யானையின் பிளிரல்கள் குறித்து தெரிந்து கொள்வோமா?

Elephant's tusks
Elephant's tusks
Published on

ம்முடைய சாலைகளில், கோயில்களில், திரைப்படங்களில், தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கும் உலகத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானையை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. அத்தகைய யானையின் உரையாடல்களான பிளிரல்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

நேருக்கு நேர் தாக்க வந்தால் சிங்கத்தை யானை வென்றுவிடும் அளவுக்கு வலிமையானது என்பதால்  சிங்கம் யானையின் பின்னால் இருந்துதான் தாக்கும்.

கேட்டவுடன் அச்சத்தை ஏற்படுத்தும் யானையின் பிளிறல் என்பது உண்மையிலேயே யானையின் பேச்சுக்கள் தான் . தும்பிக்கை அசைவும், காது அசைவும், யானையின் பிளிறலும் யானைகளின் உலகத்தில் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன.

கூட்டம் கூட்டமாக வசிக்கும் யானைகளுக்கு வயதில் மூத்த பெண் யானைகளே தலைவியாக இருக்கின்றன. சில நேரங்களில் மட்டும் கூட்டத்துடன் சேரும் ஆண் யானைகள் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன.

காட்டுக்குள் வசிக்கும் யானைகளின் பேச்சு குரலே இந்த பிளிரல்கள். குட்டி யானைகளின் குறும்பை கட்டுப்படுத்த சில நேரம் பெரிய யானைகள் பிளிறும். மனிதர்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாகவும் தொலைவில் இருப்பவர்களிடம் உரக்கவும்  பேசுவார்கள் இதற்கு யானைகள் நேர் எதிர்.

யானைகள் தொலைவில் உள்ள யானைகளுடன் பேசுவதற்காக குறைந்த அதிர்வெண் கொண்ட அதாவது 14 - 35 HZ ஒலிகளை எழுப்புகின்றன.இதற்கு 'இன்ஃப்ராசோனிக் அதிர்வுகள்' என்று பெயர். 

இந்த 'இன்ஃப்ராசோனிக்' அதிர்வுகள் நீண்ட அலை நீளம் கொண்டவையாக இருப்பதால் எந்தத் தடையும் இல்லாமல் காடுகளில் பயணம் செய்வதோடு மலைகளைச் சுற்றி வளைந்து செல்லவும் முடியும் . சுற்றுப்புற சூழல் சாதகமாக இருந்தால் 10 கிலோ மீட்டர் வரை செல்லும் இந்த அலைகள் காற்று வழியாக செல்வது போல் நிலத்தின் வழியாகவும் பல கிலோமீட்டர் தூரம் இந்த அலைகள் பயணம் செய்யும்.

இதையும் படியுங்கள்:
உயிர்களைக் காக்கும் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பது எப்படி?
Elephant's tusks

இந்த அதிர்வுகள் யானைகளின் கால்கள் வழியாக உடலுக்குள் சென்று, தோள்பட்டைகள் வழியாக நரம்பு மண்டலத்தை அடைந்து, மூளைக்குச் செல்கின்றன. தும்பிக்கையை நிலத்தில் வைத்தும் அதிர்வுகளை உள்வாங்குவதால் மூளை அந்த அதிர்வுகளைச் செய்தியாக உணர்கிறது.

இந்த அதிர்வுகள் மூலம் தவறிப்போன குட்டியானைகளை அழைப்பதோடு, ஆபத்து வரும்போது மற்ற யானைக் கூட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, எந்த மனநிலையில் இதை அனுப்பியுள்ளது என்று மற்ற யானைகளுக்கு புரிய வைப்பதோடு, தேவைப்படும் சமயங்களில் உதவியும் கேட்கின்றன.

ஒலி, அதிர்வு மட்டுமல்ல, தொடுதலும் ஒருவிதமான தகவல் பரிமாற்றம்தான்.அதில் யானைகளின் தும்பிக்கை ஒரு முக்கியமான தகவல் பரிமாற்றக் கருவி!

தும்பிக்கையை வைத்து அன்பை பரிமாறும் அம்மா யானை, வால்களைப் பிடித்தபடி நீண்ட வரிசையில் அழைத்து செல்லும் யானைகள் எல்லாம் 'நாங்கள் நெருங்கிய உறவினர்கள். பாதுகாப்பாக இருக்கிறோம்' என்பதை உணர்த்துவதற்காகதான்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் 10 தூய்மையான நகரங்களில் முதல் இடத்தில் உள்ளது எது தெரியுமா?
Elephant's tusks

காது மடல்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் யானைகள் , விரிந்த காதுகளுடன் இருந்தால் ஆபத்து அல்லது எச்சரிக்கை என்று அர்த்தம். அதுவே தளர்வாக இருந்தால் அமைதியான மனநிலையில் இருக்கிறது என்று அர்த்தம். யானை பரபரப்புடன் மன அழுத்தத்துடன் இருக்கும்போது , காதுகளை அடிக்கடி அசைப்பதால் கவனமாக இருக்கவேண்டும்.

யானைகளைப் பற்றிய ஆய்வில் உள்ள அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரியா துர்காலோ ,'எலிஃபாண்ட் டிக்‌ஷ்னரி' என்ற அகராதியில் கூறி இருக்கிறார். இந்த அகராதி வெளியே வரும்போது மனித யானை மோதல்களை தவிர்க்க முடியும் என்பது நிச்சயமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com