வெப்ப சலனம் காரணமாக மழை எப்படி வருகிறது தெரியுமா? 

Veppa Salanam.
Veppa Salanam.

வெயில் காலங்களில் சில நேரம் திடீரென மழை பொழிந்தால், வெப்ப சலனம் காரணமாக மழை பொழிகிறது என வானிலை ஆய்வு மையம் கூறுவதை கவனித்திருப்பீர்கள். அப்படி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். 

சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பம் நேரடியாக பூமிக்கு வருவதில்லை. அவை வெப்ப அலைகளாக பூமியால் உள்வாங்கப்பட்டு, வெப்பத்தை மீண்டும் வெளியிடுகிறது. இந்த செயல்முறையில் பூமியில் உள்ள காற்று சூடாகி அடர்த்தி குறைவதால், புவியீர்ப்பு விசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பிச் செல்லும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கும்போது, அது புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் மேலெழும்பிக் கொதிக்குமே அப்படித்தான். இந்த செயல்முறையை தான் வெப்ப சலனம் என்று கூறுவார்கள். 

பூமியின் மேல் பரப்பு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பாலைவனம், புல் தரை, நீர்நிலை என மாறுபட்டு இருப்பதால் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வெப்பம் இருக்காது. இதனால் காற்றும் வெவ்வேறு விதமாக சூடாகி மற்ற இடங்களுக்கும் பரவும். சில இடங்களில் காற்று சூடாகி மெதுவாக மேலெழும்புபோது குறைந்த அழுத்த மண்டலத்தில் இருக்கும் காற்று குளிர்வடைகிறது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவி திரவமாக மாறி மேகமாக உருவெடுக்கிறது. 

இந்த மேகங்கள் அனைத்தும் காற்றினால் ஒன்றாக திரட்டப்பட்டு, மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் ஒடுக்கப்பட்டு, மழையாக பூமியில் பொழிகிறது. இதைதான் வெப்ப சலனத்தினால் ஏற்படும் மழை என்று கூறுகிறார்கள். இப்படி மழைப்பொழிவு மட்டும் நடக்கவில்லை என்றால், இந்த பூமி எப்போதோ சூரியனின் தாக்கத்தால் பொசுங்கி இருக்கும். நீங்களும் நானும் ஸ்மார்ட் ஃபோனில் ஜாலியாக இந்த பதிவை படித்துக் கொண்டிருக்க மாட்டோம். 

இதையும் படியுங்கள்:
நமக்கு மழை அப்டேட் செல்லும் இந்திய வானிலை ஆய்வு துறையின் தந்தை யார் தெரியுமா?
Veppa Salanam.

ஆனால் இத்தகைய வெப்ப சலனத்தால் திடீரென பெய்யும் மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக வெயில் காலங்களில் அறுவடை சமயத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டால் அத்தனையும் நஷ்டமாகிவிடும். இப்போது கூட தென் மாவட்டங்களில் மித மிஞ்சிய மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்குக் காரணமாக சொல்லப்படுவதும் வெப்ப சலனம், மேலடுக்கு சுழற்சி போன்றவை தான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com