

உலகத்தில் எத்தனையோ பாம்பினங்கள் உள்ளது. அதிக விஷமுள்ள கிங் கோப்ராவில் தொடங்கி, நம் வீட்டுக்கு பக்கத்தில் சுற்றி திரியும் விஷம் இல்லாத ஓலை பாம்புகள் வரை.. இப்படி ஒவ்வொரு பாம்புகளும், அதற்கென ஒரு சில தனி பண்புகளை கொண்டுள்ளன.
இந்த வரிசையில் ஒரு சில பாம்புகள், ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு பறப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அல்லது பாம்புகள் பறப்பதை செய்திகளிலோ, போனிலோ பார்த்திருப்போம். இந்த வகை பாம்புகள் உண்மையிலேயே பறக்குமா? அதற்கு இறக்கைகள் இருக்கிறதா? எப்படி அதனால் பறக்க முடிகிறது? ஒரு பாம்பு எப்படி பறக்கும்? என்று பல கேள்விகள் நமக்குள் எழும்.?
பாம்புகள் உண்மையிலேயே பறக்குமா என்ற கேள்விக்கு? விடையை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகில் இன்று வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்பினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பறக்கும் வகையைச் சேர்ந்த பாம்பினங்கள் ஒரு சில பகுதிகளிலேயே காணப்படுகின்றன.
பறக்கும் பாம்புகள் தென்படும் இடங்கள்;
பறக்கும் பாம்புகள்; முக்கியமாக, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.குறிப்பாக இந்தியா (மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி) மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அதிக அளவில் தென்படுகின்றன. இவை மரங்கள் நிறைந்த அடர்ந்த காடுகளில் வாழ்கின்றன.
Chrysopelea ornata ornata என்ற பாம்பினம், தென்மேற்கு இந்திய பகுதிகளில் காணப்படுகின்றன.
Ornatissima Chrysopelea ornata என்ற பாம்பினம், வெர்னர் வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியா, நேபால், வங்காளம் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
Chrysopelea ornata sinhaley என்ற பாம்பினங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.
பாம்புகள்; பறக்குமா? பறக்காதா?
இந்த வகையான பாம்புகள் உண்மையிலேயே பறப்பதில்லை. இதற்கு இறக்கைகளும் கிடையாது. அதற்கு மாறாக, இந்த வகை பாம்புகள் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு தாவுகின்றன.
பூச்சிகள், சிறிய பறவைகள், பல்லிகள் போன்றவைகளை பிடிப்பதற்காக பெரும்பாலும் இந்த வகையான பாம்புகள் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவுகின்றன. அதுமட்டுமில்லாமல், தனது இருப்பிடத்தை அடையவும் ஒரு மரத்திலிருந்து, இன்னொரு மரத்திற்கு தாவுகின்றன. ஒரு சில நேரம் பெரிய அச்சுறுத்தலான விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் தாவுகின்றன.
இப்பாம்புகள் பொதுவாக பச்சை நிறம் கொண்டதாகவும், அரிதாக கருப்பு குறுக்கு கோடுகளும், மஞ்சள், சிவப்பு நிறம் கலந்த உடல் தோற்றத்தை கொண்டிருக்கும். இதன் உடல் மெலிந்து வழவழப்பான செதில்களுடன் இருக்கும். இதற்கு சுருங்கிய கழுத்தும், மழுங்கிய மூக்கும் பெரிய கண்களும், தட்டையான தலையையும் கொண்டிருக்கும்.
இவ்வகை பாம்புகள், 11.5cm முதல் 130cm வரை நீளம் கொண்டவை.
இந்த வகையான பாம்புகள் பெரும்பாலும் முற்றிலும் விஷமற்றதாகவே காணப்படுகின்றன.
இந்த பாம்புகள், விலா எலும்புகளை தட்டையாக்கி காற்றில் சறுக்கி செல்லும் ஒரு தனித்த பண்புகளை கொண்டுள்ளன. இந்த காட்சியை நாம், வெளியில் இருந்து பார்க்கும் பொழுது ஏதோ ஒரு பாம்பு காற்றில் பறப்பது போல் நமக்கு தெரிகிறது. எனவே உண்மையிலேயே, பாம்புகள் காற்றில் பறப்பதில்லை.