இந்த 4 பழ மரங்களை வளர்த்தால் ஆயுளுக்கும் வைட்டமின் சப்ளை இலவசம்!

Plants
Plants
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

வாழை:

  • வாழைமரம் எந்த இடத்தில் வைத்தாலும் அசராமல் வளரும்.

  • வாழை செடிகளுக்கு வெப்பம், சூரிய ஒளி மற்றும் வழக்கமான நீர்ப்பாசனம் தேவை.

  • உங்களிடம் குறைந்த இடம் இருந்தால், குள்ளமாக வளரக்கூடிய வாழை வகையை கூட தேர்ந்தெடுக்கலாம்.

  • வாழைப்பழங்கள் முழுவதுமாக மஞ்சள் நிறமாக இருந்தாலும் நல்ல பழுத்த நிலையில் இருக்கும் போது அறுவடை செய்வதுதான் நல்லது.

கொய்யா:

  • கொய்யா மரங்கள் பசுமையானவை, நறுமணமுள்ள வெள்ளை பூக்களை உற்பத்தி செய்கின்றன.

  • கொய்யா பழத்தில் ‘வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் Antioxidants’ நிறைந்துள்ளன.

  • கொய்யா மரங்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலையில் செழித்து வளரும்.

  • அவைகளுக்கு நன்கு வடிகட்டிய மண் மற்றும் வழக்கமான பராமரிப்பு இருந்தால் நன்றாக வளரும்.

  • கொய்யாவை முதலில் தொட்டியில் வைத்து அது வளர தொடங்கியப் பின்னர் நேரடியாக நிலத்தில் ஊன்றி வளர்க்கலாம்.

சீத்தாப்பழம்:

  • சீத்தாப்பழ மரங்கள் பளபளப்பான இலைகள் கொண்டவை. அதன் பழங்கள் இதய வடிவில் இருக்கும்.

  • கிரீம் போன்று கூழ் பதத்தில் இனிப்பு கூடி மிகுந்த சுவையுடன் இருக்கும்.

  • இந்த மரங்கள் வளர சூடான காலநிலை மற்றும் நன்கு வடிகட்டிய மண் தேவை.

  • வழக்கமான பராமரிப்பு செய்தால் நல்ல நிலையில் பழங்களை உற்பத்தி செய்யலாம்.

  • இளம் மரங்களை குளிர்காலங்களில் கொஞ்சம் பாதுகாக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் மிக அருகில் டால்பின்களைக் கண்டு ரசிக்க டாப் 7 இடங்கள்!
Plants

அத்தி:

  • அத்தி மரங்கள் பெரிய, மடல் கொண்ட இலைகள் மற்றும் தனித்துவமான பழங்களை உற்பத்தி செய்கின்றன.

  • அத்திப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

  • அவை மத்திய தரைக்கடல் காலநிலையில் (Mediterranean climates) செழித்து வளரும்.

பயன்கள்:

புதிய, சத்தான பழங்கள்:

வீட்டில் பழ மரங்கள் இருந்தால், உங்களால் இயற்கையான சுவையில் பழங்களை அனுபவிக்க முடியும். இது ஆரோக்கியமான உணவுக்கு பங்களிக்கிறது.

நிழல் மற்றும் குளிர்ச்சி:

பழ மரங்கள் இயற்கையான நிழல் தருகின்றன உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள வெப்பத்தைக் குறைக்கின்றன. அவை டிரன்ஸ்பிரேஷன்(Transpiration) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் காற்றை குளிர்விக்கின்றன.

இதையும் படியுங்கள்:
500 வருட சாபம்: பாம்புகளின் நாக்கு பிளவுபட்டதன் மர்மம்!
Plants

வனவிலங்கு வாழ்விடம்:

பழ மரங்கள் பறவைகள், தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளை ஈர்க்கின்றன. அவை சுற்றுச்சூழல் அமைப்புகளாக மாறி, வாழ்க்கை சுழற்சி பெருக்கத்தை ஆதரிக்கின்றன. மகரந்தச் சேர்க்கையை (Pollination) ஊக்குவிக்கின்றன.

நேர்மறை அதிர்வுகள்:

தோட்டம் மற்றும் பழ மரங்களைப் பராமரிப்பது ஒரு மன சிகிச்சையாக இருக்கும். இது உங்களை இயற்கையோடு இணைத்து சாதனை செய்தது போல் உணர்வை கொண்டு வருகிறது.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்
logo
Kalki Online
kalkionline.com