

இயற்கை பல அற்புதங்களை தனக்குள் உள்ளடக்கி உள்ளது. அந்த இயற்கையின் போற்றி புகழ்ந்து ஆன்மீகம் வழியாக பேணி பாதுகாக்கும் நாடுகளில் இந்தியா முதன்மை இடத்தை பெற்றுள்ளது எனலாம். அந்த இயற்கை தந்த மலரின் வாயிலாக ஆன்மீகத்தை தரிசிக்கும் மனம் கொண்டவர்கள் இந்தியர்கள் என்பதாலேயே இந்த அதிசய மலர் நமது நாட்டில் அதிகம் காணப்படுகிறது. அது என்ன மலர் அதன் ஆச்சரியங்கள் என்ன என்பது பற்றி திரட்டிய தகவல்கள் இங்கு.
அதுதான் பெயரிலேயே கிருஷ்ணரை தாங்கி நிற்கும் கிருஷ்ண கமலம் பூ கிருஷ்ண கமலம் பூ (Krishna Kamalam / Passion Flower / Passiflora) என்பது அரிய அழகும் ஆன்மீக முக்கியத்துவமும் கொண்ட ஒரு மலரினமாக விளங்குகிறது.
இந்தியாவில் இம்மலர் “கிருஷ்ண கமலம்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதன் தாவரவியல் பெயர் (Passiflora incarnata ) பாசிஃப்ளோரா இன்கார்னாட்டா, ஊதா பேஷன் ஃப்ளவர் அல்லது மேபாப் என்று அழைக்கப் படுகிறது, Passifloraceae தாவர குடும்பத்தை சேர்ந்த இதன் தோற்றம் மத்திய & தென் அமெரிக்கா என்றாலும் இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
எளிதில் வளரக்கூடிய கொடியாக அதிக சூரிய ஒளி மற்றும் ஓரளவு ஈரப்பதம் இருந்தால் போதும். வேலி/கம்பி பிடித்து படரும் கொடி வகையில் மேல்விசை தாவரமாக (Climber) வளர்கிறது. பூக்கள் பெரும்பாலும் வறண்ட காலத்தில் அதிகம் மலரும் தன்மை கொண்டது.
இது கண்களைக் கவரும் அழகிய ஊதா நிறத்தில் பெரிய, நுணுக்கமான பூக்கள் மற்றும் உண்ணக்கூடிய பழங்களைக் கொண்டதாக உள்ளது. பல தோட்டங்களில் இதன் அழகியல் கவர்ச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
பல்வேறு நிலைகளில் வளரும் இந்த செடிக்கு மற்ற தாவரங்களை விடவும் குறைந்த பராமரிப்பு தேவை ஆனால் அதன் வேர்கள் தீவிரமாக பரவக்கூடிய தன்மை கொண்டதால் சற்று எச்சரிக்கை தேவை.
இந்த மலரின் பசுமை கலந்த வளைந்த கோடுகள் மற்றும் மையத் தோற்றம், கிருஷ்ணரின் சக்கரத்தைப் போன்று தருகிறது. சிலருக்கு இது பஞ்ச பாண்டவர்கள், கௌரவர்கள், சக்ரம் போன்ற அடையாளங்களையும் குறிக்கிறது.பூஜையில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படும் புனித மலர்களில் ஒன்றாகவும் உள்ளது.
கிருஷ்ண கமலம் தாவரம் சித்த, ஆயுர்வேதம், யூனானி மரபுகளில் பாரம்பரிய மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன்இலை மற்றும் பூச்சாறு மனஅமைதியை தரும் மனஅழுத்தம் மற்றும் பதட்டம் (Anxiety, Stress, Nervousness) குறைக்கும்.
Natural sedative effect கொண்டது. அதாவது தூக்கமின்மை (Insomnia) யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தாக உதவுகிறது. ரத்த நாளங்களை தளர்த்தும் பண்பு உள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தை (High BP)-ஐ இயற்கையாக கட்டுப்படுத்துகிறது.
மெல்லிய வலி ,தசைப் பிடிப்பு, தலைவலி போன்ற சிறு பாதிப்பை அகற்றி வலி நிவாரணமாக செயல்படுகிறது. குடல் பிரச்னை / அஜீரணம் போன்றவற்றைக் குறைத்து செரிமானத்திற்கு உதவும் குடல்பணி மேம்படுத்தும். இதிலுள்ளஆன்டி-ஆக்ஸிடென்ட் பண்பு நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தி உடல் சக்தியை பாதுகாக்கும்.
கஷாயம் பொடி சாறு போன்ற வகைகளில் இவற்றை உட்கொள்ளும் முன் மருத்துவர் ஆலோசனை அவசியம் தேவை.