ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் விந்தை... கடலுக்குள் நடக்கும் இந்த ஆச்சரியத்தை நீங்களே பாருங்கள்!

Prawn Facts
Prawn Facts
Published on

நாம் வெறும் சுவையான உணவு என்று மட்டுமே நினைத்து ரசிக்கும் கடல் வாழ் உயிரினமான இறாலுக்குப் பின்னால், அறிவியலையே அதிரவைக்கும் பல ஆச்சரியங்கள் ஒளிந்திருக்கின்றன. பல்லாயிரம் முட்டைகளைக்கொண்ட ஒரு சிறிய ஜெல்லி போன்ற தொகுப்பிலிருந்து பல கிலோ கணக்கில் நமக்கு உணவு கிடைக்கிறது. பல கோடி வருடங்களைக் கடந்து வந்த இந்த உயிரினத்தின் விசித்திரமான உலகத்திற்குள் ஒரு சுவாரஸ்யமான ட்ரிப் போய் வருவோம் வாங்க.

உடல் அமைப்பும் விசித்திரங்களும்!

அமெரிக்கர்கள் ஒரு பெயரிலும், நாம் ஒரு பெயரிலும் இதை அழைத்தாலும், முட்டையிடும் விதத்தை வைத்து இவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். முட்டையைக் கடலில் அப்படியே விட்டுவிடும் ரகம் ஒன்று, தன் வயிற்றிலேயே முட்டைகளைச் சுமந்து வாலாலேயே விசிறி விட்டுப் பாதுகாக்கும் ரகம் மற்றொன்று.

பத்து கால்களைக் கொண்ட இந்த உயிரினத்திற்குத் தலையில் மூளை கிடையாது என்பது பலருக்கும் ஒரு புது செய்தியாக இருக்கும். நரம்பு முடிச்சுகள்தான் இவற்றுக்கு மூளையாக வேலை செய்கின்றன. மனிதர்களைப் போலச் சிவப்பு நிற ரத்தம் இல்லாமல், நீல நிறத்திலோ அல்லது நிறமே இல்லாமலோ இருக்கும். இவை தங்கள் கண்களை 360 டிகிரியிலும் சுழற்றி வேடிக்கை பார்க்கும் ஆற்றல் கொண்டவை.

பாலின மாற்றம்!

இதில் இருக்கும் இன்னொரு மிகப் பெரிய மேஜிக் இதன் பாலின மாற்றம்தான். பிறக்கும்போது ஆணாகப் பிறக்கும் சில இறால்கள், முட்டைகளைச் சுமக்கப் பெரிய வயிறு தேவைப்படுவதால் பின்னர் இயற்கையாகவே பெண்ணாக மாறிவிடும். சில நேரங்களில் ஆணும் பெண்ணுமாக ஒரே நேரத்தில் செயல்பட்டு இரண்டுமே கர்ப்பம் தரிக்கும் அதிசயங்களும் இங்கு சகஜம்.

இதையும் படியுங்கள்:
டல் அடிக்கும் கூந்தலை டாலடிக்கச் செய்யும் உணவுகள்!
Prawn Facts

துப்புரவுத் தொழிலாளியாகக் கடலைச் சுத்தப்படுத்தும் இவை செய்யும் சாகசங்கள் ஏராளம். பெரிய மீன்களின் வாய்க்குள் சென்று பற்களைச் சுத்தம் செய்யும் டாக்டர்கள் ஒருபுறம் இருக்க, ஹாலிவுட் பட ஹீரோக்கள் போல அதிகப்படியான வெப்பத்தையும் பயங்கரமான சத்தத்தையும் உருவாக்கி எதிரியைக் கொல்லும் இறால்களும் உண்டு. ப்ரூஸ் லீ போல மின்னல் வேகத்தில் குத்துவிடும் ரகங்களும், பல வருடங்கள் காய்ந்து கிடந்துவிட்டு ஒற்றைத் தண்ணீர் துளி பட்டதும் உயிர் பெறும் ரகங்களும் உண்மையாகவே இயற்கையின் பேரதிசயம்தான்.

பொருளாதாரம்!

உலக அளவில் பல பில்லியன் டாலர்கள் புரளும் ஒரு மாபெரும் வியாபாரமாக இந்தத் துறை விளங்குகிறது. இந்தியாவுக்கு மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய்களை இது அள்ளித் தருகிறது. இன்று நேற்றல்ல, சங்க காலத்திலேயே பாயும் அம்பின் வேகத்திற்கு இறாலின் நீச்சலை ஒப்பிட்டு நமது புலவர்கள் பாடியுள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
டைனோசர்கள் (Dinosaurs) அழிந்த நாள் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? 
Prawn Facts

டைனோசர்கள் தோன்றுவதற்குப் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பூமியில் பிறந்து, இயற்கை உருவாக்கிய பல மாபெரும் அழிவுகளை எல்லாம் சாதாரணமாகத்தாண்டி இன்றும் நிலைத்து நிற்கிறது இந்த உயிரினம். நாம் கடையில் எளிதாக வாங்கிச் சாப்பிடும் இந்தச் சாதாரண உணவுக்குப் பின்னால் இப்படி ஒரு பிரம்மாண்டமான சரித்திரம் மறைந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com