
மண்ணுக்கான நீரை உறிஞ்சி குளிர்ச்சியை தக்க வைக்கும் தன்மை மண் தொட்டிகளுக்கு உண்டு என்பதால் செடிகளின் பசுமைக்கு அது உத்தரவாதம் அளிக்கவும்.
இப்போது மண் தொட்டி நிறத்திலேயே பிளாஸ்டிக் தட்டுகள் கிடைக்கின்றன. அதன் மேல் தொட்டி வைத்தால் தரை பாழாகாது. தவிர மொட்டை மாடிக்கு ஏற்ற சிமெண்ட் தொட்டி, 'யுவி ட்ரீட்' செய்த செடி வளர்க்கும் பைகளும் கிடைக்கின்றன. தேங்காய் மட்டை, மண்புழு உரம், மூடியில் துளை இட்டு சிறிய பெட் பாட்டில் போன்றவற்றை ரெடி செய்த பிறகு விதைகளை அருகில் உள்ள நர்சரி, அரசு தோட்டக்கலை விற்பனை இடங்களில் வாங்கலாம்.
எங்கு அமைக்கலாம்
கிச்சன், மொட்டை மாடி, பால்கனி, இரும்பு ஸ்டாண்ட் படிக்கட்டு என்று எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். 'யுவி ட்ரீட்டட் பிளாஸ்டிக் பேக்' பிரச்சனைக்கு சிறந்த மாற்று. செடிகள் வளர்ப்பதற்காகவே தயாரிக்கப்படும் இந்த பைகள் புற ஊதாக் கதிர்களைத் தாங்கி வெயிலிலும், மழையிலும் அயராது உழைக்கும். நமக்கு தேவையான நீளம், அகலம் உயரத்திலேயே இவ்வகை பைகளை வாங்க முடியும். இதில் களை வராது நீரின் தேவையும் குறைவு.
என்னென்ன செடிகள் வைக்கலாம்
மொட்டை மாடி சுவரின் மேல் வைக்கக்கூடிய பைகளில் கொத்தமல்லி முதல் பூச்செடிகள் வரை வளர்க்கலாம். நீளமான பைகளின் கீழ் அடுக்குகளில் மண்புழு உரம் தயாரிக்கலாம். மேலே கீரை விதைக்கலாம். பெரிய பைகளில் சிறிய மரங்களை கூட வளர்க்க முடியும் .
உதாரணமாக - முருங்கை. ஒரு மரத்தையே எங்கு வேண்டுமானாலும் மாற்ற வைக்கும் வசதியும் இதில் உண்டு. பால்கனியில் கீரை வளர்ப்பதற்கென்று சிறிய பயிர்கள் கிடைக்கின்றன. அடுக்கு முறையில் கீரை வளர்க்கும் பெரிய பைகளும் உண்டு.
மண் மாற்று பயன்படுத்துங்கள்.
இந்தப் பைகளில் மண் குட்டு நிரப்புவதை விட 'மண் மாற்று' குட்டு வளர்க்கலாம். இது என்ன புதுசா ஒரு மண்? என்கிறீர்களா?
மண்ணை விட குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படுவதும் எடை குறைந்ததும் அதிக அளவு உரம் தேவைப்படாததுமான 'காயர் பித்து' போன்ற பலவித மண் மாற்றுப் பொருள்கள் உள்ளன.
முன்பு வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இவை இப்போது இந்தியாவிலும் பரவலாக கிடைக்கின்றன. இதனை உபயோகப் படுத்தினால் செடிகள் வளர்ந்து பூ பூத்து குலுங்கும். குப்பை யெல்லாம் உரமாகும். இந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதை விட மரக்குச்சிகள் பழைய கால் மிதிகள், தேங்காய் மட்டைகள், மண் புழு உரம் என்று கலவையாக நிரப்பலாம்.
பழைய கால் மிதிகளை உள்ளிடுவதின் மூலம் ஈரப்பதம் எப்போதும் இருக்கும். கால்மிதிகள் துணியால் ஆனவை என்பதால் அவை மக்கும் உரமாகி செடிகளுக்கு நல்ல விதைகள் முளைத்து துளிர் இலைகளை பார்த்து ரசிக்கும் தருணம் மிகவும் இன்பமயமானது.
வீட்டிலேயே அனைத்தும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீரை, மூலிகை செடிகள் என போட்டு பசுமையான சோலையாகவும், வீட்டுக்குத் தேவையானதை பயிரிட்டும் லாபம் பெறலாம்.