இந்திய விடுதலைக்கு பின்னர் பல தசாப்தங்களாக சிறுத்தைகள் தொடர்ச்சியாக குறைந்து வருகின்றன.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின்சமீபத்திய மதிப்பீட்டின்படி, இந்திய சிறுத்தை இனம் 24.5% குறைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்திய சிறுத்தைகள் ஆப்பிரிக்க சிறுத்தை இனத்திலிருந்து வேறுபட்டது.
கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், கடந்த மூன்று தசாப்தங்களில் இந்த அளவு எண்ணிக்கை குறைந்தது உணவுச்சங்கிலியை பாதிக்கும் அடுத்தது சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதிக்கும். அதே நேரத்தில் சிறுத்தைகளின் கிளையினங்களின் அறியப்பட்ட வரம்பு சற்று அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஆய்வு செய்யப்படாத வனம் மற்றும் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிர ஆய்வுகள் காரணமாக இந்த வரம்பு அதிகரித்து இருக்கலாம்.
அடிக்கடி வேட்டையாடுதல், மற்ற விலங்குகளின் தாக்குதல் போன்ற அச்சுறுத்தல்களால் இந்திய சிறுத்தை தொடர்ந்து எண்ணிக்கையில் சரிந்து வருகிறது. ஒரு ஆய்வின்படி, கடந்த 10 ஆண்டுகளில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்காக வாரத்திற்கு நான்கு சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளன என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது.
மற்றொரு பெரிய அச்சுறுத்தல் மனிதர்கள் பகுதியில் நுழைவது, அதனால் தாக்குதலுக்கு ஆளாகுவது. அடுத்த பெரிய அச்சுறுத்தல் அதற்கான உணவுகள் வனப்பகுதியில் குறைந்து வருதல். 'காட்டு விலங்கு இரையின் தொடர்ச்சியான குறைவு' சில பகுதிகளில் சிறுத்தை எண்ணிக்கையை எதிர்மறையாக பாதிக்கிறது.
இந்தியாவின் புலிகள் வாழும் நிலப்பரப்புகளில் சிறுத்தை எண்ணிக்கை அறியப்பட்டாலும், 'இந்தியாவின் புலிகள் இல்லாத மாநிலங்கள் மற்றும் காடுகளில் இல்லாத சிறுத்தைகளின் வாழ்விடங்களில் உள்ள எண்ணிக்கை' அறியப்படவில்லை, இதனால் கூட எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்ற ஐயம் உண்டு.
உலகளாவிய அளவில் மற்ற சிறுத்தைக் கிளையினங்களும் இதேபோல் குறைந்து வருவதைக் காட்டுகின்றன. ஆசியாவின் மத்திய, கிழக்கு பகுதிகளிலும் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கணிசமான வரம்பு சரிவுகள் காணப்படுகின்றன.
சமீபத்திய மதிப்பீட்டின்படி, வட ஆப்பிரிக்காவின் பகுதிகளில் இருந்து சிறுத்தை முற்றிலும் மறைந்துவிட்டது.
வசிப்பிடத் துண்டாடுதல் மற்றும் காடுகளை அழித்தல், காடுகளில் இரை குறைந்தது ,தோல்களுக்கான சட்டவிரோத வேட்டை மற்றும் மனித-வனவிலங்கு மோதல்கள் மற்றும் கால்நடைகளை அழிக்கும் பழிவாங்கல் போன்ற காரணங்களால் கணிசமான வரம்பு சரிவு ஆகியவை அடங்குகின்றன.
ஜாவாவில் கணக்கெடுக்கும் போது தீவிர பாதுகாப்பு முயற்சிகள் காரணமாக சிறுத்தைகள் தங்கள் எண்ணிக்கையை பராமரித்து அதிகரித்துள்ளனர். ரஷ்ய தூர கிழக்கு மற்றும் வடகிழக்கு சீனாவில், நல்ல பாதுகாப்புடன் கூடிய பெரிய தேசிய பூங்காக்களை உருவாக்கியதன் காரணமாக வரம்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தோசீன சிறுத்தைகள், அரேபிய சிறுத்தைகள் மற்றும் வடசீன சிறுத்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாரசீக சிறுத்தை மற்றும் ஜாவன், மேலயு சிறுத்தைகள் அழியும் நிலையில் இருப்பதாக கருதப்படும் சிறுத்தையின் கிளையினங்கள். ஆப்பிரிக்க சிறுத்தை மற்றும் இலங்கை சிறுத்தை ஆகியவை பாதிக்கப்படக்கூடியவை என மதிப்பிடப்பட்டுள்ளது. வனவிலங்குகள் உலகில் பாதுகாக்கப்பட வேண்டும்.