மர வரிசை தெரியுமா? மர வரிசையைக் கடந்து மரங்கள் வளராது என்பது தெரியுமா?

Tree Line
Tree Line
Published on

வட துருவம், தென் துருவம், மற்றும் ஆல்ப்ஸ் போன்ற பிரதேசங்களில் மரங்கள் வளரக்கூடிய விளிம்புப் பகுதியினை மர வரிசை அல்லது மரக்கோடு (Tree Line or Timber Line) என்கின்றனர். மர வரிசைப் பகுதிகளுக்கு அப்பால் மரங்கள் வளர்வதில்லை. அப்பகுதியில் மிக மோசமான குளிர் அல்லது கடும் வெப்ப நிலை கொண்ட தட்ப வெப்பம் கொண்டிருப்பதால் அப்பகுதியில் மரங்கள் வளர இயலாது.

சூழலியல் மற்றும் நிலவியல் கொள்கைகளின் படி, மர வரிசைகள் பல வகையாக விளக்கப்படுகின்றன. அவை;

ஆர்க்டிக் மர வரிசை (Arctic Tree Line) 

வடதுருவத்தின் தூர வடக்கில் அமைந்த தூந்திரப் பகுதிகளில் மிகக்கடுமையான குளிர்நிலையும், உறைபனிக் கட்டிகளும் கொண்டிருப்பதால் இப்பகுதிகளில் மரங்கள் வளர்வதில்லை. மாறாக பாசிகள், புல், புதர்கள் மட்டுமே வளரக்கூடியதாகும்.

அண்டார்க்டிக்கா மர வரிசை (Antarctic Tree Line) 

தென் துருவத்தின் தூர தெற்கில், மேட்டு நிலங்களில் வளரக்கூடிய மர வரிசையாகும்.

அல்பைன் மர வரிசை (Alpine Tree Line) 

ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் மிக உயரமான பகுதிகள், ஆண்டு முழுவதும் கடும் குளிரும், தரைப்பகுதிகள் உறைபனியால் மூடிக் கொண்டிருப்பதால் இப்பகுதிகளில் மரங்கள் வளர்வதில்லை. மர வரிசைக்கு மேல் அமைந்த பகுதியில் ஆல்ப்ஸ் தட்பவெப்பம் நிலவுகிறது.

வெளிப்பாடு மர வரிசை (Exposure Tree Line) 

கடற்கரைப் பிரதேசங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பகுதிகளில், வலுவான காற்று வீசுவதின் காரணமாக மரங்கள் வளர்வது தடை செய்யப்படுகிறது.

பாலவன மர வரிசை (Desert Tree Line) 

மிகமிகக் குறைவான மழை பொழியும் பாலைவனப் பகுதிகளில் மரங்கள் வளர்வதில்லை.

நச்சு மர வரிசை (Toxic Tree Line)

எரிமலைக் குழம்புகள் வெளிப்படுத்தும் நச்சு வாயுக்கள், நச்சு வேதிப் பொருட்கள் சூழ்ந்த மலைப்பகுதிகளிலும், உப்பு நீர் கொண்ட சாக்கடல் மற்றும் பெரிய உப்பு ஏரி பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடுவதால் மரங்கள் வளர்வதில்லை.

இதையும் படியுங்கள்:
இறைச்சி உண்ணும் தாவரங்கள்! 
Tree Line

ஈரப்பத மர வரிசை (Wetland Tree Line) 

உவர் நீர் கொண்ட சதுப்பு நிலம் மற்றும் நீர்த்தடம் கொண்ட ஈரப்பதம் மிக்க நிலங்களில் ஆக்சிசன் மிகவும் குறைவாக இருப்பதால் மரங்கள் வளர்வதில்லை. உவர் நீரையும், குறைந்த ஆக்சிசனைக் கொண்டு வளரும் குட்டையான அலையாத்தித் தாவரங்கள் மட்டுமே இவ்வகையான நிலங்களில் வளரும் தன்மையைக் கொண்டவை.

மேற்காணும் மர வரிசை தவிர்த்து, வழக்கமான மர வரிசை இனங்களாகக் கீழ்க்காணும் மர வரிசைகளும் இருக்கின்றன. 

  • ஆர்க்டிக்கின் வடகிழக்கின் சைபீரியாவின் மர வரிசை

  • தகுரியன் லார்ச் (Dahurian Larch) மர வரிசை]

  • நரி வால் பைன் மர வரிசைகள் (Foxtail Pine) 

  • பைனஸ் லாங்கியா (Pinus longaeva)

  • பைனஸ் அரிஸ்டாடா (Pinus Aristata)

  • பைனஸ் கல்மினிகோலா (Pinus Culminicola) 

  • பைனஸ் பியுசு (Pinus Peuce) 

  • பைனஸ் அல்பிகௌலிஸ் (Pinus Albicaulis) 

  • சுவிஸ் பைன் மரங்கள் 

  • மலை பைன் மரங்கள் (Pinus Mugo)

  • பனிக்கோந்து மரங்கள் (Eucalyptus Pauciflora)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com