்பு இயல்பான நிலைக்கு  வரும். மாரடைப்பு ஏற்படும் அபாயமும்,  ரத்த அழுத்தமும் குறைகிறது. இருமல், பக்க வாதம், வாய், தொண்டை, புற்று நோய் ஏற்படும் அபாயம் பாதியாக குறையும்.

புகை பிடிப்பதை நிறுத்தும் ஐந்து D -க்கைளை பின்பற்றினால்  நோய் வராமல் தடுக்கலாம்.

Delay -சிகரெட் பீடி நினைவுக்கு வரும்போது ஒவ்வொரு முறையும் தாமதமாக நேரத்தை தவிருங்கள். இதனால் புகை பிடிக்கும் எண்ணிக்கை குறையும்.

Deep breathe -ஐந்து நிமிடங்களுக்கு ஆழமாக மூச்சுவிடுங்கள் அல்லது பிராணாயாமம் செய்யலாம் அடுத்த வேலையை செய்வதால் புகை பிடிப்பது குறையும்.

இதையும் படியுங்கள்:
சென்னையை மிரட்டும் 'மெட்ராஸ் ஐ' மற்றும் 'சின்னம்மை பரவல்': தப்பிப்பது எப்படி? வீட்டில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள்!
to-stop-smoking

Drink Water -சிறிது நேரம் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக தண்ணீர் குடியுங்கள். இப்படியே நேரத்தை தள்ளினால் சிகரெட் நினைப்பு வராது.

Do Somthing else -நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு மாற்று வேலையை செய்யுங்கள். அலுவலகத்தில் இருந்தால் உட்கார்ந்தபடி கை, கால்களுக்குச்  சிறு சிறு பயிற்சிகள் கொடுப்பது, மாடிப்படி ஏறி இறங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, யோகா, தியானம் செய்வது பிடித்த  இசை கேட்பது, புத்தகம் படிப்பது இதைச்  செய்யலாம். புகை பிடித்தலை மறக்கலாம்.

Directory - புகைப்பிடிப்பதைக் கைவிட உங்களுக்கு வழிகாட்ட உதவும் தேசிய அழைப்பு எண் : 1800 112 356 இதனை நாடலாம். இப்படி நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் புகைப்பதை தடுக்கிறது, அல்லது தள்ளிப் போடுகிற தடுப்பூசியாக அமையும்.

புகைப்பிடிப்பவர்கள் மட்டும் அல்லாமல் அருகில் இருந்து புகையை சுவாசிக்கும் நபர்களுக்கும் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு சிகரெட் துண்டுகளால் காற்று, மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தி சுற்றுச்சூழல் சமநிலையையும். கெடுக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com