6000 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுத்த ஐரோப்பிய முரட்டு காளைகள்!

6000 ஆண்டுகளாக காணாமல் போன ஐரோப்பிய முரட்டு காளைகள் ப்ளீன் பைசன் திட்டம் மூலம் இங்கிலாந்து காடுகளில் மீண்டும் எப்படி சாதனை படைத்துள்ளன என்பதை அறிக.
ஐரோப்பிய முரட்டு காளைகள் | European bison
ஐரோப்பிய முரட்டு காளைகள் | European bisonImage credit: Gemini AI
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

6000 ஆண்டுகளுக்கு மேல் மனிதர்களின் கண்களில் படாமல் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஐரோப்பிய முரட்டுக்காளைகள், இங்கிலாந்தின் மேற்கு ப்ளீன் காடுகளில் தற்போது விந்தையான முறையில் மீண்டும் உலா வரத் தொடங்கியுள்ளன. ‘ப்ளீன் பைசன் திட்டம்’ என்ற நவீன வனப்பாதுகாப்பு முயற்சி மூலம் கொண்டு வரப்பட்ட இந்தக் காளைகள், சுற்றுச்சூழலின் சமநிலையை எவ்வாறு அற்புதமாக மீட்கின்றன? இயற்கையின் இந்த வியக்கத்தக்க திருப்புமுனை மற்றும் காடுகளைக் காக்கும் அவற்றின் ரகசியப் பங்களிப்பைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.

6000 வருடங்களாக காணப்படாத ஐரோப்பிய முரட்டு காளைகளை தற்போது மேற்கு ப்ளீன் மற்றும் தாம்டென் காடுகளில் காணமுடிகிறது. காடுகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் தற்போது இந்த காளைகளைக் காணமுடிகிறது‌. பிபிசியின் தகவல்படி இந்த ஐரோப்பிய முரட்டு காளைகள் ஸ்காட்லாண்டிலிருந்து சைபீரியா வரை உலாவிக் கொண்டிருந்தது. பிறகு இருபதாம் நூற்றாண்டில் காணாமல் முற்றிலும் மறைந்து போனது. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ப்ரிட்டன் அடுத்த முயற்சியால் தற்பேது அவை மீண்டும் திரும்பியுள்ளன.

இந்தக் காளைகளின் வாழ்க்கைமுறை மற்றும் அவற்றின் மேயும் குணம் மூலமாக சுற்றுச்சூழல் நல்ல ஆரோக்கியமானதாக அறியப்பட்டுள்ளது.

காளைகளை கொண்டு வர ப்ளீன் பைசன் திட்டம்:

கான்டெபரியில் உள்ள மேற்கு ப்ளீன் மற்றும் தாம்டென் காடுகள் இணைந்து ப்ளீன் பைசன் ப்ராஜெக்ட் (Blean bison project) என்ற திட்டம் மூலம் காளையின் வருகை சாத்தியமாகியிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ட்ரோன்களுக்கு சவால் விடும் பூச்சி சிறகுகள்... தும்பிகள் பறப்பதில் உள்ள பெரிய ரகசியம்!
ஐரோப்பிய முரட்டு காளைகள் | European bison

2022 ம் ஆண்டில் இயற்கையான காடுகளை மீட்க wildwood Trust and Kent Wildlife Trust என்ற திட்டத்தை ஆரம்பித்தது‌ காளைகளை மேய விட்டு காட்டுப்பகுதியை பாதுகாக்கவே இத்திட்டம் தொடங்கப்பட்டது‌. ஐரோப்பிய முரட்டு காளைகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறியாளர் போல் செயல்படுகின்றன. இயற்கையான முறையில் காடுகளை பாதுகாக்க இத்திட்டம் முயற்சியைத் தொடங்கியது‌.

காளைகளின் பங்களிப்பு:

தங்கள் வாழ்க்கைமுறை மூலம் ஐரோப்பிய காளைகள் சுற்றுச்சூழலை நல்ல ஆரோக்கியமாக வைக்கின்றன என்பது அறியப்பட்டிருக்கிறது‌. இவை புழங்கும் இடத்தை சூழலையே மாற்றக்கூடிய அளவில் இக்காளைகளின் வாழ்க்கை முறை அமைந்துள்ளது‌. இவை காட்டில் உள்ள மரங்களில் தங்கள் உடலைத் தேய்ப்பதன் மூலம் அதிலிருந்து உதிர்ந்து விழும் பட்டைகள் மரங்கொத்தி பறவைகளுக்கு உணவாகி அவற்றை அதிகம் வளரச்செய்கின்றன.

மேலும் இதன் மேய்ச்சல் மூலம் வௌவால்களும் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த இடம் முழுவதும் புழுக்கள், காட்டுப் பூக்கள் மற்றும் பல்லிகள் வளரும் இடமாக மாறுகின்றன. இந்த காளைகளின் மேய்ச்சல் மூலம் பூமியில் புதைந்த விதைகள் வெளியில் கொண்டுவரப்பட்டு வளரும் நிலையை உருவாக்குகின்றன.

ஐரோப்பிய முரட்டு காளைகள் | European bison
ஐரோப்பிய முரட்டு காளைகள் | European bison

2022ம் ஆண்டு காளை மாடுகளின் உற்பத்திக்காக திட்டம் தொடங்கியது. இதற்காக ஸ்காட்லாந்த், அயர்லாந்த் மற்றும் ஜெர்மனியில் இருந்து நான்கு காளைகள் வரவழைக்கப்பட்டன. இரண்டு பெண் இனங்கள் அயர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டன. இரண்டு பெண் இனங்கள் ஒவ்வொன்றும் ஒரு காளையை ஈன்றன. நான்கில் இருந்து தற்போது இங்கு அதிக அளவில் முரட்டுக் காளைகள் சேர்ந்துள்ளன. இதன் இனம் தற்போது அதிகமாகியுள்ளது வரவேற்கத்தக்கது‌.

ஐரோப்பிய முரட்டு காளைகள் வாழ்வியல் மிக கடினமான காடுகளைக்கூட நல்ல ஆரோக்கியமாக மாற்றுவதை அறிய முடிகிறது‌. அவற்றின் மேய்ச்சல் மற்றும் விதைகளை பல இடங்களில் பரவச் செய்வது போன்ற நடவடிக்கைகளால் காட்டின் சூழல் இயற்கையான முறையில் பாதுகாக்கப்படுகிறது.

ஐரோப்பிய காளைகள் ஐரோப்பாவின் அடையாளமாக விளங்கும். 19ம் நூற்றாண்டு முடிவில் அது முற்றிலும் மறைந்தது‌. தற்போது ப்ளீன் பைசன் ப்ராஜெக்ட் திட்டத்தால் அவற்றின் இனங்கள் பெருகியுள்ளது. மனித முயற்சியால் 6000 ஆண்டுகளாக அழிந்த இடமாகக் கருதப்பட்ட ஐரோப்பிய முரட்டுக்காளை இனம் மீண்டும் அதிகமாகியுள்ளது. காடுகளின் சூழலை நன்கு பாதுகாக்க ஐரோப்பிய முரட்டுக் காளைகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது‌.

இதையும் படியுங்கள்:
தபீர்: ஜாகுவாருக்கே டஃப் கொடுக்கும் விசித்திர விலங்கு!
ஐரோப்பிய முரட்டு காளைகள் | European bison

இயற்கைச் சூழலை மீட்டெடுக்கும் அதிநவீன வனப்பாதுகாப்பு முறைகளையும், அழிந்துவரும் உயிரினங்கள் எவ்வாறு பூமியின் சமநிலையை நிலைநிறுத்துகின்றன என்பதையும் ஆழமாகப் புரிந்து கொண்டு நமது இயற்கையைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com