சோம்பல் கரடிகளைப் (Sloth Bears) பற்றித் தெரிந்து கொள்வோமா?

Let's learn about Sloth Bears?
Sloth Bears
Published on

சோம்பல் கரடிகள் (Sloth Bears) ஒரே இடத்தில் பல மணிநேரம் அசையாமல் இருக்கும் தன்மை படைத்தவை. மேலும் இவற்றால் மிகமிக மெதுவாகவே நடக்க இயலும். இதன் உடல் இயக்கமும் மெதுவாகவே இருக்கும். இதனாலேயே இவை “சோம்பல் கரடிகள்” என்ற பெயரைப் பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் இவை Sloth Bears என்று அழைக்கப்படுகின்றன. இவை அசையாக் கரடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சோம்பல் கரடிகளைப் பற்றிய தகவல்களை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.

சோம்பல் கரடிகளின் அறிவியல் பெயர் Melursus ursinus ஆகும். சோம்பல் கரடிகள் இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டவை. இவை தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அரிய வகை கரடி இனத்தைச் சேர்ந்தவை. இந்தியாவில் பஞ்சாப் முதல் அருணாச்சல பிரதேசம் வரை இமயமலையின் வெளிப்புற எல்லையை ஒட்டிய வனப்பகுதிகளில் காணப்படுகின்றன.

சோம்பல் கரடிகளின் நகங்கள் அரிவாள் வடிவத்தை ஒத்திருக்கும். சோம்பல் கரடியின் ரோமங்கள் கருப்பு நிறத்தில் காணப்படும். இவற்றின் மார்பில் வெண்மை நிறத்தில் Y அல்லது V- வடிவ அடையாளம் காணப்படும். இவற்றின் முகவாயானது நீண்டு அமைந்திருக்கும். தாடைகள் சிறியதாகவும் நாசியானது பரந்தும் காணப்படும். இவற்றின் வால் சற்று நீண்டு காணப்படும். இவை அதிகபட்சமாக 18 சென்டிமீட்டர் அளவில் அமைந்திருக்கும். இவை ஐந்து முதல் ஆறு அடிகள் வரை வளர்கின்றன. இவை அதிகபட்சமாக முப்பது வருடங்கள் வரை வாழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
செடிகளுக்கு வேப்ப எண்ணெய் நல்லதா? பயன்படுத்துவது எப்படி?
Let's learn about Sloth Bears?

ஒரு விலங்கின் உணவானது எறும்புகள் அல்லது கரையான்கள் ஆக இருந்தால் அந்த வகை விலங்கினை “மைர்மெகோபாகஸ்” (Myrmecophagous) என்று அழைப்பார்கள். சோம்பல் கரடிகள் “மைர்மெகோபாகஸ்” ஆகும். சோம்பல் கரடிகள் முதன்மையாக கரையான்கள் மற்றும் எறும்புகளையே தங்கள் உணவாக உண்ணுகின்றன. சோம்பல் கரடிகள் கரையான்களை உறிஞ்சுவதற்காக வாயின் முன்பகுதியில் ஒரு பிரத்யே இடைவெளியைக் கொண்டுள்ளன. இவை சில சமயங்களில் பல்லிகள் மற்றும் பூச்சிகளை உண்ணுகின்றன.

குட்டிபோட குகை போன்ற பகுதிகளைத் தேர்வு செய்து அதற்குள் சென்றால் எட்டு வாரங்களுக்கு இவை உணவைத்தேடி எங்கும் செல்லுவதில்லை. சோம்பல் கரடிகள் பிறந்த தங்கள் குட்டிகளை ஒன்பது மாதங்கள் வரை முதுகில் சுமந்து செல்லும் இயல்புடையவை. தாயின் நீண்ட முடிகளைப் பிடித்தபடி இவை பயணிக்கின்றன. குட்டிகள் பிறந்து ஒரு மாதம் கழித்தே கண்களைத் திறந்து பார்க்கின்றன.

சோம்பல் கரடிகள் ஈரமான காடுகள், புல்வெளிகள் மற்றும் புதர்கள் சூழ்ந்த மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வசிப்பதை பெரிதும் விரும்புகின்றன. இவை விடியற்காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக சற்று சுறுசுறுப்பாக இருக்கும் இயல்புடையவை.

சோம்பல் கரடிகளின் வயிறானது மெதுவாக இயங்குவதால் இவை சாப்பிட்ட உணவானது முழுமையாக செரிமானம் ஆக ஒரு மாதம் கூடி பிடிக்கின்றன. இவற்றின் மெதுவாக நகரும் தன்மை காரணமாக இவை எளிதில் பிற விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன. இதனாலேயே இவை பெரும்பாலும் மரத்தின் மீது அசைவின்றி அமர்ந்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
கணவன் மனைவி ஒற்றுமை ஏற்பட படுக்கையறையில் இந்த செடிகளை வையுங்கள்!
Let's learn about Sloth Bears?

சோம்பல் கரடிகள் தங்களின் கழிவை வெளியேற்ற மரத்திலிருந்து கீழே இறங்குகின்றன. தங்களுடைய கழிவுகளை எப்போதும் ஒரே இடத்தில் மட்டுமே வெளியேற்றும் விநோத பழக்கமும் சோம்பல் கரடிகளுக்கு உள்ளன. இந்தியா மற்றும் இலங்கைக் காடுகளில் இருபதாயிரத்திற்கும் குறைவான சோம்பல் கரடிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com