இந்தியாவின் 10 தூய்மையான நகரங்களில் முதல் இடத்தில் உள்ளது எது தெரியுமா?

10 cleanest cities in India
10 cleanest cities in India

ஒவ்வொரு ஆண்டும் ஸ்வச் சர்வேஷன் கணக்கெடுப்பில் நகரங்களில் உள்ள சுகாதாரம் தூய்மை முயற்சிகளில் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் தர வரிசைப்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் அழகு எதில் உள்ளது தெரியுமா? தூய்மையில் தான்!

ஒரு நகரத்தின் வளர்ச்சி, வாழ்வாதாரத்தின் முக்கிய குறிக்கோளாக தூய்மைதான் பட்டியலில் உள்ளது. அதில் இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரங்களை பார்ப்போம்.

1. 1. மத்திய பிரதேசம், இந்தூர்

Madhya Pradesh, indore
Madhya Pradesh, indore

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் இந்தூர் தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான தூய்மையான நகரமாக திகழ்கிறது.

இந்த நகரம் 2018 இல் இருந்து இப்போது 2025 வரை இந்தியாவில் தூய்மையான நகரமாக தரவரிசையில் உள்ளது. இது தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளது . இது சிறந்த கழிவு மேலாண்மை அமைப்புக்கு நன்கு அறியப்பட்டதாகும். விரிவான பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், திட்டமிட்ட கழிவுகளை அகற்றுதல், குப்பைகள் அள்ளுவது, மூடப்பட்ட சாக்கடைகள் மற்றும் தூய்மை ஆகியவை இந்த நகரத்தை கணக்கெடுப்பில் முதலிடத்தில் தரவரிசைப்படுத்தியுள்ளது.

2. 2) குஜராத் - சூரத்

Gujarat, surat
Gujarat, surat

இந்தியாவின் 2 வது தூய்மையான நகரம் என்ற பட்டத்தை சூரத் பெற்றுள்ளது.

ஜவுளி மற்றும் வைரங்களுக்கு பெயர் பெற்ற இந்த வணிக நகரம், பல ஆண்டுகளாக விரைவான வளர்ச்சிக்கு உட்பட்டு உள்ளது. மேலும் தூய்மையை பராமரிப்பது உள்ளிட்ட மாறும் மாற்றங்களை மாநகராட்சி உறுதி செய்துள்ளது. சூரியசக்தி திடக்கழிவு, மறு சுழற்சி போன்ற நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளை செயல்படுத்தி நகரத்தை தூய்மையாக வைத்திருக்க பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

3. 3. நவி மும்பை, மகாராஷ்டிரா

Navi mumbai, Maharashtra
Navi mumbai, Maharashtra

இந்தியாவின் தூய்மையா நகரங்களில் 3 வது இடத்தில் நவி மும்பை உள்ளது. அதன் பகுதியைச் சுற்றியுள்ள கழிவுகளை குறைத்து மறு பயன்பாடு செய்து மறுசுழற்சி செய்வதன் மூலம் இந்த நிலையை அடைந்துள்ளது.

இந்தியாவில் ஒரு சுத்தமான உற்சாகமான இடத்திற்கு நடை பயணம் அல்லது ஓய்வு பயணத்தை திட்டமிட்டால் நவி மும்பை சரியான தேர்வாக இருக்கும். கவனமாக கட்டமைக்கப்பட்ட நகரம். பல்வேறு நவீன நுட்பங்களை உள்ளடக்கியது. மற்றும் ஒரு நிலையான மூலதனத்தை நோக்கி அணி திரட்டி அதன் மூலம் மற்ற மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரு முன் மாதிரியாக அமைந்துள்ளது சுத்தத்தில்.

4. 4. சத்தீஸ்கர் - அம்பிகாபூர்

Chattisgarh, ambikapur
Chattisgarh, ambikapur

இந்தியாவின் தூய்மையா நகரங்களில் நான்காவது இடத்தில் கணக்கெடுப்பின்படி அம்பிகாபூர் பட்டியலில் உள்ளது. இது சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்றாகும். பயனுள்ள கழிவு மறுசுழற்சி மூலம் வருமானம் ஈட்டுவதால் தூய்மையான நகரம் என்ற அடையாளத்தை இது அடைந்துள்ளது. அம்பிகாபூர் கழிவுகளை திறம்பட மறுசுழற்சி செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி ஒரு முன் மாதிரியாக திகழ்கிறது.

5. 5. மைசூர் - கர்நாடகா

Mysore, karnataka
Mysore, karnataka

மைசூர் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம், அரண்மனைகளின் நகரம் என்று பிரபலமாக அறியப்பட்டுள்ளது. அரண்மனைக்கு மட்டுமல்ல சுற்றி பார்க்கவும் அல்லாமல் வீட்டு கழிவுகளை முறையாகப் பிரிப்பது திட்டமிட்ட கழிவு மேலாண்மை ஆகியவை தூய்மையான நகரங்களில் பட்டியலில் மைசூர் ஐந்தாவது இடத்தை பெற உதவியது.

6. 6. ஆந்திரா - விசாகப்பட்டினம்

Andhra,Visagapattinam
Andhra,Visagapattinam

விஜயவாடா என்பது 'வெற்றியின் இடம்' என்று அழைக்கப்படுகிறது. விசாகப்பட்டினம் இந்தியாவில் தூய்மையான நகரங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. சுவையான பழங்கள், இனிப்புகள் / இயற்கை எழில் கொஞ்சம் அற்புதங்கள், சுற்றுச்சூழல், கணக்கெடுப்பு மூலம் விசாகப்பட்டினம் இந்தியாவின் தூய்மையான நகரங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை நிலையான வளர்ச்சி அடிப்படையில் விசாகப்பட்டினத்தை ஒரு அடையாள நகரமாக முன்னேற இதன் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பயனுள்ள கழிவு மேலாண்மை அமைப்புகளுடன் கூடிய சுத்தமான சுற்றுப்புறம், சுற்றுச் சூழல் தூய்மையில் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.

7. 7. குஜராத் (அகமதாபாத்)

Gujarat, Ahmadabad
Gujarat, Ahmadabad

வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம். ஒரு தொழில் துறை மையம், கல்வி ஹாட்ஸ்பாட் என அற்புதமான நகரமாக குஜராத்தில் ஏழாவது மிக முக்கிய தூய்மை நகரங்களில் ஒன்றாகும். திட்டமிட்ட கழிவு, மேலாண்மை அமைப்பு காரணமாக இந்தியாவின் தூய்மையான நகரங்களில் பட்டியலில் இது குறிப்பிட்டு உள்ளது. கழிவுப் பிரிப்பு, அகற்றல் இதில் முக்கியத்தை சாத்தியமாக்கி உள்ளது. இதன் தூய்மையால் உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இது இந்தியாவின் 'மான்செஸ்டர் 'என்று அழைக்கப்படுகிறது.

8. 8. புதுடில்லி

New delhi
New delhi

இந்தியாவின் தூய்மையான நகரமாக 8வது இடத்தில் புது தில்லி பட்டியல் இடப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரமான டெல்லி மற்றும் நவீன புது டெல்லி கொண்ட ஒரு காஸ்மோபாலிட்டன் நகரமாகும். காற்று மாசுபாட்டை குறைக்க வடக்கு தில்லி நேசிப்பது கார்ப்பரேஷன் இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் இந்தியாவின் தூய்மையான நகரமாக உள்ளது. இதில் பட்டாசுகளை தடை செய்தல், கட்டுமான பணிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒற்றைப்படை இரட்டை வாகன சுழற்சி திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இதையும் படியுங்கள்:
HYBRID INTELLIGENCE – இரட்டை அறிவு... இனி அனைவருக்கும் வேணும்... உங்களுக்கும் தான்!
10 cleanest cities in India

9. மகாராஷ்டிரா - சந்திரபூர்

Maharashtra, chandrapur
Maharashtra, chandrapur

மகாராஷ்டிராவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சந்திரபூர் நகரம் சர்வேஷன் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் தூய்மையான நகரங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்த நகரம் சுற்றுலா பயணிகள் மற்றும் கட்டிடக்கலை பிரியர்களிடம் விரும்பத்தக்க விடுமுறை இடமாக கருதப்படுகிறது. இதன் தூய்மை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருங்கள்!
10 cleanest cities in India

10. 10. மத்திய பிரதேசம் - கார்கோன்

Madhya Pradesh, Khargone
Madhya Pradesh, Khargone

மத்தியபிரதேசத்தில் உள்ள கார்கோன் சிறிய அழகான பெரும் நகரமாகும். சர்வேஷன் கணக்கெடுப்பின் மூலம் இந்தியாவில் தூய்மையான நகரங்களில் பத்தாவது இடத்தில் பட்டியலில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் தூய்மை காரணமாக மத்திய பிரதேசம் இந்தியாவில் தூய்மையான மாநிலமாக உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட நகரங்கள் இந்தியாவில் தூய்மையான நகரங்கள் என்ற பட்டத்தை பெற்றுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com