இந்த உயிரினங்கள் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதன் ரகசியம் தெரியுமா?
கணக்கிட முடியாத எண்ணிக்கையில் இந்த பூமியில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் சில உயிரினங்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் பல்வேறு நிறங்களுடன் காணப்படுகின்றன. அந்த வகையில் ஆரஞ்சு நிறத்தில் வாழும் சில உயிரினங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
வர்ணம் பூசப்பட்ட வௌவால்: தெற்காசியாவில் காணப்படும் இந்த வௌவால் உடல் கம்பளி போன்று ஆரஞ்சு முடியைக் கொண்டிருக்கும். இதன் இறக்கைகள் கருப்பு நிறத்தில் இருக்கும். இதன் வண்ணம் எதிரிகளிடமிருந்து தப்பிக்க உரு மறைப்புக்கு உதவுகிறது. இவை இனப்பெருக்க காலத்தில் ஒரே ஒரு குட்டியை மட்டுமே உற்பத்தி செய்கின்றன.
தங்க மீன்: கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மீன் இனம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இதன் நிறத்திற்காக தேர்ந்தெடுத்து வளர்க்கப்பட்டது. மீன் வணிகத்தில் இது பிரபலமானது. வெவ்வேறு வித தங்க மீன்கள் உள்ளன. சிலவற்றின் தலையில் வீக்கம் போன்ற அமைப்பு இருக்கும். இவை சுமார் 15ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது.
கோமாளி மீன்: கடல்வாழ் உயிரினமான இதில் 30 இனங்கள் உண்டு. இவற்றின் ஆரஞ்சு உடலைச் சுற்றி கருப்புக் கோடுகளால் பிரிக்கப்பட்ட மூன்று செங்குத்து வளையங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. பல இந்திய இனங்கள் பசிபிக் கடலில் காணப்படுகின்றன.
ஓரியோல்: இது மெல்லிய உடலும், கூர்மையான அலகுகளைக் கொண்ட பாடும் பறவையாகும். ஆண் பறவைகள் கருப்புத் தலை மற்றும் முதுகில் மாறுபட்ட மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற உடல்களைக் கொண்டிருக்கின்றன, பெண் இனம் மந்தமான சாம்பல் நிற இறகுகளைக் கொண்டுள்ளன. ஆண் இனம் தனது வண்ணத்தால் பெண் இனத்தை ஈர்க்கிறது. இப்பறவை அமெரிக்காவில் காணப்படுகிறது.
தங்கச் சிங்க தாமரின்: அழிந்து வரும் இனமாகிய இது பிரேசில் காடுகளை இருப்பிடமாகக் கொண்டது. தங்க நிறம் உடையது. இதன் உடல் 6 அங்குலம் முதல் 20 அங்குல நீளம் மட்டுமே இருந்தாலும் வால் 13 முதல் 25அங்குல நீளம் உடையது. இது மரங்களில் ஏற வாலை பயன்படுத்துகிறது. இவை 2 முதல் 8 வரை கூட்டமாக வாழும். பெண் இனம் இரட்டையர்களைப் பெற்றெடுக்கிறது.
பெங்கால் புலி: ஆரஞ்சு நிறத்தில் கருப்பு கோடுகளுடன் காணப்படும் இது, பெங்கால், நேபால், பூடான் பகுதிகளில் காணப்படும்.
சிவப்பு நரி: இதன் பேரில் சிவப்பு இருந்தாலும் ஆரஞ்சு நிறத்தில்தான் இது காணப்படும். இதன் வால் அடர்த்தியாகவும் வெண்மையாகவும் இருக்கும். தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்கா பகுதிகளில் இதைக் காணலாம்.
கரிபால்டி மீன்: கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இவற்றை பெரும்பாலும் கலிஃபோர்னியாவின் பவளப் பாறைகள் அதிகம் உள்ள பகுதிகளில் காணலாம்.
மோனார்க் பட்டாம்பூச்சி: மிக அழகான ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் இதன் உடலில் கருப்பு கோடுகள் இருக்கும். கண்ணுக்கு விருந்தான பூச்சியாகும் இது.
உராங்குட்டான்: இவற்றில் மூன்று இனங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு பசிபிக் தீவான சுபத்ராவிலும், மற்றொன்று போர்னியோவிலிருந்தும் வந்தவை. அவற்றின் நீண்ட சக்தி கொண்ட கால்களால் பெரும்பாலான நேரத்தை மரத்திலேயே செலவிடுகின்றன. 200 பவுண்டு வரை எடை கொண்ட ஆண் இனத்தை ஃப்ளாஞ்ச்ட் என்று அழைக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த இனம் தற்போது அரிதாகி வருகின்றது.

