உலகின் ராட்சதப் பாம்பு அனகோண்டாவின் மிரள வைக்கும் ரகசியங்கள்!

Secrets of the Anaconda Snake
Anaconda Snake
Published on

னகோண்டாக்கள் உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாகும். பொதுவாக, நான்கு வகையான அனகோண்டா பாம்புகள் உள்ளன. பச்சை அனகோண்டா, மஞ்சள் அனகோண்டா, பொலிவியின் அனகோண்டா மற்றும் உடலில் கரும்புள்ளிகள் கொண்ட அனகோண்டா.

பச்சை அனகோண்டா 30 அடி நீளமும் 550 பவுண்டுகள் (250 கிலோ எடையும்) உள்ளதாக இருக்கும். இவை தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல மழைக்காடுகள், சதுப்பு நிலங்கள், குறிப்பாக அமேசான் காடுகளில் காணப்படுகின்றன. அனகோண்டா பாம்புகள் வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், தெற்கு அமெரிக்கா, பொலிவியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

அனகோண்டாக்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை. தங்களுடைய பெரும்பான்மையான நேரத்தை குளிர்ச்சியான நீரில் வாழ விரும்பும். நிலப்பரப்பை விட நீரில் எளிதாக நகர்ந்து செல்லக்கூடியவை.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் அரிய கவசம்: எறும்புண்ணி செதிலுக்குள் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
Secrets of the Anaconda Snake

இவற்றின் முக்கியமான உணவு மீன், பறவைகள், பாலூட்டிகள், புலியைப் போல இருக்கும் ஜாகுவார்கள், பறவை முட்டைகள், ஊர்வன, நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள், காட்டுப்பன்றிகள், மான், செம்மறியாடுகள் போன்றவற்றை உண்ணுகின்றன. மேலும், தங்களுடைய உடல் எடைக்கு சமமாக உள்ள இரையைக் கூட உண்ணும். இவை தங்கள் இரையை சுருட்டிக் கொல்லும். அதாவது அவற்றின் எலும்புகளை நசுக்காது மாறாக மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை நிறுத்தி அவற்றை கொல்லுகின்றன.

பதுங்கி இருந்து வேட்டையாடுவதில் வல்லமை பெற்றவை இந்த உயிரினங்கள். இவை தொலைவில் தங்கள் இரையைப் பார்த்தால் நீர் நிலைகளின் விளிம்பில் அசைவில்லாமல் காத்திருக்கும். அவை அருகில் வந்ததும் அவற்றை வளைத்து பிடித்துக் கொல்லும்.

இவை பொதுவாக தனித்து வாழும் உயிரினங்கள். இவை முட்டையிடுவதில்லை. அதற்கு மாறாக குட்டிகளைப் போடுகின்றன. ஒரு தடவை 20ல் இருந்து 40 குட்டி அனகோண்டாக்களை ஈனுகின்றன.

இதையும் படியுங்கள்:
முதல்முறை டிஎன்ஏ ஆய்வு: இந்தியாவில் இருக்கும் யானைகளின் உண்மையான எண்ணிக்கை இதுதான்!
Secrets of the Anaconda Snake

பெண் அனகோண்டாக்கள் ஆண் அனகோண்டாக்களை விட பெரிதாக இருக்கும். இந்தப் பாம்புகள் பொதுவாக 10லிருந்து 12 வருடங்கள் வரை உயிரோடு இருக்கும். 30 வருடங்கள் வரை கூட உயிரோடு இருக்கக்கூடிய பாம்புகள் உள்ளன.

மலை பாம்புகள் போன்று இவற்றுக்கு விஷம் கிடையாது. தங்களது இரையை வளைத்துப் பிடித்து அணைத்துத் திணரும் அளவிற்கு நசுக்கி பின்பு அவற்றை உண்ணுகின்றன.

இவை முதலைகளைப் போன்றே நீரில் சில நிமிடங்கள் மூச்சு பிடித்து வாழும் திறன் பெற்றவை. கண்கள் மற்றும் மூக்குப் பகுதியை மட்டும் நீரின் மேற்பரப்பில் வைத்துக் கொண்டு உடல் தண்ணீரில் அமிழ்ந்திருக்க, தங்கள் இரைக்காகக் காத்திருக்கும். இவை மனிதர்களை உண்பதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com