பவளப்பாறைகள் கடலின் மழைக்காடுகள்!

Coral reefs
Coral reefs
Published on

பவளப்பாறைகள் அவற்றின் அதீதமான பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் அவற்றின் சேவைகள் காரணமாக கடலின் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. கடல் தளத்தின் ஒரு பங்கு சதவீதமே இவை இருந்தாலும் அனைத்து கடல்வாழ் உயிரினங்களிலும் 25 சதவீதத்தை இவை ஆதரிக்கின்றன என்பது ஆச்சரியமான ஒன்றாகும். பவளப்பாறைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

கடலின் மழைக்காடுகள் என பவளப்பாறைகள் அழைக்கப்படுவதன் காரணங்களும் அதன் முக்கியத்துவமும்.

1. பல்லுயிர் பெருக்கத்தின் தாயகம்

பவளப்பாறைகள் அசாதாரணமான பல்வேறு வகையான உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகின்றன. ஆயிரக்கணக்கான மீன் வகைகள் முதுகெலும்பில்லாத உயிரினங்களான நண்டுகள், கடல் ஆமைகள், கடல் பாலூட்டிகள் உட்பட மில்லியன் கணக்கான கடல் உயிரினங்களுக்கு வாழ்விடம், உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை வழங்குகின்றன. பவளப்பாறைகள் இல்லாமல் இந்த கடல் வாழ் உயிரினங்களில் பெரும்பாலானவை உயிர் வாழ முடியாது. இது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் கடுமையான ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கிறது.

2. கடலோர பாதுகாப்பு

பவளப்பாறைகள் இயற்கையான பிரேக் வாட்டர்களாக செயல்பட்டு கடற்கரை ஓரங்களில் அலைகள், புயல்கள் மற்றும் சுனாமிகளின் தாக்கத்தை குறைக்கின்றன. அவை 97 சதவீதம் வரை ஆற்றலை உறிஞ்சி, குடியிருப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் சதுப்பு நிலக்காடுகள் மற்றும் கடல் புல் படுகைகள் போன்ற முக்கியமான கடலோர வாழ்விடங்களை அரிப்பு மற்றும் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கின்றன.

3. மீன்வளம் மற்றும் உணவு பாதுகாப்பு

உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் குறிப்பாக கடலோர சமூகங்கள் மற்றும் சிறிய தீவு நாடுகளில் புரதம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக பவளப்பாறைகளை நம்பியுள்ளனர். வணிக ரீதியான முக்கியமான பல மீன் இனங்களுக்கு பாறைகள் நாற்றங்கால்களாக செயல்படுகின்றன. உள்ளூர் மற்றும் உலகளாவிய மீன் பிடித்தலை ஆதரிக்கின்றன. ஒரு ஆரோக்கியமான பாறை ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதுர கிலோ மீட்டர் கணிசமான அளவு கடல் உணவை விளைவிக்கும்.

4. பொருளாதார மதிப்பு

பவளப்பாறைகள் மிகப்பெரிய சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. அவை ஸ்னோர்கெல்லிங், டைவிங் மற்றும் பொழுதுபோக்குக்காக மீன் பிடிக்கும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இதனால் உலக அளவில் சுற்றுலா மூலம் பில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக ஈட்டித் தருகிறது.

5. புதிய மருந்துகளின் ஆதாரங்கள்

பவளப்பாறைகளில் வாழும் பல்வேறு உயிரினங்கள் தனித்துவமான உயிர் வேதியியல் சேர்மங்களை உருவாக்குகின்றன. புற்றுநோய், மூட்டு வலி, எச்.ஐ.வி, இருதய நோய்கள் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சாத்தியமான சிகிச்சைகளுக்காக விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய மருந்து அலமாரியாக கருதப்படுகின்றன.

6. கலாச்சார மற்றும் அழகியல் மதிப்பு

பவளப்பாறைகள் பல பழங்குடி மற்றும் கடலோர சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை தருகின்றன. இவற்றின் அழகு மற்றும் சிக்கலான கட்டமைப்புகள் உலகளாவில் மக்களுக்கு பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் தூண்டுகின்றன.

இதையும் படியுங்கள்:
பேன்ட்டில் உள்ள எண்ணெய் கரையை நீக்கும் சில எளிய வழிகள்!
Coral reefs

7. கார்பன் சுழற்சி

பவளப்பாறைகள் உலகளாவிய கார்பன் சுழற்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. தங்கள் எலும்புக்கூடுகளை கால்சியம் கார்பனேட்டிலிருந்து உருவாக்குகின்றன. இது நீரில் இருந்து கார்பனை பிரித்தெடுக்கும் ஒரு செயல் முறையாகும்.

8. இயற்கை வடிகட்டிகள்

பவளப்பாறைகள் கடலின் இயற்கை வடிகட்டிகளாக செயல்படுகின்றன. கடலில் உள்ள மாசுபடுத்திகள் மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்துகளை அகற்றுவதன் மூலம் தண்ணீரை தெளிவாக வைத்திருக்க உதவுகின்றன. பவளப்பாறைகள் நீருக்கடியில் இருக்கும் அழகான தோட்டங்கள் மட்டுமல்ல அவை கடலின் ஆரோக்கியத்திற்கும் எண்ணற்ற உயிர்களின் நல்வாழ்வுக்கும் உலக மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியமானவை.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் 2 நாட்கள் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Coral reefs

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com