வன மனிதர்களான ஒராங்குட்டான்களை பாதுகாப்பதன் அவசியம் தெரியுமா?

ஆகஸ்ட் 19, சர்வதேச ஒராங்குட்டான்கள் தினம்
ஒராங்குட்டான்கள்
ஒராங்குட்டான்கள் https://earth.org
Published on

ராங்குட்டான்கள் அற்புதமான அறிவு ஜீவிகள். மனிதர்களின் 97 சதவீத  டிஎன்ஏக்கள் ஒராங்குட்டான் குரங்குகளிலும் உள்ளன. இவை அபூர்வமான வன மனிதர்கள். சர்வதேச ஒராங்குட்டான்கள் தினம் ஆகஸ்ட் 19ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ஒராங்குட்டான்களை பாதுகாப்பதன் அவசியத்தை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒராங்குட்டான்களின் உடலமைப்பும் வாழ்வியலும்: ஒராங்குட்டான்கள் கொரில்லாக்களின் மூதாதையர்களாகக் கருதப்படுகின்றன. குறுகிய தடித்த உடல், நீண்ட கைகள், குறுகிய கால்கள் மற்றும் சிவப்பு நிற முடி ஆகியவற்றை கொண்டுள்ளன. கைகளின் நீளம் மகத்தானவை. தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் மட்டுமே நிற்கும் இவை நேராக நிற்கும்போது அவற்றின் கைகள் கிட்டத்தட்ட தரையைத் தொடும். அவற்றின் ஏழடி நீளக் கைகள் மரத்திலிருந்து மரத்திற்கு நகரவும் பாரம்பரிய இலைகளில் இருந்து தங்குமிடங்களை உருவாக்கவும் உதவுகின்றன. இவை 90 சதவீத நேரத்தை மரத்தின் உச்சியில் உணவை தேடுகின்றன. இவை பெரும்பாலும் தாவர உண்ணிகள். ஆனாலும் பட்டை பூச்சிகள் மற்றும் இறைச்சி கிடைத்தால் சாப்பிடும்.

இவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும், காரணங்களும்:

பல்லுயிர் பாதுகாப்பு: இவை சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முக்கியமாக இவை வாழும் வெப்ப மண்டல மழைக் காடுகளில் விதைகளை பரப்ப உதவுகின்றன. இது வன மேலுருவாக்கம் செய்யப் பயன்படுகிறது. இந்த விலங்குகளைப் பாதுகாப்பதன் மூலம் காடுகளின் வளமான பல்லுயிரிகளை பாதுகாக்க முடியும். ஒரு சமநிலையான சுற்றுச்சூழல் அமைப்பபிற்கும் இது உதவும்.

காலநிலை மாற்றம்: ஒராங்குட்டான்களின் வாழ்விடங்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் அவை காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காடுகள் கார்பன் மூழ்கிகளாக செயல்படுகின்றன. அதிக அளவு கார்பனை, கார்பன்-டை-ஆக்சைட்டை உறிஞ்சுகின்றன. இந்த வகை காடுகளை அழிப்பதன் மூலம் அவற்றின் வாழ்விடங்கள் அழிந்து போவது மட்டுமல்லாமல், சேமிக்கப்பட்ட கார்பன் வளிமண்டலத்தில் கலக்க ஏதுவாக அமைகிறது. இதனால் புவி வெப்பமடைதல் அதிகமாகிறது.

ஒராங்குட்டான்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள்: ஒராங்குட்டான்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இவை வசிக்கும் காடுகளை அழிப்பதனால் இவற்றுக்கான வாழ்விட அச்சுறுத்தல்கள் உள்ளன. சட்ட விரோதமாக மரங்களை வெட்டுதல், வேட்டையாடுதல் போன்றவையும் இவற்றின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.

இதையும் படியுங்கள்:
காலையில் அவசியம் தவிர்க்கவேண்டிய 5 உணவுகள் எவை தெரியுமா?
ஒராங்குட்டான்கள்

இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இவை மிகவும் அதிகளவு ஆபத்தை எதிர்கொள்கின்றன. பாமாயில் சாகுபடிக்காக பனை எண்ணெய் தோட்டங்கள் அதிகரிப்பு, மரம் வெட்டுதல் மற்றும் சட்ட விரோத வேட்டையாடுதல், சுரங்கம் அமைத்தல் போன்றவற்றின் காரணமாக இந்த குரங்குகள் வாழும் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. காட்டுத்தீ ஏற்படுவதோடு, வேண்டுமென்றே நிலத்தை சுத்தப்படுத்துவது போன்றவை இவற்றின் அழிவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பண்ணைகளின் முறையற்ற நிர்வாகத்தால் வெப்பமண்டல மழைக் காடுகள் அழிக்கப்பட்டன. மேலும், விவசாயிகள் ஒராங்குட்டான்களை தொல்லையாகக் கருதி அவற்றை கொன்று வருகிறார்கள் அல்லது காடுகளை எரிப்பார்கள். மிக சிறிய அளவிலான ஒராங்குட்டான்கள் மட்டுமே உலகம் முழுவதும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3000 ஒராங்குட்டான்கள் சர்வதேச சட்டவிரோத வேட்டையாடுதல் மூலம் அழிக்கப்படுகின்றன. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஒராங்குட்டான்கள் வாழும் காடுகள் அழிந்து விட்டால் அவையும் அழிந்து விடும் என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே இத்தகைய அரிய உயிரினங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com