
உலகில் ஆரம்பத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவே ஆறுகளின் நடுவில் அணைகள் கட்டப்பட்டது. நைல் நதியின் குறுக்கே 5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கொஷயேஸ் அணை. உலகிலேயே முதன் முதலாக கட்டப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட அணை இதுதானாம். பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
சாட் எல்-கஃபாரா அணை என்பது பண்டைய எகிப்தில் கிமு 2700 இல் கட்டப்பட்ட ஒரு கொத்து ஈர்ப்பு அணை ஆகும். அதாவது கற்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய சுவர். இது 14 மீட்டர் உயரம் கொண்டது மற்றும் 111 மீட்டர் நீளமுடையது. இது கெய்ரோவிற்கு தெற்கே சுமார் 30 கிமீ தொலைவில் வாடி அல்-கராவில் உள்ளது. இது உலகின் இரண்டாவது பழமையான அணையாகக் கருதப்படுகிறது.
உலகின் மிகப்பழைய அணை, இன்னும் பயன்பாட்டில் உள்ள அணை, சிரியாவில் உள்ள குவாட்டினா தடுப்பணை (ஹோம்ஸ் ஏரி அணை) ஆகும். இது கிபி 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ரோமானியர்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. உலகின் மிகப்பழமையான அணை கல்லணை ஆகும், இது தமிழ்நாட்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இது 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது மற்றும் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
ஹிராக்குட் அணைதான் உலகிலேயே மிகவும் நீளமான அணை. இது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மகாநதி ஆற்றின் மீது அமைந்துள்ளது, மேலும் இதன் நீளம் 25.8 கிலோமீட்டர் ஆகும். உலகின் மிகப்பெரிய அணை என்பது மூன்று கோர்ஜஸ் அணை ஆகும், இது சீனாவில் உள்ளது. இது யாங்சே நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் பரானா நதி அணையான இடெய்ப்பு அணைதான் பெரிய அணைகளைக் கட்டுவதில் சீனா நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1950களில் இருந்து, அந்த நாடு 15 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள 22,000க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியுள்ளது. இது உலகில் உள்ள அனைத்து அணைகளிலும் கிட்டத்தட்ட பாதி ஆகும்.
இவற்றில் பெரும்பாலானவை சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள லங்காங், யாங்சே மற்றும் ஜின்ஷா போன்ற ஆறுகளில் அமைந்துள்ளன. இந்த அணைகள் முக்கியமாக மின்சார உற்பத்தி, வெள்ளக்கட்டுப்பாடு மற்றும் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக. கிழக்கு திபெத்திய பீடபூமியிலிருந்து சிச்சுவான் படுகைக்குள் பாயும் தாது நதியின் மீது அணை ஒன்றை சுவாலோங் பகுதியில் சீனா கட்டியுள்ளது. முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டதும், அணை 315 மீட்டர் (1,033 அடி) உயரத்தை எட்டும்.
மேலும் இது 100 மாடி வானளாவிய கட்டிடத்தை விட உயரமாக இருக்கும். இதன் மூலம் உலகின் தற்போதைய மிக உயரமான அணையான ஜின்பிங்- அணையைவிட 10 மீட்டர் விஞ்சி, அதிகாரப்பூர்வமாக சுவாலோங்கை பூமியிலேயே மிக உயரமான அணையாக மாற்றும்.
முதற்கட்ட நீர் நிரப்பலுக்குப் பிறகு, அணையின் நீர் மட்டம் 2,344 மீட்டரை எட்டியுள்ளதாக இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள நிறுவனமான பவர் சீனா கூறியுள்ளது. இது ஆற்று மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர் சேமிப்புத்திறன் 110 மில்லியன் கன மீட்டர் ஆகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நீர்மின் பணிகளைத் தொடங்கிய சீனா, அன்றிலிருந்து இன்றுவரை இதற்காக சுமார் 36 பில்லியன் யுவான் (தோராயமாக 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவு செய்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாண்டு கால கட்டுமானத்திற்குப் பிறகு, தற்போது அணையில் நீர் நிரப்பும் செயல்முறை தொடங்கியுள்ளது.
ஒருவழியாக அணையின் கட்டுமானம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளதையே இது உணர்த்துகிறது. 2025. மே 1 முதல், இந்த அணையில் முதல் முறையாக தண்ணீர் நிரம்பத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாக செயல்படத் தொடங்குவதற்கான முக்கிய படியாக இது உள்ளது. முழுமையான செயல்பாட்டிற்கு வந்த பிறகு, இந்த அணைதான் உலகின் மிக உயரமானதாக இருக்கும்.
அணை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அப்படியென்றால் இங்கிருந்து ஒவ்வொரு ஆண்டும் 7 பில்லியன் கிலோவாட் மணி நேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இது 3 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளின் வருடாந்திர மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது.