மனிதகுலத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த 'ஓநாய்' பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

Wolf
Wolf
Published on

ஓநாய்கள் உலகிலேயே மிகவும் அறிவார்ந்த மற்றும் கூட்டமாக வாழும் விலங்குகளில் ஒன்றாகும். அவற்றின் சமூக அமைப்பு, வேட்டையாடும் திறன், மற்றும் மனிதகுலத்துடனான வரலாற்றுத் தொடர்பு ஆகியவை மிகவும் ஆச்சரியமானவை. இந்த விலங்கைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்தப் பதிவில் காணலாம்.

1. ஓநாய்களின் கூட்டுக்குடும்ப அமைப்பு

ஓநாய்கள் கூட்டுக் குடும்பமாக வாழும் தன்மையுடையது. ஒரு குடும்பத்தில் 6 முதல் 10 ஓநாய்கள் இருக்கும். ஆனால் உணவு கிடைக்கும் அளவை பொறுத்து சில விதிவிலக்கான குழுக்களில் 30 உறுப்பினர்கள் வரை கூட இருக்கும். ஒரு ஓநாய் கூட்டம் என்பது பெரும்பாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டது. இதன் பெற்றோர் ஆல்ஃபாக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஓநாய்கள் இணைந்து வேட்டையாடும். பெரிய விலங்குகளை சமாளிப்பதற்கும், எல்லைகளை காப்பதற்கும், கூட்டத்தில் உள்ள இளம்  ஓநாய்களைப் பாதுகாப்பதற்கும் இந்த கூட்டுறவு முறை மிக முக்கியமானது கூட்டத்தின் ஒழுங்கையும் ஒற்றுமையையும் ஆல்ஃபா ஜோடி நிர்வகிக்கிறது. சுமார் இரண்டு அல்லது மூன்று வயது ஓநாய்கள் புதிய வாழ்க்கையை தொடங்கவோ அல்லது புதிய கூட்டங்களில் இணையவோ குடும்பக் குழுவை விட்டு வெளியேறுகின்றன.

உடலமைப்பு!

சாம்பல்நிற ஓநாய் மற்றும் செந்நாய் என இரண்டு வகைகள் உள்ளன. செந்நாய் இனம் பெரும்பாலும் காடுகளில் அற்றுப்போய்விட்டதாகக் கருதப்படுகிறது. முழுமையாக வளர்ந்த சாம்பல்நிற ஓநாய் சுமார் 35 முதல் 55 கிலோகிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். 1.5 முதல் 2 மீட்டர் நீளமும், 75 சென்டிமீட்டர் உயரமும் கொண்டவை. ஓநாய்கள் சக்தி வாய்ந்த வேட்டைக்காரர்கள். இதற்கு அவற்றின் உடல் அமைப்பு பெருமளவு உதவுகிறது.

தனித்துவமான ஊளைச்சத்தம்

 ஓநாய்கள் மிகவும் சகிப்புத்தன்மையுடன் பல மைல்கள் தூரம் ஓடக்கூடியவை. ஓநாய்களின் மிகவும் பிரபலமான தொடர்பு முறை ஊளையிடுதல். தனது கூட்டத்தின் உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காக ஊளையிடுகின்றன மற்ற ஓநாய் குழுக்களுக்கு தங்கள் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என எச்சரிக்கை விடுவதற்காகவும் இவற்றின் ஊளைச் சத்தம் பயன்படுகிறது. பாசம் மற்றும் பிணைப்பை காட்டுவதற்காகவும் இவை பயன்படுகின்றன. ஒரு ஓநாயின் ஊளைச் சத்தம் சுமார் 16 கிலோமீட்டர் வரை கேட்கும் திறன் கொண்டது

இதையும் படியுங்கள்:
சிங்க வேட்டை வெறும் கௌரவத்துக்காக மட்டுமல்ல; பணத்துக்காகவும்தான்!
Wolf

மனிதர்களுக்கும் ஓநாய்களுக்குமான தொடர்பு

மனிதகுலத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த மிக முக்கியமான "கூட்டாளி" ஓநாய் தான். ஓநாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான பிணைப்பு 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஓநாய்கள் வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டன. மனிதர்கள் அளிக்கும் எஞ்சிய உணவுத் துணுக்குகளை உண்டு வாழ்ந்து வந்தன. அவை மனிதர்களுக்கு வேட்டையாட உதவியதுடன், மனிதர்களுக்கு ஏற்படும் அபாயங்களை எச்சரிக்கை மூலம் தெரிவிக்கவும் உதவின.

ஆனால் மனிதர்கள் கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியபோது ஓநாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஆன உறவு மோதலாக மாறியது. வளர்ப்பு ஆடுகள் மாடுகள் போன்றவற்றை அவை இரையாக்கிக் கொண்டதால் ஓநாய்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டன. உலகின் பல பகுதிகளில் ஓநாய்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்திய வனப்பகுதிகளில் தற்போது சுமார் 2000 முதல் 3000 வரை எண்ணிகையிலான ஓநாய்களே இருக்கின்றன. ஆனாலும் பல பூர்வீக கலாச்சாரங்களில் ஓநாய்கள் வலிமை ஞானம் மற்றும் ஆன்மீக வழிகாட்டியாக இன்றும் மதிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
கமல்ஹாசன் பிறந்த நாள் - புதையல் வேட்டை!
Wolf

ஒரு காலத்தில் வேட்டைத் தோழனாகவும் ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்த இந்த இனம், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பின் காரணமாக மனித சமூகத்தால் ஒரு வில்லனாக மாற்றப்பட்டது. இன்று, மனிதர்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை மீண்டும் அங்கீகரித்து, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com