Hydroponics: மண் இல்லாத விவசாயம்.. இது நல்லா இருக்கே!

Hydroponics.
Hydroponics.

ஹைட்ரோபோனிக்ஸ் எனும் மண்ணில்லா விவசாயத்தின் பயன்கள்.

மரம், செடி, கொடி இப்படி எந்த வகை தாவரங்களாக இருந்தாலும் அது வளர்வதற்கு பிரதான தேவையாக இருப்பது மண். மண்ணில் இருக்கும் நியூட்ரையின்ஸ் மற்றும் மினரலுமே தாவரங்கள் வளர்வதற்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றன. இந்த நிலையில் மண் அற்ற ஹைட்ரோபோனிக்ஸ் என்ற நவீன தொழில்நுட்ப முறையில் விவசாயம் செய்ய தொடங்கியிருக்கின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள் குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் நிலவும் நாடுகளில் இந்த நவீன விவசாய முறை பெரிய அளவில் அவர்களுக்கு பயன்களை தரத் தொடங்கி இருக்கிறது.

ஹைட்ரோபோனிக்ஸ் திட்டத்தின் மூலம் தாவரத்திற்கு தேவையான மணலுக்கு மாற்றாக மணலில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தண்ணீர் வழியாக செலுத்தும் முறையாகும். ஒரு குடுவை ஒன்றை எடுத்துக் கொண்டு அவற்றின் மீது தாவரங்கள் படர்வதற்கு ஏற்றவாறு தேங்காய் நார்களை பயன்படுத்தி அதன் கீழே தண்ணீரை செலுத்தி அந்த தண்ணீரின் நியூட்ரினையும், மினரலையும் செலுத்தி தாவரங்களின் வேரில் படும்படி வளரச் செய்யும் முறையாகவும். இதன் மூலம் நிலத்தில் கிடைக்கும் சத்து தண்ணீர் வழியாகவே தாவரத்திற்கு சென்றடைகிறது. இதனால் செடி கொடிகள் வளரும் சூழல் உருவாகிறது.

மேலும் குறிப்பிட்ட மணலில் மட்டும் தான் ஒரு தாவரம் வளரும் என்ற நிலை இந்த புதிய நவீன ஹைட்ரோபோனிக்ஸ் திட்டத்தின் மூலம் முறியடிக்கப்படுகிறது. மேலும் 90% நீர் தேவையும் இதன் மூலம் குறைந்திருக்கிறது. மிக எளிமையான நடைமுறையாக இது இருப்பதால் மேலைநாட்டினர் பலரும் தங்கள் வீடுகளில் இந்த முறையை பின்பற்றி விவசாயம் செய்து வீடுகளுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கின்றனர். தற்போது இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இந்த வகை செயல்பாடு வணிக ரீதியான நடவடிக்கையாக மாறி இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மண்ணை மலடாக்கும் விவசாய முறை!
Hydroponics.

அதே சமயம் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறையில் தண்ணீரில் சரியான அளவு நியூட்ரைன்ஸ் மற்றும் மினரல்ஸ் செலுத்துவதை கண்காணித்தால் மட்டும் போதும், இதை வீட்டிற்குள்ளோ அல்லது மாடிகளிலோ அல்லது மாடித்தோட்டங்களாகவோ அமைத்துக் கொள்ள முடியும். மேலும் பூச்சித்தாக்குதல், கெமிக்கல் பயன்பாடு ஆகியவை இதன் மூலம் பெருமளவில் குறைந்து இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com