கணவன் மனைவி ஒற்றுமை ஏற்பட படுக்கையறையில் இந்த செடிகளை வையுங்கள்!

Unity of husband and wife
plants in bedroom
Published on

தூங்கும்  அறையின் அலங்காரத்தில் கவனம் செலுத்தினால் கணவன் மனைவி இருவருக்குமான நல்லிணக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கையை ஈர்க்கும் கீழ்க்கண்ட தாவரங்களை  வைக்க நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். 

லில்லி செடி

வாஸ்து சாஸ்திரத்தின்படி கணவன் மனைவி தூங்கும் அறையில் இந்த செடிவைப்பது  மிகவும் நல்லதாகப் கருதப்படுகிறது.  இதனால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி அதிகரிக்கும். இது தவிர தூக்கமின்மை பிரச்னையும் தீரும்.

மணி ப்ளான்ட்

வாஸ்து சாஸ்திரத்தின்படி நீங்கள் தூங்கும் அறையில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க இந்த செடியை வைக்கலாம். ஆனால் இந்த செடியை நீங்கள்  தூங்கும் படுக்கைக்கு அருகிலோ அல்லது பக்கவாட்டு மேசையில் ஒரு போதும் வைக்கக் கூடாது அதற்கு பதிலாக ஏதாவது ஒரு மூலையில் வைக்கவேண்டும்.

பாம்பு செடி

வாஸ்து சாஸ்திரத்தின்படி இந்த செடி வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் தரும்  சிறந்த தாவரமாக  கருதப்படுகிறது. நீங்கள் தூங்கும் படுக்கையறையில் ஜன்னலுக்கு அருகிலோ அல்லது கதவின் ஓரத்திலோ இந்தச் செடியை வைக்கலாம்.  இது உங்கள் அறைக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது.

இதையும் படியுங்கள்:
செடிகளுக்கு வேப்ப எண்ணெய் நல்லதா? பயன்படுத்துவது எப்படி?
Unity of husband and wife

லாவண்டர் செடி

வாஸ்து சாத்திரம்படி இச்செடியை தூங்கும் அறையில் வைப்பது நல்லது. இந்த செடி பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்ல இதிலிருந்து வரும் நறுமணம்  உங்களது திருமண வாழ்க்கையில் அன்பை  நிரப்பும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடியை நீங்கள் தூங்கும் படுக்கை அறையின் விளிம்பிலோ  அல்லது படுக்கையின் பக்கவாட்டு மேசையிலோ வைக்கலாம். 

திருமண வாழ்க்கையை மேம்படுத்த சிவ வாஸ்து குறிப்புகள். 

உங்கள் படுக்கை அறை மஞ்சள், வெள்ளை, வெளிர்பச்சை, வெளிர் நீலம் வண்ணங்களில் இருக்கவேண்டும்.

இரும்புக் கட்டிலை பயன்படுத்துவதை விட மரக்கட்டிலைப் பயன்படுத்துவது  நல்லது. இது உங்களுக்கு நம்பிக்கையான எண்ணங்களை உருவாக்கும். 

சரியான நீள அகலத்துடன் சதுர அல்லது செவ்வக  படுக்கையை வாங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் இயற்கையின் "வனத்தோட்டக்காரர்" பிரேசிலியன் டாபிர்!
Unity of husband and wife

தூங்கும்போது தலையை தெற்கு நோக்கியும் கால்களை வடக்கு நோக்கியும் வைத்து  உறங்குங்கள். 

படுக்கை அறையில்  முட்செடி மற்றும் போன்சாய் செடிகளை வைக்க வேண்டாம். 

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் நிலத்தடி நீருக்காக தொட்டியை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டாம். இதனால் கணவன் மனைவி எண்ணங்கள் பாதிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com