
லெமன் கிராஸ் என்பது ஒரு வகை புல் இனத்தைச் சேர்ந்த மூலிகை தாவரமாகும். இதன் தாவரப் பெயர் 'CYMBOGAN FLEX SUS' என்றும் 'GRAMINAE' என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.
எலுமிச்சை புல் பராமரிப்புகள் எதுவும் இல்லாமலேய காடுகளையும், மலைகளிலும் தானாக வளரக்கூடிய இது எல்லா வகையான மண் வகைகளிலும், சத்து குறைவான மண்களிலும் கூட வளரக்கூடியது. வீட்டிலும் தொட்டிகளிலும் வைத்துக் கூட வளர செய்யலாம்.
நறுமணம் உள்ளது
எலுமிச்சை கொஞ்சம் லெமனின் நறுமணமும் கொஞ்சம் இஞ்சி வாசனையும் கலந்ததுபோல் இருக்கும். அதனால்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் எலுமிச்சைப்புல் 'என்ற இஞ்சிப்புல் ' பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிலர் இதனை காமாட்சிப் புல் என்பர். இந்த லெமன் க்ராஸ் இலங்கை, இந்தியா, சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்டதாகும்.
மருத்துவ பயன்கள்
லெமன் கிராஸ் நல்ல செரிமானத்தை கொடுத்து பசியின்மையை போக்கும். இதில் பல வேதிப்பொருட்கள் உள்ளதால், மனச்சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.
இதன் தண்டுகளில் இருந்தும் மேல் உள்ள தோகையிலிருந்தும் எடுக்கப்படும். எண்ணெய் பலவித தோல் வியாதிகளுக்கும் தாய்ப்பால் சுரக்கவும் வலிகளை நீக்கவும் பயன்படுகிறது.
இதுகிருமி நாசினியாகவும் வாத நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
எலுமிச்சைப் புல் அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. இவற்றில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிக அளவில் உள்ளன. இந்த புல்லை டீ போட்டு தயாரித்து குடித்தால் நோய்கள் குணமாகும்.
பயன்கள்
எலுமிச்சைப் புல் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை குறைக்க வல்லது என கண்டறிந்துள்ளனர். இந்த புல்லை சிறிதாக நறுக்கி அடுப்பில் பாத்திரத்தில் நீர்சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். இதனை வடிகட்டி குடித்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்தும் கிடைக்கும்.
இந்தப் புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் முழுவதையும் குறைக்கவும் இந்த எலுமிச்சை டீ , இதயநோய்கள் வராமல் தடுக்கிறது.
ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 1 கப் எலுமிச்சை புல் ஜூஸ் அருந்துவதால் உடலில் உள்ள ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கிறது. உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் அளவும் அதிகரிக்கும். இரும்பு, மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.
எலுமிச்சை புல்லில் உள்ள சிட்ரஸானது வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு இது வெகுவாக உதவி புரிகிறது. இப்புல் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதை உட்கொள்வது உடலுக்கு அதிக நன்மை அளிக்கிறது. இந்த புல் டீயில் குறைந்த கலோரிகள் உள்ளதால் உடல் எடையை மிகவும் குறைக்கும். இந்தப் புல் சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
எலுமிச்சை பொறி நுண்ணுயிர் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் பண்புகளைக் கொண்டது. அதனால் நீங்கள் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயோடு சில புல் துளிகளை சேர்த்து கலந்து தோல் மற்றும் முடிகளில் தடவலாம்.