நிகழ்கால நிம்மதியைக் கூட்டும் இயற்கைச் சூழலோடு கூடிய வாழ்க்கை!

Living in harmony with nature
Living in harmony with nature
Published on

றைந்த நம் முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் முதல் நம் அரசாங்கம் வரை அனைவரும் வலியுறுத்துவது, 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், அழிந்து வரும் காடுகளை மீட்டெடுப்போம்' என்னும் தாரக மந்திரமே. இதன் காரணம், மரங்கள் நமக்கு ஆக்ஸிஜன், காய், பழங்கள் தருகின்றன. பறவைகளுக்கு வாழுமிடமாக இருந்து உதவுகின்றன.

மரச்சாமான், மருந்துகள் தயாரிக்க, மழை பொழிய, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல வழிகளில் மரங்கள் நமக்கு உதவுகின்றன. ஒரு தனி மனிதன் இயற்கை நிறைந்த சூழலில் வாழும்போது என்னென்ன நன்மைகளைப் பெற முடிகிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
SRI முறை: வெறும் 1 லிட்டர் தண்ணீரிலா? ஒரு ஏக்கரில் 100 மூட்டை நெல் எடுக்கலாம்!
Living in harmony with nature

1. இயற்கையை சார்ந்து நாம் வாழும்போது இரத்த அழுத்தம் சமநிலை பெறுகிறது. இரத்தத்தில் உள்ள கார்ட்டிசால் என்னும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அளவு  குறைகிறது. இதயத் துடிப்பு சமநிலைப்பட்டு மனதிற்குள் அமைதி நிலவும். மனத் தெளிவு உண்டாகும்.

2. பசுமை நிறைந்த பார்க்கில் சிறிது தூரம் நடந்து வந்தால் உடலின் ‘ஃபீல் குட்’ கெமிக்கலானது டோபமைன் என்ற ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரிந்து மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

3. மரங்களின் கீழே தரையில் அமர்ந்து பணி செய்து உழைக்கும் உழைப்பாளிகளின் படைப்பாற்றல் திறனும் அறிவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான சூழலில் இருக்கையில் மூளை இலகு தன்மையுற்று புதுமையான கருத்துக்களை உருவாக்கும்.

4. இயற்கை சூழலில் இருக்கும்போது நம் மூளைக்குள் முடங்கிய நிலையிலிருந்த அறிவாற்றல் திறனை சுலபமாக நாம் மீட்டெடுக்க முடியும்.

5. தனி மனிதனாக மட்டுமின்றி, குழுவினருடன் மரங்கள் சூழ்ந்த இடத்தில் இருக்கையில் சமூக மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்து செயலாற்றும் திறனும் அதிகரிக்கும்.

6. நவீன கால வேலை பளுவின் அழுத்தத்தால் மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் மனிதன் சிறிது இடைவெளி எடுத்து மரங்கள் சூழ்ந்த இடம் ஒன்றில் சிறிது நேரத்தை செலவிட்டு விட்டு வந்தால் அவன் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படியுங்கள்:
காட்டுலதான் வசிப்போம்; ஆனா அசைவம் உண்ண மாட்டோம்!
Living in harmony with nature

7. மரங்கள் சூழ்ந்த இடங்களில் இருந்து உடற்பயிற்சி செய்வது இரட்டிப்பு நன்மை தரும். காடுகள் சூழ்ந்த மலையில் ஏறுவது, நடப்பது, ட்ரெக்கிங் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது ஆகியவை மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.

8. மரத்தின் கீழே அமர்ந்து பறவைகளின் 'கீச்' ஒலியைக் கேட்டபடி  மெடிடேஷன் செய்வது, இறந்த காலம் மற்றும் எதிர்காலத்தை மறந்து நிம்மதியுடன் நிகழ்கால நிம்மதியை மட்டும் உணர்ந்து அனுபவிக்க உதவும்.

9. ஒரு மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ளவும் உதவும். தன்னுடைய மன அமைப்பு, உணர்ச்சிகளின் செயலாக்கம், வாழ்க்கையில் சந்திக்க நேரும் தடைகளை விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு, முன்னேறுவது போன்ற பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும்.

மேற்கூறிய நன்மைகள் அனைத்தையும் நாமும் பெற மரங்கள் நிறைந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று சிறிது நேரத்தை செலவிடுவது சிறப்பாகும்.

ஜெயகாந்தி மகாதேவன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com