

காற்று மாசு, மண் மாசு, ஒலி மாசு, நீர் மாசு, சுற்றுச்சூழல் மாசு என பல்வேறு மாசுக்களை நாம் அறிவோம். மழைக் காலத்தில் சரியான வெப்பநிலை வருகிறது. சாதாரண நிலையில் கனமழை பெய்கிறது. இவை எல்லாம் கால நிலை மாற்றம் என்பதால்தான். உலகிலேயே மிகவும் மாசு உள்ள நகரம் டெல்லிதான்.
வானத்தில் ஓசோன் என்ற போர்வையில் ஓட்டை விழுந்துவிட்டது. இதற்குக் காரணம் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்ட குளிர் சாதனப் பெட்டி வெளியேற்றும் வாயுவே காரணம் என்று எப்போதோ விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள்.
ஆனால், மிக முக்கிய நாடுகள் தட்பவெப்பநிலை மாறுவதால் உலகம் அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டன் என்று பல மாநாடுகள் போட்டுவிட்டு பறந்து விடுகிறார்கள். இது துரதிருஷ்டம். பல்வேறு நாடுகளிலும் எந்த செயல்திட்டமும் இல்லை.
குளோபல் வார்மிங் இல்லாமல் செய்வது உலகம் நல்லபடி இருப்பதற்கான முதல் படி. பல்வேறு நாடுகளில் இதை பற்றிய விழிப்புணர்வுகூட இல்லை.
காற்று மாசு:
பெரும்பாலும் கனரகப் போக்குவரத்து வாகனங்களால் ஏற்படுகிறது. மேலும், மருத்துவக் குப்பைகள், பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் காற்று மாசடைகிறது. பட்டாசுகள் வெடிப்பதால் மற்றும் குப்பையை எரிப்பதால் காற்று மாசு எற்படுகின்றது.
மண் மாசு:
சுற்றுலா வரும் நபர்கள் கண்ட கண்ட இடங்களில் பிளாஸ்டிக் பைகளை வீசி எறிவதால் ஏற்படும் மோசமான விளைவுகளால் மண் மாசு அடைகிறது. முக்கியமாக பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்குகள் இரண்டு.
1. வனவிலங்குகள் பிளாஸ்டிக்கை தின்று மடிகின்றன.
2. பிளாஸ்டிக் குப்பைகளில் தண்ணீர் ஊடுருவி மரத்திற்குச் செல்லாமல் செய்கிறது.
நீர் மாசு:
பெரும்பாலும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால்தான் நீர் மாசு அடைகிறது. இதைச் சமாளிக்க எந்தத் திட்டமும் இல்லை. உலகில் புனித நதியாக கங்கை கருதப்படுகிறது. ஆனால், தற்போது கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளால் அதிக மாசு நிறைந்த நதியாக கங்கை மாறியுள்ளது.
சுற்றுசூழல் மாசு:
மேலே கூறிய காரணங்களால்தான் மாசு தோன்றுகிறது.
மக்கும் குப்பைகள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவை மண்ணோடு மண்ணாக மக்கி விடுகின்றன. எந்தவித ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால், மக்கா குப்பைகள் உலகிற்கே அழிவைக் கொண்டு வந்துவிடும்.
வளர்ந்த நாடுகளில்கூட மாசு கட்டுப்பாட்டுத் திட்டம் பற்றிய ஆராய்ச்சியோ செயல்திட்டமோ இல்லை. ஐ. நா. கூட வெறும் அறிக்கைகள்தான் வெளியிடுகிறது.
சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மாசு கட்டுப்பாட்டு அமைப்பை உண்டாக்க வேண்டும். அந்த அமைப்பு வெறும் அறிக்கை அமைப்பாக இருக்கக்கூடாது. நல்ல செயல் திட்டம் நடைமுறை படுத்த வேண்டும். உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமக்கு பின்னால் வரும் சந்ததிக்கு ஒரு நல்ல சுகாதார, பசுமையான உலகை விட்டுச் செல்ல வேண்டும்.
உலக மக்கள் ஒன்றிணைந்தால் எப்பேற்பட்ட மாசையும் கட்டுப்படுத்தலாம்.