செடிகளிலும் 2ஜி, 3ஜி இருப்பது உங்களுக்கு தெரியுமா?

Garden on the house floor
Agriculture article
Published on

2ஜி, 3ஜி என்றதும் உங்களுக்கு சட்டென்று என்ன ஞாபகம் வரும்? இப்படி ஒரு கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? இது தெரியாதா? மொபைல்போன் மட்டும்தான் ஞாபகம் வரும் என்று பளிச்சென்று பதில் சொல்லிவிடுவீர்கள்தானே?

ஆனால், விவசாயம் சம்பந்தப்பட்ட 2ஜி, 3ஜி பற்றி தெரியுமா என்று கேட்டால் யோசிப்பீர்கள் அல்லவா?

எந்த வேலை செய்தாலும் அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால் மட்டுமே அதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். இது விவசாயத்திற்கும் பொருந்தும். ஏக்கர் கணக்கில் நிலத்தை வைத்து விவசாயம் செய்தாலும் சரி, வீட்டு மாடியில் தோட்டம் அமைத்திருந்தாலும் சரி, நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டுமானால் இதுதொடர்பான நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருக்கவேண்டியது அவசியம்.

ஏற்கெனவே சொன்ன விஷயத்திற்கு வருவோம். விவசாயத்தில் 2ஜி, 3ஜி கட்டிங் என்று சொல்கிறார்கள். இந்த முறையில் கட் செய்யும்போது செடிகளில் அதிக காய்கறிகள் விளையும் என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்திய பாங்கோலின் (Indian pangolin) பற்றிய அறிய தகவல்கள்..!
Garden on the house floor

2ஜி, 3ஜி என்றால் என்ன?

ஒரு செடியின் முதல் கிளைதான் முதல் தலைமுறை, அதாவது, முதல் ஜெனரேஷன். இதுதான் 1ஜி. இதிலிருந்து முளைக்கும் அடுத்த கிளைதான் இரண்டாவது ஜெனரெஷன், அதாவது 2ஜி. அதேபோல் 2ஜி கிளைகளிலிருந்து முளைக்கும் கிளைகள் 3ஜி என்றும் இதிலிருந்து முளைப்பது 4ஜி என்றும் அழைக்கப் படுகின்றன. இதில் 2ஜி, 3ஜி கட்டிங் ஆகியவை சிறந்த பலனளிக்கும்.

2ஜி, 3ஜி கட்டிங் செய்வது எப்படி?

செடியின் கிளை 1 மீட்டர் அளவிற்கு வளர்ந்து 6-7 இலைகள் முளைக்கும்போது அதன் மேல் பகுதி கத்திரிக்கப்படும். இதனால் அந்தக்கிளை மேலும் வளராமல் அடுத்த ஜெனரேஷன் கிளை வளரத் தொடங்கும். அதேபோல் இதுவும் 1 மீட்டர் அளவிற்கு வளர்ந்ததும் கத்திரித்தால், மூன்றாவது ஜெனரேஷன் கிளைகள் வளரத் தொடங்கும்.

கத்திரிப்பதால் கிடைக்கும் பலன்கள்

முதல் ஜெனரேஷன் கிளையில் பூக்கும் பூக்கள் ஆண் பூக்கள். ஆண் பூக்கள் பழம் கொடுக்காது. பெண் பூக்களிலிருந்து மட்டுமே பழம் கிடைக்கும். இரண்டாவது ஜெனரேஷன் கிளையில் ஒரு இலையை விட்டு அடுத்த இலையின் பக்கத்தில், பெண் பூக்கள் இருப்பதைப் பார்க்கமுடியும். அதாவது, இவை பழமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

இதையும் படியுங்கள்:
மனிதர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி அறிவோம்!
Garden on the house floor

எந்த செடியில் இப்படி கட் செய்யமுடியும்?

நிறைய கிளைகள் வளரும் செடிகளில் 3ஜி கட்டிங் செய்யலாம். உதாரணத்திற்கு வெள்ளரி, பூசணி, பாகற்காய் போன்ற கொடி வகைகளுக்கு இது பலனளிக்கும். விளைச்சலும் லாபமும் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com