
காசிக்கட்டி (Kasikatti) என்பது கருங்காலி மரத்தின் தண்டு மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு பிசினாகும். இதுபல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது.
இதன் உருவவியல்
இந்தமரம் இலையுதிர் கூட்டமாக வளரும். மரங்கள் 15 மீட்டர் உயரம் வரை பட்டை, அடர் சாம்பல், பழுப்பு முதல் அடர் பழுப்பு நிறமாக கரடு முரடாக இருக்கும். சுமார் 1.3 சென்டிமீட்டர் தடிமண் கொண்டது. நீண்ட குறுகிய செவ்வக கோடுகளில் உரிந்து காணப்படும். உள்பட்டை பழுப்பு சிவப்பு கிளைகள், பழுப்பு நிறமாக இருக்கும்.
இலைகள் இருமுனை வடிவாகவும் மாற்று வடிவாகவும் இளைகோண வடிவான சற்று உள்நோக்கிய இலை கோண வடிவாகவும் இருக்கும். இதன் ஜோடியாக 3-1 மில்லி மீட்டர் நீளம் நேராக கொக்கி வடிவாக இருக்கும். எப்போதாவது பூக்கும் கிளைகளில் இது இல்லை.
மலர்கள் வெளி மஞ்சள் நிறத்தில் காணப்படாதவை. நீண்ட தனித்த அல்லது 2 - 4 மீ இலைக்கோண கூர்முனைகளை கொண்ட குழுக்களாகவும் இலைக் காம்புகள் வால் போன்றவையாக இருக்கும்.
இதன் பழம் 1- 6 செ.மீ அளவு காய் தட்டையாகவும், நேராக மடல் இல்லாமலும் இருக்கும். மேலும் இது குறிப்பாக ஆஸ்துமா, இருமல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
மருத்துவ குணம்
பற்களின் ஈறுகளுக்கு. காசுக்கட்டியைப் பொடி ஆக்கி பற்களை துலக்குக்குவதால் பல் ஈறுகளில் இரத்தம் வடிதல் கட்டுப்படுத்தப்படும். இது பற்களில் உள்ள ஈறுகளில் உள்ள கிருமிகைளைக் கொன்று ஈறுகளுக்கு வலு சேர்க்கும்.
பல் சொத்தை மற்றும் பல் வலியை குணப்படுத்த பயன்படுகிறது பற்களில் ஆடும் பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது பற்களின் எனாமல் இழப்பினால் ஏற்படும் கூச்சத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்தமாக பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
செரிமானத்திற்கு
உணவு தேக்கத்தை குறைத்து செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது உஷ்ணத்தால் ஏற்படும் பேதி சீதபேதியை கட்டுப்படுத்துகிறது. ரத்தப் போக்கை தடுக்கவும் உதவுகிறது. புதிய திசுக்களை உருவாக்க உதவுகிறது.
புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது நுரையீரலுக்கும் சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது. இதன் வேரை அரைத்து சாப்பிடுவதால் மூட்டுவாதம் குணமாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துகிறார்கள்.
இது திசுக்களைப் பாதுகாக்கிறது. மெட்டிகளின் வளர்ச்சியை தடுக்கிறது வலியை குறைக்கிறது.
இது ஆண்ட்டி பிரைடிக் பண்புகளைக் கொண்டுள்ளது.
உடலின் உட்புற பாகங்களில் உண்டாகும் புண்களை குணப்படுத்த காசிக்கட்டி பொடியுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட சரியாகும்.
குடற்பகுதியில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் கருமை நிற புழுக்களை அழிக்கக்கூடிய தன்மை இந்த காசு கட்டிக்கு உண்டு.
உணவு பழக்க வழக்கம், நேரம் தவறி உணவு உட்கொள்வது பெரும்பாலும் காரமான உணவுகளை உட்கொண்டால் குடலில் உண்டாகும் புண்களை குணப்படுத்துவதில் காசிக் கட்டி மிகவும் உதவியாக உள்ளது. இதனை மருத்துவர் ஆலோசனையின் பேரில் சாப்பிட வேண்டும்.