பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature - Red List) செம்பட்டியல் பற்றித் தெரியுமா?

IUCN red list
IUCN red list
Published on

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு, இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கான சவால்களை உலகம் எதிர்கொள்ளவும் உதவுவதே இந்த அமைப்பின் நோக்கமாக இருக்கிறது. சூழலியல் பாதுகாப்பு, நிரந்தர மேம்பாட்டை முன்னிறுத்தி தொழிற்படுவதில் இவ்வமைப்பே முன்னணியில் இருக்கின்றது.

உலகளாவியச் சூழலியல் வலை அமைப்பில், 1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வொன்றியமே முதலாவதும், பெரியதுமாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் செனிவா நகருக்கு அண்மையாக உள்ள கிலான்டு பகுதியில் தலைமைச் செயலகம் கொண்டிருக்கும் இவ்வமைப்பு 140 நாடுகளில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட அமைப்புக்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த உறுப்பினர்களில், உலகெங்கும் 83 மாநிலங்கள், 108 அரசின் அமைப்புகள், 766 அரசு சாராச் சங்கங்கள், 81 சர்வதேச அமைப்புகள் மற்றும் சுமார் 11,000 துறை வல்லுநர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இவ்வனைவரையும் ஒருங்கிணைத்து உலகின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை இவ்வமைப்பு எடுத்து வருகிறது.

இந்த அமைப்பு, ஆண்டுதோறும் செம்பட்டியல் (Red List) என்ற பெயரில் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சூழியல் தரத்திற்கேற்ப அவற்றின் காப்பு நிலையைத் தர வகைப்படுத்தி வெளியிடுகிறது. கீழே அத்தர வரிசை கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகவும் மகிழ்ச்சியான விலங்கு இதுதானாம்… இந்த மூஞ்சிய பாருங்களேன்!
IUCN red list

1. Lower Risk (LR) – குறைந்த சூழ் இடருள்ள இனம்

2. Least Concern Species (LC) – தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்

3. Near Threatened Species (NC) – அச்சுறு நிலையை அண்மித்த இனம்

4. Conservation Dependent (CD) – காப்பு சார்ந்த இனம்

5. Vulnerable Species (VU) – அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம். அதாவது அழிவுறக்கூடியன; அழிவாய்ப்பு இனம்

6. Endangered Species (EN) – அருகிவிட்ட இனம்

7. Critically Endangered Species (CR) – மிக அருகிவிட்ட இனம்

8. Species Extinct in the Wild (EW) – இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்

9. Extinct Species (EX) – அற்றுவிட்ட இனம்; முற்றழிவுற்ற இனம்

10. Possibly Extinct (PE) – அனேகமாக அற்றுப்போயிருக்கக் கூடிய இனம். அற்றுப்போயிருக்கும் சாத்தியமுள்ள இனம்

11. Critically Imperiled (CI) – நிலைமாறி அழிவுற உள்ள இனம்

12. Imperiled (IM) அழிசரிவுற்ற இனம்

13. Apparently Secure (AS) – நிலைபெற்றுள்ளதாகக் கருதப்படும் இனம்

14. Secure (SE) – நிலைபெற்றுள்ள இனம்; நிலை ஊன்றியுள்ளது

15. Presumed Extinct (PE) – அற்றுவிட்டதாகக் கருதப்படும் இனம்

16. Nationally Critical (NC) – நாட்டளவில் அழியவுள்ள இனம்

17. Nationally Endangered (NE) – நாட்டளவில் அருகிவிட்ட இனம்

18. Nationally Vulnerable (NV) – நாட்டளவில் அழிவுறக்கூடியன; நாட்டளவில் அழிவாய்ப்புள்ள இனம்

19. Serious Decline (SD) – மிகவும் குறைந்த நிலை; வலுவான சரிவு; பெருஞ்சரிவுள்ள இனம்

20. Gradual Decline (CD) – சிறுகச்சிறுகக் குறையும் இனம்; மெதுவான சரிவு

21. Sparse (SP) – ஐது; ஐதாக உள்ள இனம்; விலத்தி

22. Range Restricted (RR) – வாழிடம் சுருக்கப்பட்ட இனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com