ஒரு பறவையின் அழிவு எப்படி சுகாதார பேராபத்தாக மாறியது?

500 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளைப் கொண்ட நாட்டில் இந்த கழுகு தவிர்க்க முடியாத ஒரு சுகாதார சேவையை செய்கிறது.‌‌
Indian Vulture
Indian VultureAI Image
Updated on

கழுகு என்பது ஒரு கம்பீரமான பறவையாகும். புராண காலம் முதலே அது கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது.‌ ஆனால் மனிதர்கள் வாழ்வில் கழுகுகள் குறிப்பிட்ட பங்கை வகிப்பதாக அறியப்படுகிறது.‌ இந்தியாவில் கழுகளின் எண்ணிக்கையின் சரிவு மனித ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதையும், மேலும் லட்சக்கணக்கான உயிர்கள் இறக்க அது எவ்வாறு காரணமாக இருக்கும் என்பதையும் ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

பொருளாதார வல்லுனர்களின் ஆராய்ச்சி இந்தியாவில் கழுகுகள் அழிந்து வருவது மனித இறப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழி வகுத்தது என்று கூறுகிறது. 1990களில் நடுப்பகுதியில் இந்தியாவின் கழுகுகளில் முன் எப்போதும் இல்லாத அளவு சரிவைச் சந்தித்தது.‌ சில உயிரினங்களுக்கு 99.9% வரை எண்ணிக்கை குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். டிக்லோஃபெனாக்கினின் பரவலான பயன்பாட்டினால் இந்த சரிவு ஏற்பட்டது. இது கால்நடைகளுக்கும் கொடுக்கப்படும் வலி நிவாரணியாகும்.‌

இதையும் படியுங்கள்:
தேசியப் பறவையாக அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கும் வழுக்கை கழுகு!
Indian Vulture

இறந்த கால்நடைகளின் சடலங்களை கழுகுகள் சாப்பிட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இந்திய கழுகு டிப்ஸ் இண்டிகஸ் என்பது அசிபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய இரை பறவையாகும். சுமார் 1.96 முதல் 2.38 மீட்டர் வரை இருக்கும் இருண்ட நிறத்தில் பறக்கும் சிறகுகளுடன் தலை வெளிர் நிறமாக இருக்கும். கழுத்து மற்றும் தலை கீழே மூடப்பட்டிருக்கும். இது மற்ற கழுகுகளுடன் ஒப்பிடும்போது மிக அரிதானது. இது பிணங்களின் சதையைக் கிழிக்க கொக்கி போன்ற அமைப்பை கொண்டது‌.

இந்தியக் கழுகு (Indian Vulture) இயற்கை சுத்திகரிப்பாளராகும். இவை முக்கியமாக இறந்த விலங்குகளை உண்கின்றன. இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துவதன் மூலம் அவை சுற்றுச்சூழலில் முக்கிய பங்கை வகுக்கின்றன. இது நோய்கள் பரவுவதை தடுக்க உதவுகிறது. இந்திய கழுகுகள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. அவற்றின் இனம் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

இதையும் படியுங்கள்:
வானத்தில் இருந்து வரும் எமன்.. கற்பனை செய்ய முடியாத அளவு வலிமை கொண்ட ஆச்சரியமான பறவை! 
Indian Vulture

இந்த கழுகுகள் சவன்னாக்கள், புல்வெளிகள் மற்றும் வறண்ட பகுதிகளில் திறந்த நிலப்பரப்பையே விரும்புகின்றன‌. மலைகள், பாறைகள் மற்றும் இடிபாடுகளில் மட்டுமே கூடை கட்டுகின்றன. இந்த இனத்தின் இனப்பெருக்க காலம் மாறுபடும்.

ஆனால், பொதுவாக நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே வரும் ஒரு சமயத்தில் ஒரு முட்டை மட்டுமே இடுகிறது‌. பெற்றோர்கள் இருவருமே அடைகாப்பாளர்கள்.‌ ஐம்பது மில்லியனுக்கும் அதிகமாக ஒரு காலத்தில் இந்தியாவில் காணக் கூடிய பறவையாக இருந்தது.

1994ம் ஆண்டு கால்நடைகளுக்கு டக்ளோஃபனாக் அறிமுகப்படுத்திய பிறகு கழுகுகளின் எண்ணிக்கை குறைந்ததாக தெரிகிறது. கழுகுகளின் எண்ணிக்கை குறைந்ததால் மனித இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. மில்லியன் கணக்கான கால்நடைகளின் சடலங்களை அகற்றுவதன் மூலம் இந்தியாவின் சுற்றுச்சூழலை கழுகுகள் பாதுகாக்கின்றன. அவை அழிந்து போனது கடுமையான சுகாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. அழுகிய சடலங்கள் கவனிக்கப்படாமலும், நோய் பரவி நீர் ஆதாரங்கள் மாசுபடுவதையும் ஏற்படுத்தியது‌.

பொது சுகாதாரத்தை பராமரிப்பதில் கழுகுகள் கவனிக்கப்படாததை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. 500 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளைப் கொண்ட நாட்டில் இந்த கழுகு தவிர்க்க முடியாத ஒரு சுகாதார சேவையை செய்கிறது.‌‌ மனித இனங்களின் இழப்பின் விலையை கணக்கிடுவதன் மூலமாக சுற்றுச்சூழலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் உயிரினங்களுக்கு பாதுகாப்பை இந்த ஆய்வு விளக்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com