விலங்குகளிலேயே மிகவும் கோமாளித்தனமாகச் செயல்படுபவை சிவப்பு நிற பாண்டாக்கள்தான். இவை குறித்த சில வேடிக்கையான, சுவாரசியமான விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. சிவப்பு நிற பாண்டாக்கள் கிழக்கு இமயமலையை பூர்வீகமாகக் கொண்டவை. இந்த விலங்குகள் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை மரங்களில் செலவிடுகின்றன. உயரமான இடங்களிலேயே உறங்குகின்றன.
2. சிவப்பு நிற பாண்டாக்கள் அளவில் மிகவும் சிறியதாக இருக்கும். ஒரு வீட்டுப் பூனையின் அளவிற்கு மட்டுமே இவை வளரும். ஆனால், அவற்றின் பெரிய புசுபுசு வால்கள் 18 அங்குலங்கள் இருக்கும்.
3. இவை ஏறக்குறைய வாழ்வின் 55 சதவீத நாட்களை உறக்கத்திலேயே கழிக்கின்றன. ஒரு நாளைக்கு இவை 20 மணி நேரம் வரை தூங்கும் இயல்புடையவை. அதிகாலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பின்னிரவு நேரத்திலும் அதிகாலையிலும் காலை உணவுக்கு தீவனம் தேடும்.
4. சிவப்பு நிற பாண்டாக்கள் பெரும்பாலும் தனித்து வாழவே விரும்பும். உண்மையில் சிவப்பு நிற பாண்டாக்கள் என்பது கரடிகள் அல்ல. இவை தனித்துவமான மூளை அமைப்பைக் கொண்டுள்ளன.
5. இவை சுற்றுச்சூழல் அமைப்புகளில் விதைப் பரவலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை உண்ணும் பழங்களில் இருந்து விதைகள் காடு முழுவதும் பரவுகின்றன.
6. சிவப்பு நிற பாண்டாங்கள் வாழும் புதை வடிவங்கள் என்று கருதப்படுகின்றன. ஏனெனில், அவை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய பாலூட்டிகளின் பல பண்புகளை தக்கவைத்துக் கொள்கின்றன. பரிணாமம் மற்றும் பாதுகாப்பு உயிரியியல் படிக்கும் விஞ்ஞானிகளுக்கு அவை கவர்ச்சிகரமான பாடங்களாக இருக்கின்றன.
7. இவை தங்களுக்குள்ளாக வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக தன்னுடைய வாலை இன்னொரு பாண்டாவுடன் சுற்றிக் கொள்கின்றன. இது சிவப்பு நிற பாண்டா அணைப்பு என அழைக்கப்படுகிறது.
8. சிவப்பு நிற மூங்கிலை விரும்பி உண்ணும் இயல்புடையவை இவை. அதன் தண்டுகளை கடிக்க கூர்மையான பற்களைப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு நாளும் மூங்கில் தளிர்களை தங்கள் உடல் எடையின் இருபதிலிருந்து 30 சதவீதம் வரை இவற்றால் சாப்பிட முடியும்.
9. இவற்றின் நகங்கள் மிகக் கூர்மையானவை. மூங்கில் தண்டுகளில் ஏறவும் ஓடுகளை திறக்கவும் பழங்களை உண்ணவும் அவை பயன்படுகின்றன.
10. சிவப்பு நிற பாண்டாக்கள் பச்சோந்தியைப் போல செடி கொடிகளுக்கு இடையில் மறைந்து கொள்ளும் இயல்புடையவை. இவற்றின் உடலுக்கு தனித்துவமான கோட் போன்ற அமைப்பு இருக்கும். எனவே, அதன் ஒளியை பொறுத்து பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறமாக மாறும். காட்டில் கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாமல் கூட இவை இருக்கும்.
11. பாண்டாக்கள் நம்ப முடியாத அளவிற்கு சுறுசுறுப்பானவை. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு எளிதாக ஊசலாடும். அவை சிறிய ரோமம் கொண்ட நிஞ்சாக்கள் போன்றவர்கள். தங்கள் முகங்களை வேடிக்கையாக விளையாட்டுத்தனமாக பலவித போஸ்களில் வைத்துக்கொள்ளும். இவை விலங்கு ராஜ்ஜியத்தின் கோமாளிகள் என அறியப்படுபவை.
மனித செயல்பாடு மற்றும் காடுகளின் அழிப்பு காரணமாக இந்த உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. இவற்றின் இருப்பை மக்களுக்கு தெரிவிக்கவும் இவற்றை பாதுகாக்கவும் சர்வதேச ரெட் பாண்டாக்கள் தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.