காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அதேபோல், காலை வேளையில் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். ஏனென்றால், இரவு குறைந்தது 10லிருந்து 12 மணி நேரம் வரை நாம் சாப்பிடாமல் இருப்போம். அப்படி இருக்கும்பொழுது அடுத்த நாள் காலையில் முதலில் நாம் சாப்பிடும் உணவு எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசிம். காலையில் முதலில் சாப்பிடுவதில் இந்த 5 உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டியது அவசியம்.
1. காரமான உணவுகள்: பொதுவாகவே, காரமான உணவுகள் குடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அதிலும் குறிப்பாக காலை வெறும் வயிற்றில் காரமான உணவுகளைச் சாப்பிடவே கூடாது.வெறும் வயிற்றில் மசாலாக்கள் அதிகமுள்ள காரமான உணவுகளை எடுத்துக் கொண்டால் அது செரிமான அமைப்பையே பாதிக்கும். உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் கேட்டசின்கள் இதில் அதிகம் என்பதால் கடுமையான வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்னைகளைத் தூண்டும்.
2. டீ, காபி குடிப்பது: நம்மில் பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் முதலில் குடிக்கும் பானமாக இருப்பது டீ, காபிதான். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பவே கூடாது. வெறும் வயிற்றில் காஃபைன் எடுத்துக் கொள்ளும்போது, அது குடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
3. வறுத்த உணவுகள்: காலை உணவில் பூரி, உளுந்து வடை சாப்பிடுவது நிறைய பேருக்கு பிடித்தமான உணவு. அதோடு கூடுதலாக உருளைக்கிழங்கு மசாலாவும் சேர்த்து சாப்பிடுவோம். வறுத்த மற்றும் பொரித்த உணவுகளில் டிரான்ஸ் ஃபேட் அளவு மிக அதிகம். அதை காலை வெறும் வயிற்றில் முதல் உணவாக சாப்பிடுவது செரிமான அமைப்பை மிக மோசமாக பாதிக்கும்.
4. பழச்சாறுகள்: இதுதான் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது. காலை நேர உணவில் பழச்சாறுகள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், காலை உணவில் பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, வெறும் வயிற்றில் பழச்சாறுகள் குடிக்கவே கூடாது.பழச்சாறுகளில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.. நார்ச்சத்துக்கள் முழுவதும் வெளியேறிவிடும்.
5. செரல் வகைகள் மற்றும் பேஸ்ட்ரி வகைகள்: வேலை பரபரப்பில் பலரும் காலை உணவாக பாலில் ரெடிமேடாகக் கிடைக்கும் செரல் வகைகளைச் சேர்த்து சாப்பிட்டு விட்டுப் போகிறோம்.கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் செரல் வகைகளில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்.
இதுபோன்ற ரிஃபைண்ட் செய்த கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவே கூடாது.