டாய்லெட் பேப்பர்: ஒரு சாதாரண காகிதத்தின் பின்னால் இருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவு!

toilet-paper-production
toilet-paper-production
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on

டாய்லெட் பேப்பர் அப்படின்னா, கழிப்பறையில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரண காகிதம்தான். நம்ம தினசரி வாழ்க்கையில் அது ஒரு முக்கியமான பொருளா மாறிடுச்சு, குறிப்பா வெளிநாடுகளில் இது ரொம்ப பொதுவா பயன்படுத்தப்படுது. பயன்படுத்த எளிது, எங்க வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதால பலர் இதை விரும்புறாங்க.

நம்மில் பலர் இதைப் பற்றி ரொம்ப யோசிச்சு பார்த்திருக்க மாட்டோம். இந்த சின்ன காகிதத்துக்காக எவ்வளவு மரங்கள் வெட்டப்படுது, எவ்வளவு நீரும் மின்சாரமும் செலவாகுது என்ற விஷயங்கள் இப்போதான் அதிகமா பேசப்பட ஆரம்பிச்சிருக்குது. அதனால தான் இப்போ டாய்லெட் பேப்பருக்கு மாற்று என்னன்னு பலரும் ஆராய ஆரம்பிச்சிருக்காங்க.

இப்போதைய காலத்தில் சுற்றுச்சூழலை காப்பாத்தணும் என்ற விழிப்புணர்வு நிறைய பேருக்கு வந்திருக்கிறது. தினசரி நாம் பயன்படுத்தும் சின்ன சின்ன பொருட்கள்கூட இயற்கைக்கு என்ன பாதிப்பு கொடுக்குது என்று பலர் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுல முக்கியமா பேசப்படுற விஷயங்களில் ஒன்று — டாய்லெட் பேப்பருக்கு மாற்று என்னன்னுதான்.

கடந்த சில ஆண்டுகளாக மூங்கில் நாரால் செய்யப்பட்ட டாய்லெட் பேப்பர் ரொம்ப பிரபலமா ஆகிட்டுச்சு. மூங்கில் சீக்கிரம் வளரும் தாவரம் என்பதால், மரங்களை வெட்டாமலே காகிதம் தயாரிக்கலாம் என்ற எண்ணம் இதுக்கு ஆதரவா இருந்தது. “சுற்றுச்சூழலுக்கு நல்லது”, “மரங்களை காப்போம்”ன்னு சொல்லி இதை நிறைய பேர் வாங்க ஆரம்பிச்சாங்க. அதனால் இதுதான் சிறந்த தேர்வு என்று பலரும் நம்பினாங்க.

ஆனா மூங்கில் தாவரம் நல்லதுதான், ஆனா அதை டாய்லெட் பேப்பரா மாற்றும்போது தொழிற்சாலைகள்ல நிறைய மின்சாரம், எரிசக்தி செலவாகுது. குறிப்பா நிலக்கரி மின்சாரம் பயன்படுத்துற இடங்கள்ல தயாரிக்கிறதுனால, சில நேரங்களில் இது சாதாரண மரக்காகிதத்தைக் காட்டிலும் கூட அதிக கார்பன் வெளியீட்டை உண்டாக்குது. அதனால் “புதியது என்றாலே நல்லது”ன்னு உடனே நம்பாமல், கொஞ்சம் யோசிச்சு தேர்வு பண்ணணும் என்பதுதான் இங்க கிடைக்கும் பாடம்.

இதையும் படியுங்கள்:
வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பூத்துக் குலுங்க... இதோ ஒரு மேஜிக் இயற்கை உரம்!
toilet-paper-production

இதுக்கிடையில் இன்னொரு பிரச்னையும் இருக்கு. “Flushable wipes”ன்னு சொல்லப்படும் துணிகள் பயன்படுத்த ரொம்ப ஈசியா இருக்கும். ஆனா அவை நீர்ல சரியாக கரையாது. அதனால் குழாய்களில் சிக்கிக்கிட்டு, பெரிய குப்பை கட்டிகளா மாறிடும். இதனால் பெரிய நகரங்களின் கழிவுநீர் அமைப்புக்கு பெரிய பிரச்னை ஏற்படுது.

இந்த சூழ்நிலையிலதான் தண்ணீர் பயன்படுத்தும் முறைகள் மீண்டும் முக்கியமா பார்க்கப்படுது. Bidet மாதிரி முறைகள், டாய்லெட் பேப்பர் பயன்பாட்டை ரொம்பக் குறைக்க உதவுது. இது சுத்தமா இருக்கும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

இது எல்லாம் நமக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லுது. ஒரு பொருள் எதிலிருந்து தயாரிக்கப்படுது என்பதைக் காட்டிலும், அது எப்படி தயாரிக்கப்படுது என்பதுதான் முக்கியம். அதனால் சுற்றுச்சூழலுக்கு நல்ல தேர்வு பண்ணணும்னா, முழுசா யோசிச்சு முடிவு எடுக்கணும். சின்ன சின்ன மாற்றங்களே பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.

மேலும், டாய்லெட் பேப்பர் பயன்பாடு உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. இது ஒரு மறைமுகமான சுற்றுச்சூழல் சுமையா மாறிடுச்சு. தினமும் பயன்படுத்துற இந்த சின்ன பொருளுக்காகவே கோடிக்கணக்கான மரங்கள் வெட்டப்படுது. அதுக்கு மேல, அதை தயாரிக்கவும், எடுத்துச்செல்லவும், குப்பையா மாற்றவும் நிறைய நீரும், மின்சாரமும் செலவாகுது. நாம கவனிக்காமலே ஒரு பெரிய பாதிப்பு உருவாகிக்கிட்டே இருக்கு.

மாற்றம் செய்யணும்னா பெரிய விஷயமெல்லாம் தேவையில்லை. தேவையில்லாம டாய்லெட் பேப்பர் அதிகமா பயன்படுத்தாம இருக்கலாம். மாற்று வழிகளை முயற்சி பண்ணலாம். இல்லையென்றால் தண்ணீர் பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரலாம். இப்படி ஒவ்வொருவரும் சின்ன சின்ன மாற்றம் செய்தா, அதோட தாக்கம் ரொம்ப பெரியதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் அதிசயம்: சிப்பியின் தற்காப்பு எப்படி விலையுயர்ந்த முத்தாக மாறுகிறது?
toilet-paper-production

இயற்கை நமக்கு தர்ற வளங்கள் எல்லையில்லாதது இல்லை. நாம் இன்று எடுக்கிற முடிவுகள்தான் நாளைய உலகத்தை தீர்மானிக்கும். அதனால் சுத்தம், வசதி மட்டும் இல்லாமல், சுற்றுச்சூழலையும் நினைச்சு வாழணும். சின்ன மாற்றங்கள் மூலமா நாம ஒரு பசுமையான, சுத்தமான உலகத்தை நம் எதிர்கால சதந்ததியினருக்கு உருவாக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com