
ஆஸ்திரேலியாவில் காணப்படும் Lyrebird தான் அழகாக இறகு கொண்டது. மயிலைப்போன்று இறகு பெரியதாக இல்லாவிட்டாலும் மிகவும் வண்ணமயமானது. இந்த பறவைகளின் இனங்கள் குறைந்து வருவதற்குக் காரணம் இதன் இறகுகளைக் கொண்டு பெண்களுக்குத் தோப்பிகள் உருவாக்க பயன்படுத்துவதுதான்.
லயர்பெர்டு இனங்களில் ஆண் இனம் தன் வண்ணமயமான இறகுகளால் பெண் பறவைகளை இனப் பெருக்கத்திற்காக ஈர்க்கிறது. இந்த பறவையைப் போன்று பல பறவை இனங்கள் மனிதர்களால் வேட்டையாடப் படுவதால் குறைந்து வருவது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
Lyrebird வால் தன்மை மேலும் அது பெண் இனத்தை ஈர்க்க நன்கு இறகுகளை விரிக்கும்போது Lyre என்ற பாட்டு வாத்தியத்தைப்போல் இருப்பதால்தான் இதற்கு Lyrebird என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விசிறி போன்ற இறகு 16 இறக்களைக் கொண்டதாகும்.
இதில் இரண்டு இறகுகள் வெளியே நீண்டு சற்று வளைந்திருக்கும். நடுவில் மெல்லியதாக இரண்டு இறகுகளும் மற்ற 12 இறகுகளும் விரிந்த வண்ண விளக்குபோல் காட்சி அளிக்கும். இரவில் இது வெளிச்சமாக வண்ணமயமாக பார்க்க அழகாக இருக்கும்.
இப்பறவை பார்க்க அழகாக இருப்பதோடு சிறப்பாக பாடக் கூடியது. இதன் ஒலி சிறப்பாக இருக்கும். இதற்கு மற்ற பறவைகளின் ஒலி மற்றும் மனிதர்களின் பேச்சை கூட மிமிக்கி செய்யக் கூடிய பண்பு உள்ளது.இந்த அழகான பறவை மரக்கிளைகளியிலும் காடுகளிலும் காணப்படும். அதுவும் ஆண் இப்பறவைகள் பெண் இனத்தை ஈர்க்க தங்கள் இறகுகளை விரித்தும் ஒலி எழுப்பியும் துணையைத்தேடும்.
அடே காதல் பறவையா?
காதல் பறவை என்று அழைக்கப்படும் Bower bird கட்டும் காதல் கூடு. இந்தக் காதல் பறவை தன் காதலை வெளிப்படுத்த காதல் கூடு கட்டும். அதை மலர்களால் அலங்கரிக்கவும் செய்யும். ஆஸ்திரேலியாவில் காணப்படும் இது அழகிய நிறத்தில் இருக்கும். மற்ற பறவைகள் முட்டை இடுவதற்காக கூடு கட்டும்.
ஆனால் இந்த bower bird ஆண் இனம் பெண் இனத்தை ஈர்க்க சிறந்த கட்டட விஞ்ஞானி போன்று அழகிய காதல் கூடு கட்டும். ஒவ்வொரு வகையான பறவைக்கு ஒவ்வொரு நிறம் பிடிக்கும். சாடின் போவெர்ட் பறவை நீல நிறத்தில் இரூக்கும். இது நீல வண்ணத்தில்லேயே கூடு கட்டும்.