காஷ்மீரின் தனித்துவமான மலர்களும் பழ வகைகளும்!

kashmir flowers
kashmir flowers
Published on

ழகான காஷ்மீரில் விளையும் பழங்களும், பூக்கும் மலர்களும் தத்துவம் வாய்ந்தவை. காஷ்மீரின் பூக்கள் மற்றும் பழங்கள் அதன் வளமான மண், உருகும் இமயமலைப் பனி மற்றும் மிதமான காலநிலை காரணமாக செழித்து வளர்கின்றன.

காஷ்மீர் காட்டுப் பூக்களின் தனித்துவம்

காஷ்மீரில் உள்ள பல காட்டுப்பூக்கள், பழங்கள் இமயமலையில் தனித்துவம் வாய்ந்தவை. அதிக உயரத்தில் பெரும்பாலும் கடல் மட்டத்திலிருந்து 3600 லிருந்து 4000 மீட்டர் வரை செழித்து வளர்கின்றன. 

காஷ்மீரில் வசந்த காலத்திலும் கோடை காலத்திலும்தான்  காட்டுப் பூக்கள் நிறைய அதிக அளவில் பூக்கின்றன.  சரிவுகள் மற்றும் உயரமான புல்வெளிகள் கூட பல்வேறு காட்டுப்புகளால் மூடப்பட்டிருக்கும் ஒவ்வொன்றும் பள்ளத்தாக்கின் வண்ணமயமான தோற்றத்திற்கு பங்களிக்கின்றன. 

இவை காண்பதற்கு மட்டும் அழகாக இல்லாமல் மருத்துவப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளன. பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணி போன்ற பண்புகளை கொண்டுள்ளன. 

இமயமலை நீல பாப்பி மற்றும் காஷ்மீர் குங்குமப்பூ குரோக்கஸ் போன்ற அரிய தாவரங்கள் காஷ்மீரின் குறிப்பிட்ட காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்றவை. 

படேர்வா, குல்மார்க் போன்ற இடங்களில் பூக்கும் காட்டுப் பூக்கள் உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்ப்பவை. இயற்கை காட்சி பொருள்களாக மட்டுமல்லாமல் கலாச்சார மற்றும் பொருளாதார மதிப்பையும் அதிகரிக்கின்றன.

தனித்துவமான பூக்கள்;

1. அனிமோனாய்ட்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் Anemonoides sylvestris;

இது ஐந்து இதழ்கள் மற்றும் மஞ்சள் மகரந்தங்களைக் கொண்ட அழகான வெள்ளை பூக்கள் இதன் தனித்துவமாகும். இவை புல்வெளிகள் மற்றும் வனப் பகுதிகளில் பூக்கும். இதனுடைய வேர்கள் வலி நிவாரணையாக பயன்படுத்தப்படுகின்றன. 

2. காஷ்மீர் ஐரிஸ் Kashmir Iris :

ஊதா நிறத்தில் இருக்கும் இந்த அழகிய பூக்கள் மலைகளில் 4500 மீட்டர் உயரத்தில்  காணப்படுகின்றன. இதனுடைய வேர் மற்றும் தண்டுக்கிழங்கு ஆஸ்துமா மற்றும் வீக்கத்திற்கு நாட்டுப்புற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. 

இதையும் படியுங்கள்:
பாறையின் மீது உச்ச நிலைக் காடுகள்... எப்படி சாத்தியமாகிறது?
kashmir flowers

3. ஆல்பைன் அசேலியா Alpine Azalea;

இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிரீட வடிவத்தில் பூக்கும் பூக்கள் இவை. குட்டையான புதர் போன்ற வடிவ செடிகளில் காணப்படுகின்றன அதிக நச்சுத்தன்மை வாய்ந்தவை.

4. நாய்ப்பல் Dog Tooth Primrose

ஆல்பைன் புல்வெளிகளில் வளரும் மௌவிஷ் நீல நிறப்பூக்கள் ஆகும். உடலில் ஏற்படும் காயங்களுக்கு இவை சிறந்த மருந்தாக பயன்படுகின்றன. 

5. புல்வெளி பட்டர் கப் Meadow Buttercup; 

ஜலதோஷம் மற்றும் மார்பு வலிக்கு பயன்படுத்தப்படும் பளபளப்பான மஞ்சள் பூக்களை கொண்டவை பூக்கள் இவை. 

6. Tulip;

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டங்களில் ஒன்றான ஸ்ரீ நகரின் இந்திரா காந்தி தோட்டத்தில் பரவலாக பயிரிடப்படுகிறது.

7. காஷ்மீரி ரோஜா 

காஷ்மீர் பள்ளத்தாக்கின் தோட்டக்கலை பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் இந்த பூக்கள் ஷாலிமார் பாக் போன்ற முகலாய தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. 

8. தினார் மரப் பூக்கள்; 

இதனுடைய இலைகள் மிக முக்கியமானவை. இதனுடைய சுற்றுச்சூழல் முக்கியத்துவத்திற்காக காஷ்மீர் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது..

காஷ்மீரின்  சிறப்புப் பழங்கள்; 

ஆப்பிள்;

இந்தியாவின் ஆப்பிள் உற்பத்தியில் ஜம்மு & காஷ்மீர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இதன் மிருதுவான அமைப்பும் இனிப்பும் மிகவும் பிரசித்தி பெற்றவை. 

ஸ்ட்ராபெர்ரிகள்; 

ஆண்டுதோறும் இரண்டாயிரத்தில் இருந்து 2500 மெட்ரிக் டன் வரை ஸ்ட்ராபெரிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தான் பெறப்படுகின்றன இதன் மிதமான கால நிலையில் செழித்து வளர்கின்றன. 

kashmir friuts
kashmir friuts

செர்ரிகள்

பலவகையான செர்ரிகள் இங்கு மிகவும் பிரபலம். இனிப்பு மற்றும் புளிப்பு வகைகளில் உள்ளன. அவற்றின் சாறுகளுக்காக மிகவும் விரும்பப்படுகின்றன. 

பேரிக்காய்; 

இப்பகுதி முழுவதும் பழத்தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மென்மையான அமைப்பு மற்றும் வித்தியாசமான  சுவைக்காக விரும்பப்படுகிறது. 

மாதுளை;

அடர் சிவப்பு மாதுளைகள் இங்கு மிகவும் பிரசித்தம். பார்க்க வசீகரமாக இருப்பதுடன் உண்ணுவதற்கும் இனிப்பாக இருக்கும் 

பீச் ;

கோடை மாதங்களில் அறுவடை செய்யப்படும் சாறு மற்றும் மணம் நிறைந்த பழம் இது.

பாதாமி பழங்கள்

இந்தியாவின் முதன்மை பாதாமி  பழ உற்பத்தியில் முதலிடம் வகிப்பது ஜம்மு காஷ்மீரின் பிராந்தியத்தின் ஒரு பகுதியான லடாக்கில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com