

கடலின் கொந்தளிப்பான அலைகளைத் தடுத்து, நம் கரைகளைக் காக்கும் இயற்கையின் அரண்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உலகில் இரண்டாவது பெரிய கண்டல் காடான பிச்சாவரம் மற்றும் மாங்குரோவ் காடுகளின் வியக்க வைக்கும் ரகசியங்கள் இதோ! இந்த அதிசய சதுப்பு நிலங்களின் அதிசய உண்மைகளை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
கண்டல் தாவரங்கள் அல்லது அலையாத்தி தாவரங்கள் எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் தாவரங்கள் ஆகும்.
அலையாத்திக் காடுகள்:
இந்தவகை தாவரங்கள் செழித்து வளரும் இடங்களில் அவை உள்வரும் கடல் அலையை தடுத்து திருப்பி அனுப்புவதால் இத்தகைய மரங்கள் செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு எனப்படும்.
சதுப்பு நிலக் காடுகள்:
நிலமும் கடலும் சேரும் பகுதிகளில் சில இடங்கள் மண்ணும், நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அதனால் இவை வளரும் இடங்கள் சதுப்பு நிலக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
மண்ணரிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு:
அலையாத்தித் தாவரங்களில் கிட்டத்தட்ட 80 வேறுபட்ட இனங்கள் இருப்பதுடன், இவை ஆக்ஸிஜன் குறைவான மண்ணில் வளரும் தன்மை கொண்டிருப்பதாகவும், நில நடுக்கோட்டுக்கு அண்மையாக இருக்கும்.
வெப்ப மண்டலம், அயன அயல் மெண்டல் பகுதிகளிலேயே வளரும் என்று அறியப்படுகிறது. மிகவும் கடினமான சூழலை தாங்கும் தன்மை கொண்ட ஒரு சில இனங்கள் மட்டுமே மிதவெப்ப மண்டலத்தில் வாழும் தன்மை கொண்டிருக்கும்.
இவற்றில் சிறிய வகை செடி வகைகள் முதல் கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படும் மரங்களான 60 மீட்டர் உயரம் வரை வளரும் மரங்கள் வரை அடங்கும்.
இத்தாவரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங்களில் கடல் அலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பை தடுப்பதில் இது முக்கிய பங்கு வருகிறது.
தாவரங்களின் வகைகள்:
ஆங்கிலத்தில் இதை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன.
மலாய், எசப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறு மரங்கள் என பொருள்படும்.
மாங்கு என்ற சொல்லிலிருந்து மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.
தாவரங்கள் செறிந்து வளர்ந்திருக்கும் இடத்தில் நீரானது மரங்களை சூழ்ந்து காணப்படுவதால் வெள்ளம் நிறைந்திருக்கும் இடம் ஒன்று தோற்றம் தருவதால் வெள்ளக்காடு என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
முல்லையும், மருதமும், நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்பு நில வனங்கள் திகழ்கின்றன.
கண்டல் வனங்கள் இருக்கும் சதுப்பு நில பகுதியை கண்டல் காடுகள் எனவும் சதுப்பளக் காடுகள் எனவும் கூறலாம்.
இதை பொதுவாக கடலோர பகுதிகளில் காணப்படுவதுடன் இவை இருக்கும் இடங்களில் அலை அதிகமான கடல் நீரானது மரங்கள் இடையே சென்று அலைகள் குறையப் பெற்று மிக மெதுவாக நகரும் ஆறுகள் போன்ற நீர் நிலையாக இருப்பதனால் இவை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக்கப்படும்.
அலையாத்திக் காடுகள் உள்ள இடங்கள்:
இந்தையாவில் கங்கை ஆற்றில் படுகையில் உள்ள சுந்தரவனக்காடே உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடாகும்.
தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்தி காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும்.
தமிழகத்தில் உள்ள கண்டல் ஈர நிலங்களில் மிகப்பெரியவை.
சென்னையை ஒட்டி உள்ள பள்ளிக்கரணையில் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதி ஆகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காரங்குடியிலும் சதுப்பு நிலம் உள்ளது.
குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.
அலையாத்திக் காடுகள் பயன்கள்:
உவர் தன்மையைத் தாங்கும் திறன்: கடல் நீர் மற்றும் உவர் நிலங்களில் வளரும் தன்மை கொண்டது.
வேர்களின் அமைப்பு: அலைகளின் தாக்குதலிலிருந்து மரத்தை பாதுகாக்கும் வகையில் இவற்றின் வேர்கள் நிலத்திற்கு மேலே வளைந்து தாங்குவேர்களாகவும், சுவாசிக்கும் வேர்களாகவும் காணப்படுகின்றன.
உயிரின வகைப்பாடு: தாவரவியல் ரீதியாக இவை ரிசோஃவோரா போன்ற பல் வேறு குடும்பங்களைச் சேர்ந்தவை.
அலையாத்திக் காடுகள்: இவை செறிந்து வளரும் பகுதிகள் அலையாத்திக் காடுகள் அல்லது சதுப்புநிலக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன (உ.ம் பிச்சாவரம் காடுகள்)
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கடலின் ஆக்ரோஷமான அலைகள் மற்றும் புயல்களின் வேகத்தை குறைத்து கரையோர அரிப்பைத் தடுக்கின்றன.
பல கடல் வாழ் உயிரினங்களுக்கும் மீன்களுக்கும் இது இனப்பெருக்க தளமாக விளங்குகிறது.
மருத்துவ மற்றும் இதர பயன்கள்: இத்தாவரத்தின் இலை, பட்டை மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. மேலும் இதன் கட்டைகள், படகுகள் வீடுகள் கட்டவும் பயன்படுகின்றன.
சதுப்பு நிலக்காடுகளை வளர்ப்பதில் நாம் அக்கறை காட்டினால் இயற்கை பேரிடர்களிடருமிருந்து நாம் தப்பிக்கலாம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு, இயற்கை பேரிடர்களில் இருந்து உங்களையும் உங்கள் சுற்றுப்புறத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான தெளிவையும் விழிப்புணர்வையும் பெறுங்கள்.