

இந்தியாவின் மொத்த கடற்கரையின் நீளம் 7516.6 கிலோ மீட்டர். இதில், பிரதான கடற்கரை நீளம் 5422.6 கிலோ மீட்டர். தீவு பிரதேசங்களின் கடற்கரை நீளம் 2094 கிலோ மீட்டர். கடற்கரைகளைக் கொண்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, டாமன் மற்றும் டையூ, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம். கடற்கரைகளைக் கொண்ட தீவு பிரதேசங்கள் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத் தீவுகள்.
குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்திற்கு அதன் விரிவான கடற்கரையை அரபிக் கடல் வழங்குகிறது. நாட்டின் மொத்த பிரதான கடற்கரையில் தோராயமாக 23 சதவிகிதமாக இருக்கும் குஜராத்தின் 1214.7 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை, அதை மிக நீளமான பிரதான கடற்கரையைக் கொண்ட மாநிலமாக ஆக்குகிறது. மொத்தத்தில் குஜராத் கடற்கரையில் 41 துறைமுகங்கள் அமைந்துள்ளன.
ஒரு பெரிய துறைமுகம் (காண்ட்லா), 11 இடைநிலை துறைமுகங்கள் மற்றும் 29 சிறிய துறைமுகங்கள். சரக்குகளின் அளவைப் பொறுத்தவரை, காண்ட்லா இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமாகும். காண்ட்லாவைத் தவிர, பிற முக்கியமான துறைமுகங்கள் நவ்லகி, போர்பந்தர், முந்த்ரா முதலியன.
ஆந்திரப் பிரதேசம் 974 கிலோ மீட்டர் மொத்த நீளத்துடன் இரண்டாவது மிக நீளமான நிலக் கடற்கரையைக் கொண்டுள்ளது. இதன் கடற்கரைப் பகுதி ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் இச்சாபுரம் முதல் நெல்லூர் மாவட்டத்தின் தடா வரை நீண்டுள்ளது. இவ்வளவு நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்தாலும், ஆந்திரப் பிரதேசத்தில் 12 துறைமுகங்கள் மட்டுமே உள்ளன. விசாகப்பட்டினம் கிழக்கு கடற்கரையின் முக்கிய துறைமுகமாகும். கிருஷ்ணப்பட்டினம் மாநிலத்தின் மற்றொரு முக்கிய துறைமுகமாகும். மச்சிலிப்பட்டினம், காக்கிநாடா மற்றும் கங்காவரம் ஆகியவை ஆந்திராவின் பிற துறைமுகங்கள்.
ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பாதை இல்மனைட், லியூகோக்சீன் மற்றும் மோனசைட் போன்ற கனரக கனிமங்களால் நிறைந்துள்ளது. மாநில கடற்கரையில் உள்ள கடற்கரை மணலில் 241 மில்லியன் டன் கனிம இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரகாசம், நெல்லூர் மற்றும் குண்டூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் சிலிக்கா மணல் இருப்புக்கள் காணப்படுகின்றன. மேலும், அவை வார்ப்பு மணல், சோடியம் சிலிக்கேட், பீங்கான் மற்றும் கண்ணாடி உற்பத்தி போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கர்னூல் மாவட்டத்தின் ஓர்வக்கலில் குவார்ட்சைட்டுகள் காணப்படுகின்றன.
ஆந்திர மாநில நெல்லூர் முதல் ஸ்ரீகாக்குளம் வரை உள்ள 974 கி.மீ. நீள கடற்கரைதான் அதிக கனிம வளங்கள் நிறைந்த கடற்கரை. இந்தியாவில் உள்ள 30 முதல் 35 சதவீத மோனோ சைட் தாது இருப்பது இங்குதான். வருடத்திற்கு 5000 கோடி வருவாய் தரும் கடற்கரையும் இதுதான். இந்த கடற்கரை மணலில் உள்ள மோனோ சைட்டில் அரிதான ஆக்சைடு மற்றும் 55 முதல் 60 சதவீதமும், 8 முதல் 10 சதவீதம் தேரியமும் உள்ளது.
906.9 கிலோ மீட்டர் நீள கடற்கரையுடன், தமிழ்நாடு மூன்றாவது பெரிய நிலப்பரப்பு கடற்கரை மாநிலமாகும். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் தாது மணல் அதிக அளவில் காணப்படுகிறது. இது சிர்கோனியம், டைட்டானியம், தோரியம், டங்ஸ்டன், தொழில்துறை கனிமங்கள், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் போன்றவற்றின் முக்கிய ஆதாரமாக இது விளங்குகிறது.
மாநிலத்தில் மொத்தம் 15 துறைமுகங்கள் இருந்தாலும், அவற்றில் மூன்று துறைமுகங்கள் முக்கிய துறைமுகங்கள். சென்னை, எண்ணூர், தூத்துக்குடி. சென்னை துறைமுகம் ஒரு செயற்கை துறைமுகம் மற்றும் நவசேவாவுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான கொள்கலன் மையமாகும். நாகப்பட்டினத்தில உள்ளது மற்றொரு முக்கியமான துறைமுகமாகும்.