மடகாஸ்கர்: மாயாஜாலத் தீவும்... அழியக் கூடாத அதிசய மரங்களும்!

water-tree-facts
water-tree-facts
Updated on

லகிலேயே மூன்றாவது பெரிய தீவு இந்த மடகாஸ்கர். ஆனால் இது மற்ற தீவுகள்போல அல்ல. இங்கு இருக்கும் மிருகங்களும் மரங்களும் தாவர வகைகளும் ஒரு மாதிரியானவை. கண்டங்கள் உடைந்து போனபோது உண்டானதுதான் மடகாஸ்கர் என்று புவியியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். நாம் இப்போது இந்த தீவினில் இருக்கும் ஒரு விசித்திர மரத்தை பற்றி தெரிந்துகொள்வோம் .

இந்த மரத்தின் பெயர் பாவோபாப். இது மடகாஸ்கரில் மட்டுமே காணப்படும் மரம். இந்த மரத்தின் ஆறு வகை இனங்கள் மடகாஸ்கரில் உள்ளது.. இந்த மரத்தை தலை கீழ் மரங்கள் (UPSIDE DOWN TREES) என்று அழைக்கிறார்கள். காரணம் இதன் கிளைகள் வேர்களை போல தோற்ற மளிப்பதால்தான். சொன்னால் நம்ப மாட்டீர்கள் இந்த இந்த மரம் தன் உடம்பில் 100000 லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்குமாம். இதனை தண்ணீர் மரம் அதாவது water tree என்று அழைக்கப்படுகிறது.

இந்த மரத்திற்கு லோக்கலில் ஒரு பெயர் உண்டு. அதுதான் ரெனாலா ரெனியா லா. இதன் பொருள் காட்டின் தாயார் (Mother of Forest). இந்த மரத்தில் ஒரு ஓட்டை போட்டு குழாய் ஒன்றை பிக்ஸ் செய்தால் போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு தண்ணீர் கொட்டும். மடகாஸ்கரில் காட்டில் வாழும் மக்களுக்கு தாகம் ஏற்பட்டால் இந்த மரம்தான் தண்ணீர் பந்தல். இப்பேற்பட்ட மரம் தற்போது அழிந்து கொண்டு வருகிறது என்பதுதான் வருத்தமளிக்கும் விஷயம். காட்டு வாசிகளாக இருந்த உள்ளூர் மக்கள் தற்போது விவசாயம் செய்ய துவங்கியதால் இந்த மரங்கள் வெட்டி சாய்க்கபடுகின்றன.

ஆகவே இதை அரசாங்கம் பாதுகாக்க பட்ட மரம் என்று அறிவித்துள்ளது. மடகாஸ்கருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இந்த மரங்களை காண மொராண்டாவோ என்ற இடத்தில் இம்மரங்கள்நிறைந்த Avenue of Baobabs என்ற இடத்திற்கு சென்று குவிகிறார்கள். இந்த அதிசய மரமான பாவோபாப் தவிர மடகாஸ்கரில் OCTOPUS என்ற மரமும் மிகவும் பிரபலம்.

இதையும் படியுங்கள்:
மாடுகள் போலவே அசை போடும் அதிசயப் பறவை: ஹோயட்சின் (Hoatzin)!
water-tree-facts

மடகாஸ்கர் மக்கள் மட சாம்பிராணி ஆக இருந்த வரையில் இந்த மரங்கள் மேல் யாரும் கை வைக்கவில்லை. இப்போது இம்மக்கள் மாடர்னாகி விட்டனர். மடகாஸ்கர் காடுகள் அழிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. மரங்கள் தவிர மடகாஸ்கரில் மட்டுமே இருக்கும் FOSSAS மற்றும் லெமூர் போன்ற மிருகங்கள் நம்மை அசத்துகின்றன.

இங்கு வாழும் மனிதர்கள் ஆப்பிரிக்க வம்சாவழியினரும் இந்திய வம்சாவழியரும் கலந்து உருவானவர்கள்போல தோற்றமளிக்கிறார். மடகாஸ்கருக்கு போகவேண்டும் என்பதில்லை ஆஸ்கர் வென்ற மடகாஸ்கர் என்ற அற்புத அனிமேஷன் படத்தை பார்த்தாலே போதும்.இந்த படம் தான் மடகாஸ்கரை உலக சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாற்றி விட்டது. ஒரு மரகத தீவு (GEM Of AN ISLAND) அழைக்கப்பட்ட இந்த மாஜிக் தீவு அழிக்கப்பட்டு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com