
மலைச்சிட்டான் பூங்குருவி என்பது இந்திய பறவைகளில் ஒன்றாகும். இது இந்தியாவில் காணப்படுகிற பூங்குருவி வகையைச் சேர்ந்தது. இந்திய மலைச்சிட்டான் (Indian blackbird, Turdus simillimus) இந்தியா மற்றும் இலங்கை பகுதிகளில் காணப்படுகிறது.
அகலமான கண் வளையங்களைக்கொண்ட சிறிய பறவை இனங்களில் நான்கு துணை இனங்கள் உள்ளன.simillimus, nigropileus, bourdilloni, spencei என 4 துணை இனங்கள் இந்திய துணைக் கண்டத்தில் காணப்படுகின்றன.
மலைச்சிட்டான் பூங்குருவி நீலகிரி, கொடைக்கானல், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. மிக இனிமையான குரல் உடையவை இவை. அளவில் சிறிய இவை 19 - 20 சென்டிமீட்டர் நீளம் உடையவை. அகலமான கண் வளையங்களைக் கொண்டவை.
ஆரஞ்சு நிறமான, பிரகாசமான அலகுகளைக்கொண்ட இவை நிலப்பகுதிகளில் வாழ்கின்றன. பூச்சிகள், தேன், பழங்கள், விதைகளை உணவாக உட்கொள்கின்றன.
இந்திய மலைச்சிட்டான், முன்பு சாதாரண மலைச்சிட்டானின் ஒரு துணை இனமாக கருதப்பட்டது. மலைச்சிட்டான் பறவைகளில் உலகம் முழுவதும் பல வகைகள் உள்ளன. இவை ஒரு சிறிய நிலவாழ் பறவை இனமாகும்.
இறக்கைகள் கொண்ட இரு கால்களை பறவை என்று கூறுவர். இறகுகளால் ஆன சிறகுகள் இருப்பதும், பறப்பதற்கு துணையாக காற்றறைகள் கொண்ட லேசான பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் சிறப்பாகும்.
மொத்தம் 9672 பறவை இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. விரல் நீளம் 5 சென்டிமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய பறவையான தாரிச்சிட்டு முதல் 9 அடி உயரம் உள்ள பெரிய தீக்கோழிவரை பறவைகள் பல அளவுகளில் உள்ளன.
பறவைகளில் மணிக்கு 160 கிலோமீட்டர் விரைவில் பறக்கும் இனமும் உண்டு. மறக்கமுடியாத சில பறவை இனங்களும் உண்டு.
இறக்கை இல்லாத கிவி போன்ற சிறிய வகை பறவைகளும் உண்டு. குயில் போன்று அழகாக பாடும் பறவை இனங்களும் உண்டு.
இவை ஆரஞ்சு நிற பிரகாசமான அலகுகளை கொண்டிருக்கின்றன. இவற்றின் உடல் நிறமானது அவை வசிக்கும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது. சில இடங்களில் தலை மற்றும் இறகுகள் கருப்பாகவும், வேறு சில இடங்களில் வெளிறிய நிறத்துடனும் காணப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், கிழக்கு தொடர்ச்சி மலையின் மிகச் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் மலைச்சிட்டான்களின் ஒருவகை காணப்படுகிறது.
இந்தியாவில் நான்கு வகையான மலைச்சிட்டான்கள் உள்ளதாக கூறப்படுகிறது.. இந்திய மலைச்சிட்டான் (Indian blackbird) இதற்கு முன்னர் சாதாரண மலைச்சிட்டானின் ஒரு துணை இனமாக கருதப்பட்டது. இவை இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது.
இந்திய மலைச்சிட்டான்களின் உயிரியல் பெயர் Turdus Simillimus.. கோத்தகிரி பகுதியிலும், சமீப காலமாக திருவண்ணாமலையார் மலைப்பகுதியிலும் மலைச்சிட்டான் பறவைகள் காணப்படுகின்றன.
பொதுவாக ஆயிரம் அடிக்கு மேல் உயரமான மலைப்பகுதிகளில் வசிக்கும் இந்த பறவைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் காணப்படும். குளிர்காலங்களில் இவை அரிதாக சில சமயம் நகர்ப்புறங்களிலும் காணப்படலாம்.