பாம்பு இல்லாத நாடுகள்!

Snakes
Snakes
Published on

பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இருக்காது. எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் தன் விஷத்தால் சில நொடிகளில் சாய்த்துவிடும். இந்தியாவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு பாம்பு கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். கிராமங்கள் மட்டும் இல்லாமல் நகரப்புறங்களிலும் பாம்புகள் அதிகம் காணப்படுகிறது. அதிலும் மழைக்காலங்களில் தான் அதிக அளவு பாம்பு கடியால் மனிதர்கள் இறக்கிறார்கள். 

நாகப்பாம்பு, கட்டுவிரியன், ராஜ நாகம் போன்ற பல விஷத்தன்மை கொண்ட பாம்புகள் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் உள்ளது. நம்மில் பலரும் பாம்புகள் எல்லா நாடுகளிலும், எல்லா பகுதிகளிலும் இருக்கும் என நினைக்கிறோம். ஆனால் பாம்புகள் இல்லாத நாடுகளும் இருக்கின்றன.

நாம் இந்த பதிவில் பாம்புகள் இல்லாத நாடுகள் எது? ஏன் அந்த நாட்டில் பாம்புகள் இல்லை என்பதை பற்றி காணலாம்.

அயர்லாந்து:

ஐரோப்பா கண்டத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு தீவு தான் அயர்லாந்து. இது ஐரோப்பா கண்டத்தின் மூன்றாவது பெரிய தீவும், உலகின் இருபதாவது பெரிய தீவு ஆகும். இதன் மேற்கு பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. இந்த நாட்டில் பாம்புகள் கிடையாது. காரணம் அயர்லாந்து மிகவும் குளிரான காலநிலையை கொண்ட நாடு ஆகும். 

பாம்புகள் வாழ்வதற்கு போதுமான அளவு வெப்பநிலையும், ஒளியும் தேவைப்படுவதால் பாம்புகள் இந்த நாட்டில் வாழ இயலாது. ஒரு சிலர் அயர்லாந்து நாடு சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீரில் மூழ்கியதாகவும் இதன் காரணமாக அந்நாட்டில் பாம்புகள் அழிந்து தற்போது பாம்புகள் இல்லாத நாடாக அயர்லாந்து இருக்கிறது எனவும் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பேரிடரின் பின்னணி என்ன?
Snakes

நியூசிலாந்து: 

பசிபிக் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.  இந்நாட்டில் பாம்புகள் இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று. காரணம் பல வன விலங்குகளை கொண்ட நியூசிலாந்தில் இதுவரை ஒரு பாம்புகள் கூட கண்டுபிடிக்கபடவில்லை. 

இதற்குக் காரணம் குளிர் பிரதேசமாக நியூசிலாந்து இருப்பதால் பாம்புகள் வாழ்வதற்கான சூழ்நிலை இங்கு இல்லை. மேலும் நியூசிலாந்தை சுற்றியுள்ள கடலில் பாம்புகள் காணப்பட்டாலும் கடல் நீரைக் கடந்து நிலப்பரப்பை பாம்புகள் அடைவது மிகவும் கடினமான ஒன்று. மேலும் கடல் நீர் குளிர்ச்சி அடையும் போது பாம்புகள் இறந்து விடுகின்றன. எனவே நியூசிலாந்தில் பாம்புகள் இல்லை. 

மேலும் நியூசிலாந்து நாட்டில் மிருக காட்சி சாலையில் பாம்புகள் வைக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருப்பதால் நியூசிலாந்து நாட்டில் பாம்புகளை காண முடியாது.

இதையும் படியுங்கள்:
மனிதர்களைப் போல் பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும் விலங்குகள்!
Snakes

அண்டார்டிகா: 

பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் கண்டம் தான் அண்டார்டிகா. பூமியிலேயே அதிக அளவு குளிர் கொண்ட ஒரு பகுதி. பூமியின் தென்முனையில் அமைந்திருப்பதால் சூரிய ஒளி, வெப்பம் இந்த பகுதியில் ஏற்படுவது மிகவும் அரிது. அண்டார்டிகா கண்டம் முழுவதும் பனிக்கட்டியால் சூழப்பட்டிருக்கும். எனவே பாம்புகள் வாழ்வதற்கான சூழ்நிலை இங்கு கிடையாது. 

மேலும் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, அலாஸ்கா போன்ற தீவுகளில் பாம்புகள் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com