அலங்கார மரங்கள் தரும் அற்புத பயன்கள்!

Lifestyle articles
Trees
Published on

வீட்டின் வாசலில்  சில அலங்கார மரங்களை வளர்ப்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். அவற்றினால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம். 

பவள மரம்:

பவள மரத்தை வாசலில் வளர்த்து அதன் குளிர்ந்த காற்றை பெரும் பொழுது ஒரு இன்பம் உண்டாகும். வெப்பத்தை தணிப்பது,  மாசுவை கட்டுப்படுத்துவது போன்ற பண்புகள் இம்மரத்திற்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக தெய்வீகம் குடிகொண்ட மரம் என்றால் அது மகிழ மரம்தான். காலையில் எழுந்து வந்து பார்த்தால் மரத்திலிருந்து பவளமல்லி அழகாக உதிர்ந்து பவழ விரித்ததை போன்று அழகாக காட்சி தரும். 

நெட்டிலிங்கம்:

நெட்டிலிங்க மரம் வெள்ளை நிற பூக்களை கொடுப்பதுடன் இரவு நேரங்களில் நல்ல மணத்தை கொடுக்கும். இந்தியாவில் இந்த மரங்கள் விதைகளை கொடுப்பதில்லை. ஆகையால் இந்த  மரங்கள் குச்சிகள் அல்லது வேர்கள் மூலம்தான் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நெட்டிலிங்க மரம் 40 முதல் 50 அடி உயரம் வரை வளரக்கூடியது.

இம்மரத்தை விதை மூலமாகவோ பதியன் முறையின் மூலமாகவோ உற்பத்தி செய்யலாம். மிகவும் வேகமாக வளரக்கூடிய தன்மை உடையது நெட்டிலிங்க மரம். இந்த மரத்தின் விதைகளை பூந்தொட்டிகளில் ஜூன் ஜூலை மாதங்களில் போட்டு வளர்த்து, நன்கு வளர்ந்த நாற்றுக்களை பெரிய தொட்டி அல்லது வீட்டிற்கு முன்புறம் சுற்றுச்சுவரில் இருந்து 15 அடி தள்ளி நடலாம். 60 அடி உயரம் வரை வளரக்கூடியது. வீட்டிற்கு முன்பு புறம் நெட்டு நீங்க மரம் வளர்ந்து நிற்கும் காட்சி கண்ணுக்கு இனிமை தரக்கூடியது. 

மயில் கொன்றை:

இம்மரத்தை விதையின் மூலமாகவோ அல்லது குச்சிகளின் மூலமாகவோ உற்பத்தி செய்யலாம். விதைகளில் கடின மேலுறை இருப்பதால் சுடுதண்ணீரில் நன்கு ஊறவைத்து அந்த விதைகளை பயன்படுத்த வேண்டும். விதைத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் மரம் பூக்க ஆரம்பித்துவிடும். ஏப்ரல், மே, ஜூன் மாதம் இது பூப்பதற்கு ஏற்ற மாதம். சிவந்த நிற பூக்களை உடைய மயிர் கொண்டையை ரசிக்காதவர்கள் எவருமில்லை.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் கடற்காயல், கலிவேளி ஏரி எங்கு இருக்கிறதென்று தெரியுமா?
Lifestyle articles

இந்த மரத்தில் இலைகளைவிட மலர்களே அதிகமாக இருப்பதால் கண்களை கவரும் வண்ணம் பூக்கள் இருக்கின்றன. இவ்வளவு அழகான பூக்கள் பூப்பதால் இதை அலங்கார செடியாக பயன்படுத்துகின்றனர். வெயில் காலம் தொடங்கி விட்டாலே இதன் பூக்கள் மலர்ந்து அழகு தர ஆரம்பித்துவிடும். இதனால் இதற்கு அலங்கார கொன்றை என்ற பெயரும் உண்டு. 

மந்தாரை:

இம்மரம் விதைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. குளிர் காலத்தில் பூப்பதே இதன் சிறப்பம்சம். இந்த பூக்களின் வாசனைக்காகவே இது அலங்காரம் செடியாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் தெற்கு மேற்கு பகுதிகளில் வளர்க்கலாம். இதை வளர்த்தால் வியாபாரம் பெருகும். குழந்தைகளின் படிப்பு மேன்மையுறும். இதை வீட்டில் வளர்க்கும்போது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மந்தாரை இருக்கும்வரை நொந்தாரை காண முடியாது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அவ்வளவு மருத்துவ பயன்களை உடையது இது. அதன் இலையில் சாப்பிடுவது நல்லது.

கார்டினியா:

இந்த மர வகைகளை வீட்டின் ஜன்னல்களுக்கு அப்பால் வளர்ப்பதால் நல்ல மணத்தைக் கொடுக்கும். குறிப்பாக கோடை காலத்தில் இந்த வகை மரங்கள் நறுமணத்தைக் கொடுக்கும். 

மகிழமரம்:

மகிழ மரத்தை தொட்டிகளில் வளர்த்து பூக்கும் பொழுது அழகான தோற்றமும் நல்ல மணமும் கொடுக்கும். அதன் பூவை தலையில் சூடிக்கொள்ளலாம். இந்த மரம் நல்ல நிழல் தருவதாலும் தலையில் சூடிக்கொள்ள பூக்கள் வாசம் உடன் இருப்பதாலும் தோட்டத்திலும் அலங்கார செடியாகவும் வளர்க்கப்படுகிறது. மேலும் இதன் பட்டை, வேர் அனைத்தும் மருத்துவ பண்பு உடையது. 

இதையும் படியுங்கள்:
மாமிச உண்ணித் தாவரங்கள் எவ்வாறு சுற்றுச்சூழலின் பன்முகத்தன்மைக்கு உதவுகின்றன!
Lifestyle articles

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com