ஐரோப்பாவின் கோபக்கார மலை: மவுன்ட் எட்னாவின் ரகசியங்கள்!

Europe's tallest volcano
mount etna volcano
Published on

த்தாலியின் சிசிலி (Sicily) தீவில் அமைந்துள்ள மவுன்ட் எட்னா (Mount Etna) உலகின் மிகப்பெரிய செயலில் இருக்கும் எரிமலைகளில் ஒன்று. இது ஐரோப்பாவின் உயரமான எரிமலை மட்டுமல்லாமல், உலகில் தொடர்ச்சியாக அதிகம் வெடித்து கொண்டிருக்கும் எரிமலையாகவும் கருதப்படுகிறது. இதன் இயற்கை அழகு, வெடிப்பு தன்மை, புவியியல் முக்கியத்துவம் ஆகியவை காரணமாக இது UNESCO உலக பாரம்பரிய சின்னமாக 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

புவியியல் நிலை: சிசிலி தீவின் கிழக்குக் கரையில், மெசினா (Messina) மற்றும் கத்தானியா (Catania) நகரங்களுக்கு இடையில். சுமார் 3,329 மீட்டர் (10,922 அடி). ஆனால் அடிக்கடி வெடிப்புகள், லாவா பாய்ச்சல்கள் காரணமாக உயரம் மாறிக்கொண்டே இருக்கும். ஸ்ட்ராட்டோ எரிமலை (Strato volcano) – பல அடுக்குகளில் லாவா, சாம்பல், கற்கள் சேர்ந்து உருவான பெரிய எரிமலை வகையை சார்ந்தது.

வரலாறு: முதல் பதிவான வெடிப்பு கிமு 1500-ஆம் ஆண்டுகள் சுற்றில். கடந்த 2,700 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட பெரிய சிறிய வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.1669-இல் நிகழ்ந்த வெடிப்பில் கத்தானியா நகரின் பெரும்பகுதி அழிந்தது. 1992-இல் நிகழ்ந்த வெடிப்பில் பெரும் லாவா ஓட்டத்தை கட்டுப்படுத்த, மனிதர்கள் கான்க்ரீட் தடைகள் கட்டிய நிகழ்வு உலகில் பிரசித்தமானது.

எரிமலை செயல்பாடுகள்: எட்னாவின் வெடிப்புகள் வெடிப்பு (explosive eruptions) மற்றும் பாய்ச்சல் (effusive eruptions) என இருவிதமாக இருக்கும்.

வெடிப்பு: சாம்பல், கற்கள், வாயுக்கள் வானில் பறக்கின்றன.

பாய்ச்சல்: லாவா நிலப்பரப்பில் பாய்ந்து நகரங்கள், விவசாய நிலங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துகிறது. வருடத்திற்கு பல முறை சிறிய வெடிப்புகள் நிகழ்வது சாதாரணம்.

அறிவியல் முக்கியத்துவம்: பூமியின் உள்நிலை இயக்கங்கள், புவியியல் மாற்றங்கள், எரிமலை ஆராய்ச்சிகளுக்கு எட்னா ஒரு இயற்கை ஆய்வுகூடமாக கருதப்படுகிறது.

எரிமலையின் அடிக்கடி நடக்கும் வெடிப்புகள், புவியியல் அறிவியலாளர்கள் எதிர்கால வெடிப்புகளை முன்கூட்டியே கணிக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
உருகும் பனியும்; உருக்குலையும் கலைமான்களும்: ஒரு இனமே அழியும் அபாயம்!
Europe's tallest volcano

பூமியின் உள் ஆற்றல், பிளேட் டெக்டானிக்ஸ் (Plate Tectonics) ஆகியவற்றை புரிந்து கொள்வதில் இங்கு நடைபெறும் ஆய்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுற்றுச்சூழல் & பொருளாதாரம் எட்னா எரிமலை சுற்றுப்பகுதிகள் மிகச் செழிப்பான நிலம் கொண்டவை; பழம், திராட்சை, ஒலிவ் போன்ற பயிர்கள் வளமாக விளைகின்றன.

இது சிசிலியின் முக்கிய சுற்றுலா இடமாகவும் உள்ளது. ஸ்கீயிங் (Skiing), ஹைக்கிங் (Hiking) போன்ற சாகச விளையாட்டுகளுக்கும் பிரபலமான இடம்.

புராணம் & கலாச்சாரம்

பண்டைய கிரேக்க, ரோம பூர்வக் கதைகளில் எட்னா முக்கிய பங்கு வகிக்கிறது.

கிரேக்க புராணத்தில்: தீவிர ஜெயன்ட் டைஃபான் (Typhon) எட்னா மலைக்குக் கீழே சிறை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரோமப் புராணத்தில் எட்னா, எரிமலைத் தெய்வமான வுல்கன் (Vulcan) இன் உலோகம் உருக்கும் இடமாகக் கருதப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியத்தின் பொக்கிஷம் மைக்ரோ கீரைகள்: உடல் நலத்தின் புதிய அத்தியாயம்!
Europe's tallest volcano

மவுன்ட் எட்னா என்பது இயற்கையின் சக்தி, அழகு, ஆபத்து ஆகியவற்றை ஒரே நேரத்தில் காட்டும் ஒரு உயிர்ப்பும் அசரீரமும் நிறைந்த எரிமலை. மனிதர்களின் வாழ்வில் சவாலும் வாய்ப்பும் அளித்த இந்த மலை, அறிவியல் ஆராய்ச்சிக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும், கலாச்சார கற்பனைக்கும் இன்று வரை முக்கிய பங்காற்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com