செயற்கை மழை எப்படி உருவாகிறது?

மேக விதைப்பு மூலம் செயற்கை மழை பெய்ய வைப்பது எப்படி? எனவும், வறட்சியை விரட்டவும், காற்று மாசை குறைக்கவும் இந்த தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது எனவும் தெரிந்துகொள்ளுங்கள்.
செயற்கை மழை | artificial rain
செயற்கை மழை | artificial rainImage credit: AI Image
Updated on

செயற்கை மழை என்பது மேக விதைப்பு (cloud seeding) எனப்படும் செயல் முறையாகும்.

மேகத்திலிருந்து மழை பொழிவை தூண்டும் செயலாகும். இது வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள உதவுகிறது.

இயற்கையாக மழைத்துளிகள் உருவாகத் தேவையான ஈரப்பதம் நிறைந்த மேகங்களில் சில்வர் அயோடைடு அல்லது உலர் பனி (dry ice) போன்ற ரசாயனங்களை விமானம் அல்லது தரைவழி ஜெனரேட்டர் மூலம் மேகங்களில் தெளிக்கின்றனர். இந்த ரசாயனங்கள் மேகங்களில் உள்ள நீராவியின் மீது ஒட்டிக்கொண்டு மழை துளிகளை உருவாக்கும். போதுமான நீர்த்துளிகள் ஒன்று சேர்ந்து கனமாகி மழை பெய்கிறது.

இது புதிதாக மேகங்களை உருவாக்கும் செயல் அல்ல. மேகங்களிலிருந்து மழைத்துளிகளை அதிகப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். இது ஒரு தொடர் முயற்சியாகும். மழை பெய்யக்கூடிய உத்திகள் கண்காணிப்பது, திறனாய்வு செய்வது போன்ற வழிமுறைகள் அடங்கியது.

செயற்கை மழை என்பது செயற்கையாக மேகத்தை உருவாக்கி மழை பெய்வது அல்ல. நாம் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கிற இடத்துக்கு மேல் வேதிப்பொருட்களை தூவி மழை மழைமேகத்தை உண்டு பண்ணி மழை பெய்யவைப்பதாகும். இதைத்தான் cloud seeding மேக விதைப்பு என்று சொல்கின்றனர்

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த முறை செயல்பட்டு வருகிறது. அரபு நாடுகளில் வருடத்திற்கு 150 முதல் 200 முறை இந்த முறை பின்பற்றப்படுகிறது. அரபு நாடுகளில் வருடத்திற்கு ஒருமுறை மழை பெய்தாலே ஆச்சரியம் தான். இப்போது தலை கீழ் மாற்றம் அடைந்துள்ளது.

செயற்கை மழை | artificial rain
செயற்கை மழை | artificial rainImage credit: AI Image

சில்வர் அயோடைடு, திட கார்பன் டை ஆக்சைடு, சோடியம் குளோரைடு, திரவ ப்ரோபைன் ஆகியவை மேகங்கள் மீது தூவப்படும்.

விமானம் மற்றும் சிறிய ரக ராக்கெட் மூலம் இந்த செயல் நடைபெறுகிறது.

அமெரிக்க வேதியியல் நிபுணர் ஜோசப் ஸ்ஷேபர் என்பவர் இதை முதன் முதலில் கண்டுபிடித்தார். 1946 இல் வெற்றி கிடைத்தது. அதன் பின்னர் 1960 இல் முழுமையான வெற்றி கிடைத்தது எனலாம்.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் பூமி: நாம் சுவாசிக்கும் பிராணவாயுவுக்கு ஆபத்து வருகிறதா?
செயற்கை மழை | artificial rain

டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400 முதல் 500 வரை உள்ளது. ஜீரோ முதல் 50 வரை இருப்பது தான் நலம். சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை குறைக்க செயற்கை மழை திட்டத்தை டெல்லி அரசு கையில் எடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்று செயற்கை மழை உருவாக்க டெல்லி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேகங்கள் இயற்கையாக ஒன்று கூடி பெய்வதுதான் இயற்கை மழையாகும். இந்த வேதிப்பொருட்கள் மூலம் மேகத்தில் உள்ள நீர் துளிகள் உறைய வைக்கப்படுகின்றன. பின்னர் அவை பனிக்கட்டிகளாக மாறி ஒன்றோடு ஒன்று உரசி பனித்துளியாகவும் மழைத்துளியாகவும் பொழிகிறது

சில இடங்களில் மேகங்களின் மீது மின் அதிர்வு கொடுத்து மழை உருவாக்கம் நடைபெறுகிறது. இந்த முறையை அரபு நாடுகள் 2021 முதல் செயல்படுத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்:
பாலைவனத்தில் விளைந்த அதிசயம்: இஸ்ரேலின் வேளாண் புரட்சி நமக்குச் சொல்லும் பாடம்!
செயற்கை மழை | artificial rain

வறட்சி தவிர, காட்டுத்தீ, தாங்க முடியாத வெப்பம்... இவற்றை எதிர்கொள்ள இந்தத் திட்டம் பயன்படுகிறது.

பெரிய நிலப்பகுதியில் மழை பெய்யும் போது சுற்றுச்சூழல் மாசு தானாகவே குறைந்து விடும். இதுவரை 50 நாடுகள் இந்த முறையை செயல்படுத்தி வருகின்றன. 1984 இல் தமிழகத்தில் இதை சோதனை செய்து பார்த்தார்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை உருவாக்க முடியும். மேலும், வறட்சி காலங்களிலும், மாசடைந்த சூழலிலும் கூட இயற்கையைச் சீரமைக்க மனித அறிவியலால் எப்படி உதவ முடியும் என்ற நம்பிக்கையை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com